Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
செப்டம்பர் 2007

பகத்சிங்
- ஜே.ராஜேஷ்கண்ணா

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் அடிமைபட்டு கிடந்த இந்திய தேசத்தை விடுவிப்பதற்காகவும், சுரண்டலை ஒழித்து சோசலிச சமுகத்தை கட்டுவதற்கான போராட்டத்தை சமரசமின்றி முன்னெடுத்துச் சென்ற வீர இளைஞனின் வாழ்வை குறுங்காவியமாகச் சொல்லி செல்கிறது பகத்சிங் நூல்.

வரலாறு சொல்லும் பணி அதிலும் தனி மனிதரின் வரலாற்றை சமுக வரலாற்றுடன் இணைத்துச் சொல்லும் பணியெ அதிலும் 64 பக்கங்களுக்குள் எழுதி முடிக்கும் பணி சிரமமானது, மிகச் சிரமமானது என்றால் மிகையல்ல சுதந்திரப் போராட்டத்தின் நான்கு முக்கிய அரசியல் நிகழ்வுகளோடு இந்நூல் துவங்குகிறது.

மேலான உயிரையும் துச்சமென மண்டை உடைபட்டு, துப்பாக்கி குண்டுகளுக்குநெஞ்சை உயர்த்தி, தூக்குக் கயிற்றை முத்தமிட்டு, வெள்ளை ஏகாதிபத்திய சிறை கொட்டடிகளில் செத்து மடிந்த எத்தனையோ போராளிகளுக்கு மத்தியில் பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் சாகா வரம் பெற்றது எப்படி இன்றைய உலகமய சூழலின் பிண்ணனியோடு இந்நூல் அழகாகப் படம் பிடித்து சொல்லுகிறது.

லட்சக்கணக்கான மக்கள் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்க ஆரம்பித்த காலகட்டத்தில் பகத்சிங் போராட்ட களத்திற்கு வருகிறார். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த கத்தார் கட்சிக்கு தலைமை தாங்கிய கர்தார் சிங் சராபா 1915 ல் தன் 20 வயதில் ஆங்கில ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்டார். இது பகத்சிங்கின் மனதில் பெரும் தாக்கத்தையும், ஆங்கில அரசின் மீது கடுங்கோபத்தை ஏற்படுத்தியது., 1926ல் நவஜவான் பாரத்சபா அமைப்பு சராபவின் திரு உருவப்படத் திறப்போடு துவங்கப்பட்டதும், பின்னர் பகத்சிங் 1929 ல் கைது செய்யப்பட்ட போதும் சராபாவின் படம் பகத்சிங்கிடம் இருந்தது என்பது நம் கதாநாயகனுக்குள் ஓர் நாயகன் இருந்தான் என்பதை உணர முடிகிறது.

1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி தன்னிச்-சையதக திரும்ப பெற்றது. 1917 அக்டோபர் புரட்சி ஆகிய நிகழ்வுகள் போராளிகள் மத்தியில் பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரஸ் தலைமை மீதும், காந்திஜி மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

அக்டோபர் புரட்சியின் தாக்கம் பகத்சிங் மனதில் சோசலிச விதையை விதிதைதது. 1923 இந்திய குடியரசு சங்கத்தை உருவாக்கிய பகத்சிங் 1925 சுக்கோரி நிகழ்விற்குப் பிறகு 1926 ல் நவஜவான் பாரத்சபா என்னும் இளைஞர் அமைப்பையும், பின்னர் 1928ல் இந்திய குடியரசு சங்கத்தை இந்திய சோசலிஸ்ட் குடியரசு சங்கம் என மாற்றினார். இந்நிகழ்வுகள் நாட்டின் விடுதலை தனி நபர் பயங்கவாதத்தாலோ அல்லது ஒரு குழு பயங்கரவாதத்தாலோ வெற்றி பெறாது என்ற நிலையை எடுக்க உதவியது. விடுதலைக்கான போராட்டத்தோடு இணைத்து சமுக ஒடுக்குமுறைக்கெதிராகவும் மதவாதத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராகவும் பகத்சிங் நடத்திய சமசரமற்ற போராட்டம் படிப்படியாக சோசலிசத்தை நோக்கிய மாவீரனின் பயணத்தில் இந்நூல் மையம் கொள்கிறது.

அன்றைய காலகட்டத்தில் மற்ற எந்த தலைவர்களையும் விட குறிப்பாக லாலாஜபதிராய், திலகர் ஆகியோரை விட சிறந்த அரசியல் ஞானமும், அன்றைய சமுக சூழலை பற்றிய சரியான புரிதலை பெற்றிருந்தார். அதனால்தான் பகத்சிங்கினால் இந்திய மதவாதத்தின் பேராபத்தை எதிர்த்து போராடவும், தன் தோழர்கள் மத்தியில் தொடர்ந்து எச்சரிக்கவும் முடிந்தது. மேலும் சோசலிசத்தால் மட்டுமே நாட்டிற்கு விடுதலையும், நாட்டில் நிலவும் சமச்சீரற்ற தன்மையை உடையத்தெரிய முடியும் என்று பத்சிங் ஆழமாக நம்பினார். எனவேதான் மற்றவர்களை காட்டினாலும் பகத்சிங் தனித்தன்மையோடு விளங்குகிறார் என்பதை இந்நூல் அழுத்தமாக சொல்கிறது.

