Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
செப்டம்பர் 2008

எல்லைகளற்ற வர்த்தகமா? எல்லைகளற்ற சுரண்டலா?
ஹேமலதா

ஜூலை மாத இறுதியில் ஒரே நாளில் 24 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு (FDI) அனுமதி வழங்கி நிதியமைச்சர் பி.சிதம்பரம் கையெழுத்திட்டதாக செய்தி வெளியானது. இடதுசாரிகள் மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டதால், பிரேக் ரீலிஸான வேகத்தில் மத்திய அரசு பொருளாதார சீர்திருத்த அழிவுப் பாதையில் ஒடுகின்றது.

உலகமயத்திற்கான ஆதரவாளர்கள் இனி இடதுசாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனியார்மய, தாராளமய கொள்கைகள் வேகம் பிடிக்கும் என்று வெளிப்படையாகவே குதூகலிக்கிறார்கள்.

மக்களுக்கு இந்நேரத்தில் பல விஷயங்களை நாம் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

பன்னாட்டு கம்பெனிகள் வரிஏய்ப்பு செய்தது பற்றிய கேள்வி ஒன்றுக்கு அன்றைய நிதயமைச்சர் தனஞ்சய குமார் நாடாளுமன்றத்தில் எழத்துப்பூர்வமான பதில் வழங்கினார். அதில் பன்னாட்டு கம்பெனிகள் ரூ. 1433.89 கோடி வருமான வரிஏய்ப்பு ரூ.143.80 கோடி தீர்வை வரி எய்ப்பும், ரூ.535.05 கோடி இறக்குமதி வரி ஏய்ப்பும் மூன்றாண்டு களில் செய்துள்ளதாக கூறினார். (ஹிந்துஸ்தான் டைம்ஸ் மே, 12, 2000) சோனி கம்பெனி ரூ.450 கோடி வரிஏய்ப்பு செய்து மோசடியில் முதல் இடம் பிடிக்கிறது.

செட்கோ, சர்வதேசிய டிரில்ங், கம்பெனி, ஸ்விஸ்ஸ்விடிஷ் ஆசியா பிரவுன் பேவேரி, ஹிஸ்டாய் மோட்டார்ஸ் ஜான்சன், ஜான்சன், சிமென்ஸ், எல்.ஜி, ஹெல்வெட் பேக்கர்ட், பிலப்ஸ் போன்றவை இறக்குமதித் தீர்வையில வரிஏய்ப்பு செய்துள் ளன.

இ.ஐ.டி.பாரி, கில்லெட், பெப்சி, பேயர், நோவர்ட்பீஸ், கேரியர் ஏர்கான், ஹிந்துஸ்தான் லீவர் பிராக்டர் கேம்ப்ல், நேஸ்லே, போன்றவை மத்திய கலால்வரி கட்டாமல் ஏப்பம் விட்டுள்ளன. நோக்கியா லூசன்ட் டெக்னாலேஜி, சேப்பர், ஆசியா சாட்டிலைட் டேலிகாம், சிக்னர் குரூப் பேன்றவை வருமான வரியில் பலவகை தில்லுமுல்லு கணக்கை காட்டியுள்ளன.

பன்னாட்டு கம்பெனிகள் மிக திறனான நிர்வாகம் கொண்டவை. இந்திய நிறுவனங்களை விட பல மடங்கு செயல்திறன் கெண்டவை என்று அவற்றிற்கு இந்திய கதவுகள் திறப்பதற்கான காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. லாபம் தான் திறனை அளக்கும் அளவுக்கோலாக காட்டப்படுகிறது. இது உண்மையல்ல என்பதை ஒரு உதாரணம் கொண்டு பார்க்கலாம். 1000 கோடி முதலீடடில் 200 கோடி லாபத்தை பன்னாட்டு நிறுவனம் காட்டுவதாக உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். ஆனால் இந்த லாபத்தை என்ன செய்கிறது? பாதிக்குமேல் இப்பணத்தை தங்கள் நாட்டு பங்குதாரர்களுக்கு தாய் நிறுவனத்திற்கு வாரிக் கொண்டு போய்விடும். இப்பொழுது 100 சதவீதம் லாபத்தையும் கெண்டு போகவும் அனுமதி உள்ளது. இந்தியய நிறுவனம் அதே முதலீட்டில் 100 கோடி லாபம் காட்டினால் திறன் குறைவு என்று சொல்லப்படுகிறது பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் சிறப்பு வரி சலுகைகளும், இதர பல்வேறு சலுகைகளுமே அவை காட்டும் 100 கோடி கூடுதல் லாபத்திற்கு காரணம் என்ற உண்மையயை அரசு மறைக்கிறது.

பன்னாட்டு கம்பெனி திறன் செயல்பாட்டில் அவர்கள் சொல்வது திறனற்ற இந்தியப் போட்டியாளரை வீழ்த்துவதாக அரசு வாதம் செய்கிறது.

பின் போட்டியாளர் இல்லாத சந்தை களத்தில் பொருளின் விலையை. திறனற்ற இந்திய நிறுவனம்? வழங்கிய விலையை விட பல மடங்கு உயர்த்தி விடுவது ஏன்? அரசு இதற்கும் விளக்கம் தர முன்வருமா? விலை மோசடி, சந்தை விளையாட்டுகள் குளிர்பான துறையில் மட்டுமல்ல, மருந்து துறையிலும் நிகழ்ந்ததைப் பார்க்கலாம்.

