Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2007

முதல் இந்திய சுதந்திரப் போரின் நினைவலைகள்
ஆர்.வேலுச்சாமி

சிப்பாய் கலகம் என அறியப்பட்ட சிப்பாய் புரட்சி நடந்து முடிந்தது. 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திர போரட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது திரித்து சொல்லப்பட்டவை ஏராளம். கடந்த கால வரலாறுகளை ஆய்வு செய்யும் இன்றைய தலைமுறைக்கு, இன்றைக்கும் தேவைப்படுகிற ஏகாதிபத்திய எதிர்ப்பு போர்களத்திற்கு உரமேற்றுகிற வகையில் 1857 சிப்பாய் புரட்சி பற்றிய செய்திகளை மிக சிறந்த அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

1857ஜனவரியில் மேற்கு வங்க மாநிலம் டம்டம் பகுதியில் துவங்கியது. புரட்சி என்று சொன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலும் விவாசாயிகள், தொழிலாளிகள் கிளர்ந்தெழுவது யதார்த்தமான ஒன்று. ஆனால் இப்புரட்சியால் கிளர்த்தொழுந்ததும், தலைமையேற்றும் யாரென்றால் பிரிட்டிஷ் சாம்ராஜ்சியம் கொடுத்த சீருடை அணிந்து துப்பாக்கி ஏற்ரிய பிரிட்டிஷ் அரசு வழங்கிய ஊதியத்தை பெற்ற ராணுவ வீரர்கள்.

இந்தியாவில், பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களும், முஸ்லீம்களும் ஆவார்கள். இவர்கள் பயன்படுத்தும் தோட்டாக்களில் பன்றியின் கொழுப்பும், பசுவின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது. இது தத் தமது மத நடவடிக்கைகளுக்கு விரோதமாக இருந்த காரணத்தால் ராணுவ வீரர்கள் கொழுப்பு தடவிய குண்டுகளை வாங்க மறுத்தனர். வாங்க மறுத்த ராணுவ வீரர்களை கைது செய்து சிறையில் அடைத்து, வேலையை விட்டும் நீக்கினர். இது நாடெங்கிலும் பரவிய போது ராணுவ வீரர்கள் கொதித்தெழுந்து தனது சக வீரர்களை சிறையை உடைத்து விடுதலை செய்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

ராணுவ வீரர்களின் கிளர்ச்சியால் பொது-மக்கள், குறிப்பாக விவாசாயிகள் பெரும் திரளாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் பங்கு கொண்டனர். இதற்கு காரணம் மிக கடுமையான பிரிட்டிஷ் ஆட்சியின் வரிவிதிப்பு, நிலம் பறிப்பு, வறுமை, கடன் மற்றும் வட்டி தொல்லைகள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் மக்களுக்கு இருந்தது. குறிப்பாக 1840 துவங்கி 1857வரை 17 ஆண்டுகளில் வங்கத்தின் வரி வசூல் 72 சதம் உயர்த்தப்பட்டது.

அதேபோல் அன்றைய காலத்தில் நிலவி இருந்த இந்து முஸ்லீம் மக்களின் ஏற்றுமை மிக முக்கிய காரணமாகும். இந்து மத பண்டிகை காலங்களில் பசுக்களை வெட்டக் கூடாது என இஸ்லாமிய மத தலைவர்கள் தடை செய்திருந்ததும் பிரிட்டிஷ் காரர்களை தவிர மற்ற எல்லோருக்கும் இம்மண் சொந்தமானது, என்ற உணர்வும், பிரிட்டிஷ்காரனை வெளியேற்ற வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கி இருந்தது.

மேற்கண்ட சமூக சூழல் காரணமாக சிப்பாய் புரட்சியானது வட இந்தியா முழுமைக்கும் பரவி அது மத்திய பகுதியிலும் அனைத்தும் மிக முக்கிய நகரங்களிலும் பரவியது. தென்னந்தியாவில் இதன் தாக்கம் மட்டுமே இருந்தது. 1857ல் வாழ்ந்த மக்கள் தொகையில் கிட்டதட்ட 20 சதவீதம் மக்கள் இப்புரட்சியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்துள்ளனர்.

1,35,000 ராணுவ வீரர்களை கொண்ட வங்க ராணுவ படையில் 1,28,000 பேர் இப்புரட்சியில் பங்கேற்றார்கள் என்றால் இதன் வீரியம் என்ன என்பதை நம்மால் உணர முடியும். பிரிட்டிஷ் அரசோடு இருந்த ராணுவ வீரர்கள் 7000 பேர் தான்.

