நாள்தோறும் வாய்விட்டு தாராளமாக சிரிக்கவேண்டும். இப்படி சிரித்தால் இதயத்துக்கு நல்லது. ஏனென்றால் சிரிப்பு, உடல் பயிற்சி போல் ரத்த குழாய் மேலும் பயன்தரும் முறையில் இயங்குவதற்கு உதவும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சிரிப்புக்கு மாறாக மன சோர்வு வந்தால் இதய உறுப்பு பலவீனமாகும் ஆபத்தை அதிகரிக்கும். மனோ பலம் இல்லாது போனால் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று இன்னொரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புஃளோரிடா மாநிலத்தின் ஒர்ண்டோவில் அமைந்துள்ள இதய நோய் ஆய்வகத்தின் ஆண்டு கூட்டத்தில் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை அறிவித்தனர். உடல் பயிற்சி செய்யாமல் சிரிக்கவேண்டும் என்று இதற்கு பொருள் இல்லை. இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்ட 20 தொண்டர்களுக்கு மிரே என்பவரும் அவர்தம் சக பணியாளர்களும் இரண்டு வகை திரைப்படங்களை காண்பித்தனர்.
ஒரு பகுதியினருக்கு சிரிக்கக் கூடிய திரைப்படத்தையும், இன்னொரு பகுதியினருக்கும் மனசோர்வு தரும் திரைப்படத்தையும் காண்பித்தனர். திரைப்படத்தை கண்ட பின் அவர்களின் ரத்த்குழாய் இயங்கும் திறனை அளவீடு செய்தனர். தாராளமாக சிரித்தவரின் உடம்பில் ரத்தம் ஓடும் அளவு சராசரியாக 22 விழுக்காடு அதிகரித்தது. மனம் கட்டுப்படுத்தப்பட்டவரின் உடம்பில் ரத்தம் ஓடும் அளவு சராசரியாக 35 விழுக்காடு குறைந்தது. ரத்த குழாய் சுவரில் கண்டுபிடித்த முக்கிய மாற்றம் ஆக்சிஜின் இயக்கம் விளையும் நன்மைக்குச் சமமாகும். மன கசப்புக்குள்ளாக்கப்பட்ட நோயாளிகள் உடல் பயிற்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள். நாள்தோறும் ஒழுங்கான முறையில் மருந்து சாப்பிட மாட்டார்கள்.
அவர்கள் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். சிரிப்பு, உடல் பயிற்சி போல மனிதருக்கு நன்மை தரும். இதை தவிரவும் எந்நேரத்திலும் உடல் பயிற்சியில் ஈடுபட்டால் எந்த மன நிலைமையும் சிறப்பாகின்றது என்று அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தென்மேற்கு மருத்துவ மையத்தில் பணிபுரிகின்ற டாக்டர் திரிவேதி கூறியுள்ளார். அவருடைய கருத்தை உறுதிப்படும் வகையில் 20 முதல் 45 வயதான மன கசப்புக்கு ஆளான 20 பேரை குழுப்பிரிவில் தேர்வு செய்து சோதனையிட்டனர். அவர்களில் சிலர் மிதி வண்டி மூலம் ஆக்சிஜின் பயிற்சியில் ஈடுப்படவேண்டும். சிலர் மிதமான உடல் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இதில் ஈடுபடும்போது மருந்து சாப்பிட வில்லை.
3 திங்கள் கழிந்த பின் வாரத்திற்கு 3 முதல் 5 வரை ஒவ்வொரு முறை 30 நிமிடம் உடல் பயிற்சியில் ஈடுபட்ட பின் மன சோர்வுக்கு ஆளான நோயாளிகளின் மனக்கசப்பு உணர்ச்சி குறைந்து விட்டது. உடல் பயிற்சியில் கூடுதலாக கலந்து கொண்டால் மனக்கசப்பு உணர்ச்சி குறையும் என்று ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மகிழ்ச்சிகரமான உணர்ச்சியை நிலை நிறுத்துவது மட்டுமல்ல உணவு உண்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். சரியான முறையில் உணவு உட்கொண்டால் உடம்புக்கு நன்மை தரும்.
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணல் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்க திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது
ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே
சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்
ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்
ஒருத்தி
சிரிக்கவேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்
எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை
பாம்பின் படம்கூட
அழகுதானே?
சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை
பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது
ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?
காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?
சிரியுங்கள் மனிதர்களே!
பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை
சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு
இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்
சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஜாதி?
கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகச் சிரிப்பு
தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு
தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்றோடித் தேய்ந்தழியும் சிரிப்பு
கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு
சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐôதி பிரிக்கலாம்
சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை
நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?
சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு
ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்
மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு
எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!
-வைரமுத்து
Pin It