தொழிலாளி வர்க்கத்தை நசுக்கிடவும், கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கை தடுத்திடவும் ஆங்கிலேயே அரசு பொதுபாதுகாப்பு சட்டம், தொழில் தாவா சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டங்களை எதிர்த்தும், கம்யூனிஸ்ட்டுகள் கைதை கண்டித்தும் HSRA அமைப்பு நாடாளுமன்றத்தில் யாருக்கும் உயிர்தேசம் முடிவு செய்து இதனால் ஏற்டபோகும் விளைவை நன்றாகவும் உணர்ந்திருந்தார். பகத்சிங் HSRA முடிவின் படி நாடாளுமன்றத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து, செவிடர்களின் காதுகளின் கேட்க செய்து நீதிமன்றத்தில் வீரச்சமர் புரிந்தார், இந்நிகழ்வு மாவீரனின் முடிவுக்கு வழி வகுத்தது. ஆனால் இச்செயல் நாட்டில் உள்ள லட்சோபலட்ச இளைஞர்களின் பேரெழுச்சிக்கு வழி வகுத்தது.-0710.1930ல் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டணையை வெள்ளை ஏகாதிபத்திய நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கியது.

வீர இளைஞர்களின் தண்டனையை ரத்து செய்யும் வாய்ப்பு காந்திஜிடம் இருந்தது. ஆனால் காந்தி தண்டனையை தள்ளி போட கோரினாரே தவிர காப்பற்ற முயற்சிக்கவில்லை என்ற வரலாற்று உண்மையை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையின் நிலபுரபுத்துவ, முதலாளித்துவ வர்க்க பாசத்தை புரிந்து கொள்ளவும், தேசத்தின் விடுதலை போராட்டம் தப்பி தவறி தொழிலாளி வர்க்க தலைமைக்கு சென்றுவிடாமல் பார்த்துக் கொண்டனர் காந்தியும், காங்கிரசும் என்பதை இந்நூல் தோலுரித்து காட்டுகிறது.

இன்றைய உலகமய சூழ்நிலையில் உலக ஏகாதிபத்திய குறிப்பாக அமெரிக்க நமது நாட்டை அணுசக்தி ஒப்பந்தம் மூலம் நம் பாதுகாப்பையும் சுயசார்ப்பையும் கபளிகரம் செய்வதற்கு துடிப்பதையும் காங்கிரஸ் தலைமை சமரசம் செய்து கொள்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இன்று நாம் நம் சுதந்திரத்தை பாதுகாத்திடவும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராகவும், மதவாதத்திற்கு எதிராகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இப்போராட்டத்தில் பகத்சிங்கின் வீரம், தேசப்பற்று, அரசியல் ஞானம், தனிநபர் ஒழுக்கம், தத்துவார்த்த தெளிவு, கூட்டு செயல்பாடு, சமசரசற்ற போராட்ட கொள்கை பிடிப்பு, தோழமை உணர்வு ஆகிய கோட்பாடுகள் மாவீரனின் சோசலிச கனவுகளை இந்திய மண்ணில் நிறைவேற்ற இந்நூல் உத்வேகம்ளிக்கும் அவ்வகையில் இந்நூல் வெற்றி பெறுகிறது.

பகத்சிங்கை பற்றி ஆளும் உத்வேகமளிக்கும் அவ்வகையில் இந்நூல் வெற்றி பெறுகிறது. பகத்சிங்கை பற்றி ஆளும் வர்க்கங்கள் உருவாக்கியுள்ள எதிர்மறை கருத்துக்களை சுக்குநூறாக உடைத்தெறிய இந்நூல் பேராயுதமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. DYFI தமிழ் மாநில குழுவும், பாரதி புத்தகாலயமும் இணைந்து வழங்கியுள்ள இவ்வாயுதத்தை தமிழக இளைஞர்களின் கைகளில் சேர்ப்பது நமது கடமை. ஒரு நூலின் வெற்றி படிப்பவரின் இதயத்தை ஒரு அங்குலமேனும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பார்கள். அதில் இக்குறு நூல் 100 சதம் வெற்றி பெறுகிறது. படித்து வைத்த பின்னும் தாக்கம் குறையவில்லை. ஆனால் இரத்த அழுத்தம் உயர்கிறது.

பகத்சிங்
அ.அன்வர் உசேன்
பகத்சிங் நூற்றாண்டு விழா சிறப்பு வெளியீடு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com