இந்தியாவின் பெருபான்மையான பகுதியில், பெரும் பகுதி ராணுவ வீரர்களின் பங்கேற்போடு, பெரும் திரன் மக்களின் பங்கேற்போடு நடைபெற்ற இப்போரட்டம், ஆயிரமாயிரம் இந்திய மக்களின் உயிர் தியாகம் செய்யப்பட்ட இப்போரட்டம், இரண்டு ஆண்டுகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற போரட்டத்தை வெறும் சிப்பாய் கலகம் என சுருக்கி இன்றைக்கும் பாட புத்தகங்களில் சொல்லித்-தருவது மிகுந்த வேதனையானது.

1498- ல் வாஸ்கோடாகாமா, கோழிக்கோட்டில் முதன் முதலாக கால் பதித்தது முதல் சுதந்திர போரின் சுமார் 350 ஆண்டு கால வரலாற்று சம்பவங்களை, 1857 புரட்சிக்கான அகம் மற்றும் புற காரணங்களையும் சூழல்களையும் இக்கட்டுரை விவரிக்கின்றன.

அரேபியர்கள் இம்மண்ணில் வியாபரம் செய்த போது பரஸ்பர நட்பு வளர்ந்தது. ஆனால் கிழக்கிந்திய கம்பெனியில் உள்ளிட்ட அன்னிய கம்பெனிகளின் வருகையும் வியாபரமும் தங்களுடைய இருந்த போட்டியாளர்களை எதிர் கொள்ள அல்லது மிரட்டி பணிய வைக்க தங்களது ராணுவ வீரர்களை பயன்படுத்தி மிகு குறைவான விலையில் பொருட்களை வாங்கி சென்றுள்ளதை இக்கட்டுரைகள் மிக அழகாக படம் பிடிக்கிறது. பிரிட்டிஷ் நாட்டு தயாரிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் தொழில்களை முடக்கிய சம்பவங்களையும் இக்கட்டுரைகள் படம் பிடிக்கிறது.

1857 புரட்சியின் 150 ஆம் ஆண்டு விழாவை மத்திய அரசு விழாவாக நடத்தியிடுப்பதும்,1857 பற்றிய விபரங்களை வெளி கொண்டு வர குழு அமைத்திருப்பதும், அவைகள் யாவும் வாட்டர மொழிகளில் கொண்டு வருவதும் வரவேற்க தக்க அம்சங்கள் ஆகும்.

ஏனெனில் 60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ஏகாதிபத்தியம் நம் நாட்டின் மீது தொடுக்கப்படும் பன்முக தாக்குதலில் இருந்து இந்திய மக்களை தேசபக்த உணர்வு மிக்கவர்களாக மாற்ற இது போன்ற படைப்புகள் மிகமிக அவசியம். அணுசக்தி ஒப்பந்தம், சில்லரை வர்த்தகத்தில் அன்னியர் நுழைதல், இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி, உலகவங்கி, அன்னியகடன், 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் வளர்ந்துள்ள வறுமை, கருப்புபணம், கல்வியின்மை, வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் நம் தேச மக்கள் தேச பக்த உணர்வோடு போராட்டங்களில் பங்கேற்றிட உரிமைபோருக்கு உரமிடும் 1857 புத்தகம் உண்மை வரலாறுகளை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது.

னுலுகுஐ-ன் அகில இந்திய 8-வது மாநாட்டில் மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஆங்கிலத்தில் இப்புத்தகம் ளுகுஐ யால் வழங்கப்பட்டது. இந்திய அறிஞர் பெரும்மக்களான ஜோதிபாசு, சீத்தாராம்யெச்சூரி, இர்ஃபான்ஹபீப், உஸ்தா-பட்நாயக், பிஸ்வமாய பாட், நளினி தனேஜா என்.ராஜேந்திரன் ஆகியோரின் கட்டுரைகளை தமிழக்கம் செய்து தமிழக ளுகுஐ யும், பாரதி புத்தகாலத்துடன் இணைந்து வெளியிட்டிருக்கிறது. கடந்த கால வரலாற்றியயர்களால் அங்கீகரிக்கப்படாத சிப்பாய் புரட்சி எனப்படும் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு உண்மை வரலாற்றை பரிசாக கொடுத்திருப்பது என்பது மிக மிஞ்சிய தேசபக்த செயல் என்பதை வரலாற்று உண்மை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com