Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2007

பெருசும் சிருசும்:
பெரணமல்லூர் சேகரன்

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால்
விழிகள் பிதுங்க வலியின் அயர்வால்
கையறு நிலையில் அடித்தட்டு மாந்தர்
மெய்யுறு அவலம் அகற்றிட வாரீர்
படிக்கக் கல்வியும் கைக்கெட்ட வில்லை
படித்துப் பட்டம் பெற்றோர்க்கு வேலை
உரத்து முழங்கிப் போரிட்டும் இல்லை
துரத்தும் வேலையின்மைத் தொல்லை

சில்லரை வணிகம் செய்தேனும் பிழைக்க
சிந்தனை இளைஞர் மனதில் தழைக்க
கல்லரை கட்ட அரசு துடித்து
அந்நியரை அழைக்குது போர்க்கொடி உயர்த்து

வேளாண் இடுபொருள் விலையின் உயர்வால்
தாளாச் சுமையுடன் தொடரும் அயர்வால்
வேளாண் விளைப்பொருள் விலையில் குறைவால்
மீளாத் துயரில் மூழ்கிடும் மாந்தர்
எங்கும் எதிலும் எந்திரம் புகுத்தி
எங்கும் நவீன மயத்தைச் செலுத்தி
உழைக்கும் மக்களை வீதியில் நிறுத்தும்
உழைக்கும் வர்க்கம் அரசை எதிர்க்கும்
மக்களுக் கெதிராய் செயல்படும் அரசு
மக்களே எதிர்த்து கொட்டுக முரசு
ஏற்றுக வர்க்க ஒற்றுமை பெருசு
மாற்றுக அரசின் அணுகுமுறை சிரிசு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.