Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruHistoryWorld
முதல் விண்வெளி வீராங்கனை


Valentina Tereshkova 1961 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரிககாரின் ‘மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்’ என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக்கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வாலெண்டினா திரஸ்கோவா தேர்வு செய்யப்பட்டார்.

‘வோஸ்டாக்-6’ என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 ஜூலை 16 ம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார் வாலெண்டினா. விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்த விண்வெளி வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார் வாலெண்டினா.

ஜூன் 19 ம் தேதி விண்கலம் பூமிநோக்கி பாய்ந்து வந்தபோது தரையிரங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து பாதுகாப்பாக இறங்கினார் வாலெண்டினா. ‘ஹீரோ ஆஃப் சோவியத் யூனியன்’ என்ற மெடலுடன் ‘லெனின் விருது’ மற்றும் பல விருதுகள் குவிந்தன. இந்த வெற்றி அத்தனையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தார் வாலெண்டினா.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com.

Unable to connect to database! Please try again later.