Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruHistoryIndia
சௌரி சௌரா

ரஷ்யப் புரட்சியின் வெற்றியும் - அங்கு அமைந்த தொழிலாளர் நல அரசும் இந்தியத் தொழிலாளர்களிடையே புதிய விழிப்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. 1920 அக்டோபர் 30ம் தேதி ஏ.ஐ.டி.யூ.சி பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. லாலா லஜபதிராய் தலைமை தாங்கினார். 1921ல் அகமதாபாத்திலும், 1922ல் கயாவிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் நடத்தப்பட்டன.

nehru_gandhi அசாம் தேயிலைத் தோட்டத்தில் - நிலப்பிரபுக்களின் அட்டகாசங்களை எதிர்த்துத் தொழிலாளார்கள் போராட்டம் நடத்தினர். கூர்க்கா சிப்பாய்களால் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அசாம் மற்றும் வங்களத்தில் உள்ள ரெயில்வே தொழிலாளர்களும், துறைமுகத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். காந்தி அகிம்சை வழிப் போராட்டமே நமது வழியாக இருக்க வேண்டும் என அறிவித்தனர். போலிஸ் கொடுரமான முறையில் தாக்கும்போதும் சித்திரவதை செய்யும்போதும் மக்கள் அநீதிக்கு எதிரான இயல்பான ஆவேசத்தோடு கடுமையான போர் செய்தார்கள். இதை உ.பி. மாநிலத்தின் சௌரி- சௌராவில் விவாசாயிகள் தங்கள் எதிர்ப்புக் குரலை ஆர்ப்பட்டங்கள் நடத்தித் தெரிவித்தார்கள். போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். தாக்குண்ட மக்கள் காலம் காலமாய் உறைந்து போன கோபத்தின் வெளிப்படாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்து 22 போலீஸ்காரர்களை கொன்றார்கள்.

மக்களின் இந்தத் தன்னெழுச்சியைக் காட்டுமிராண்டித்தனம் என காந்தி கண்டித்தார். போராட்டம் வன்முறையாகிவிட்டது என்று ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார். ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பல தலைவர்களும், மக்களும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் எந்த காங்கிரஸ் தலைவரும் பாதிக்கப்பட்ட சௌரி சௌரா மக்களுக்கு ஆதரவாக தங்கள் வாயைத் திறக்கவில்லை. நடந்த வன்முறைக்காக மார்ச் 10-ம் தேதி காந்தி கைது செய்யப்பட்டார். ஆறுவருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கங்கிரஸ், தோற்றத்தில் பிளவு இல்லையென்றாலும் அணுகுமுறையில் இரண்டு குழுக்களாக பிரிந்தது. அடுத்த 5 வருடத்திற்கு பெரிய அளவில் மக்கள் போராட்டம் ஒன்றும் நடத்தப்படவில்லை. அணைக்கப்பட்ட விளக்கின் திரி கருகிய நாற்றம் தேசமெங்கும் சூழ்ந்தது.

“சௌரி சௌரா சம்பவத்திற்கு பிறகு திடுமென இயக்கம் நிறுத்தப்பட்டது. காந்தியைத் தவிர இதர முன்னனித் தலைவர்கள் அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. இளைஞர்கள் இயல்பாகவே கோபமடைந்தார்கள். மலைபோல் கொண்டிருந்த நம்பிக்கைகள் தரைமட்டமாகும்போது இப்படித்தான் ஆகும். எது ரொம்ப கஷ்டப்படுத்துகிறது என்றால் இந்த இயக்கம் நிறுத்தப்பட்ட காரணமும் அதன் விளைவுகளும்தான். சௌரி சௌரா அகிம்சா வழிக்கு எதிரானதுதான். அனால் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உணர்ச்சி வசப்பட்ட விவசாயிகள் நாட்டின் விடுதலைக்கான ஒரு பெரும் தேசிய இயக்கத்தை நிறுத்தி விட்டனரே? இதுதான் வன்முறைப்பாதையின் விளைவு என்றால் அகிம்சா வழிப் போராட்டத்தில், தத்துவத்தில் ஏதோ ஊனமிருக்கிறது...”
-ஜவகர்லால் நேருவின் சுயசரிதையிலிருந்து.

“ ஒத்துழையாமை இயக்கத்தினால் அரசாங்கத்திற்கு இந்டியாவின் உள்நாட்டு வரி வசூலில் கிட்டத்தட்ட 70 மில்லியன்கள் குறைந்துவிட்டது. அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்பினால் ஒரே ஆண்டில் 20 மில்லியன் டாலர்கள் இங்கிலாந்திற்கு நஷ்டம்.”
-1922 நவம்பர் 16 யூனிடி பத்திரிக்கையில் பிளாஞ்ச் வாட்சன்

கொல்லப்பட்ட 22 போலிஸ்காரர்களுக்கும் பிரிட்டிஷ் அரசு சௌரி சௌராவில் நினைவு மண்டபம் எழுப்பியது.

இந்தியா சுதந்திரம் பெற்ற்பின்பும் சௌரி சௌரா சம்பவத்தில் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்ட 19 தியாகிகளுக்கு எந்தவித மரியாதையும் செய்யப்படவில்லை, நினைவுமண்டபம்கூட எழுப்பப்படவில்லை. சுதந்திர வெள்ளிவிழாவின்போது சௌரி சௌரா மக்களே அந்த தியாகிகளுக்கு நினைவுத் தூண் எழுப்பினர். அதற்குப்பின் பத்தாண்டுகளுக்குப் பின்னரே இந்திய அரசு நினைவு மண்டபம் எழுப்பியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com