உலகமய தத்துவ நம்பிக்கைக்கு Globalin என்று பெயர் சூட்டியுள்ளனர். இதன் நம்பிகையாளர்களுக்கு அதிர்ச்சி யளிக்கும் விஷயம் ஒன்றை நினைவுப்படுத்தும் கடமை தேசப்பற்றுள்ள நமக்கு உள்ளது. உலகமயம் எல்லைகளை கடந்து தொழில்நுட்ப பரிவாத்தனைக்கு வழிசெய்யும் என்று சொல்லப்பட்டது. தொழில்நுட்ப பலன் நம் நாட்டிற்கு கிடைக்கும் என்று ஆசைகாட்டப்பட்டது. ஆனால் உண்மை என்ன?

இண்டெல், ஏ.எம்.டி சிஸ்கோ போன்றவை இந்தியாவில் செய்துள்ள முதலீடு அவற்றின் உலக முதலீட்டின் ஒரு சிறுதுளி அளவேயாகும். புதிய தொழில் நுட்பத்தை இந்தியாவிற்குள் கொண்டுவராமல் நம் தொழில் நுட்ப அறிவு பலனை உறிஞ்சி கொண்டிருக்கின்றன. அதிகம் சந்தையில் தேவைப்படுகின்ற மென்பொருள் உற்பத்திக்குதான் அவற்றின் முதலீடு போகிறது. அல்லது அவற்றின் அமெரிக்க கம்பெனிக்கு தேவையான ஆய்வு உதவி இங்கே நிகழ்வதற்கு முதலீட்டை பயன்படுத்துக்கின்றன. இதுவரை தொழில்நுட்ப பரிமாற்றத்துக்கான ஒப்பந்ததை எந்த இந்திய நிறுவனத்துடனும் செய்து கொள்ளவேயில்லை ஆனால் இந்திய அறிவு மூலதனத்தை சுரண்டிக் கொள்ள தடையற்ற அனுமதி பெற்றுள்ளதோடு இதற்காக சலுகைகளையும் அளிப்பதுதான் அவலத்திலும் அவலம்.

குறைந்த விலையில் நிலம்.தடையற்ற மின்சாரம் வரி சலுகைகள் என ராஜ உபசரிப்பும் இவற்றிற்கு நடக்கிறது.

இறக்குமதியை முழுவதுமாக நாம் சார்ந்துள்ள துறைகள் விமானம் காட்டுதல், தொழிற்சாலை உயர்கருவிகள் உற்பத்தி கருவிகள், நவீன கருவிகள், ரோபர்ட்ஸ் உயர் மின்னியர் நுட்பம், டெலிகாம் ஹார்டுவேர், போன்றவை யாகும். இவற்றில் நமக்கு உதவும் வகையில் அன்னிய மூலதனம் ஒரு துளியும் உள்ளே வருவதில்லை. நுகர்வோர் பொருட்கள் ஆட்டோமொபைல், மென்பொருள் போன்ற சில துறைகளிலியே 90 சதவீதம் அன்னிய மூலதனமும் புது ஆர்வம் காட்டியுள்ளன புகுந்துள்ளன. ஏற்கனவே நாம் வலுவாக உள்ள இத்துறைகளில் அன்னிய மூலதனத்தை நுழைத்து நம் சுயாதிபத்தியத்தை குலைக்கவே அரசுகள் போட்டியிடுகின்றன.

ஒரிசாவில் மின்சார துறை தனியார்மயமாக்கலில் கோடிக்கணக்கான ரூபாயை அரசு வீணடித்ததை இந்திய உயர்தணிக்கை ஜெனரல் (CAG) தன் அறிக்கையில் கண்டிக்கிறார். இதற்கு இந்திய ஆலோசனை நிறைய குழுக்கள் நியமிக்கப்படாமல் அன்னிய சூழலிற்கு நியமனம் வழங்கப்பட்டதில் துவங்கி இந்த ஊழல்பட்டியல் நீள்கிறது. உலகவங்கியின் சீனியர் எரிபொருள் நிபுணரின் நிர்ப்பந்தத்தின் விளைவாக இந்த முறைகேடான நியமனம் அரங்கேறியுள்ளது. இந்த தனியார்மயம், மின்வினியோக விலையை குறைக்கவில்லை உயர்சேவையை எங்களால் தான் வழங்கமுடியும் என்று மார்தட்டினார்கள் அவர்களால் சாதாரண சுமாரான சேவையை கூட தரஇயலவில்லை. மகாராஷ்ராவில் என்ரான் கதையும் இப்படித்தான்.

இடதுசாரிகள் மத்திய அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டதால் உலகமயத்திற்கு இந்தியாவில் பிரகாசமான அமுலாக்க சுதந்திரம் கிடைத்துவிட்டதாக குதியாட்டம் போடுவார்கள், இங்கு நாம் விளக்கியுள்ள சுட்டெரிக்கும் உழைப்பாளி மக்களுக்கு என்ன பதில் தரப் போகிறார்கள்?

ஆங்கிலத்திறன் கொண்ட உயர்தர மத்திய வகுப்பினர் பெறும் ஐ.டி துறை வேலைகளோ, ஒரு சிலருக்கு கிடைக்கும் உப்பிய சம்பள கவர்களோ, உயர்நிர்வாகத்தினர் பெறும் உயர் சம்பளவேமா புதிய நுகர்வோர் கூட்டம் உருவாகியுள்ளது. விளம்பரத்துறை 2530 சதவீதம் உயர்த்துள்ளதோ, நவீன அமுகு சாதனங்கள், உடைகள், வெளிநாட்டு சாக்லெட்டுகள், குளிர்பானங்கள், கார்கள், சந்தையில் உடனுக்குடன் கிடைப்பதோ தான் இந்திய பொருளாதார வளர்ச்சி என மக்கள் ஒப்புக் கொள்ளத் தயாரில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com