Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
மார்ச் 2008

தலையங்கம்
பட்ஜெட் சொல்வது என்ன?

பட்ஜெட்டுக்கு முன் தினம் நிதியமைச்சர் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பயத்தார். அதற்கு முன்தினம் லாலு ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்தார். பொருளாதார ஆய்வறிக்கை 1982-83 ல் மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 36.4 சதவிகிதமாக இருந்தது, 2006-07ல் 18.5 சதவிகிதமாக, அதாவது 25 ஆண்டுகளில் சரிபாதியாக குறைந்துவிட்டது. கடந்த நிதியாண்டில் 3.8 சதவிகிதம் எதிர்பார்க்கப்பட்ட விவசாய வளர்ச்சி, 0.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. உணவு உற்பத்தியில் தேக்கம் நீடிக்கின்றது. தொழில் துறையில் 2006--07ல் 11.6 சதவிகிதமாக இருந்தது, 2007--08ல் 9 சதமாக குறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுகிறது. இந்த பின்னணியோடு பட்ஜெட்டை மிகவும் எதிர்ப்பார்ப்புடன் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

நான்கு கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 60 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக பட்ஜெட் அறிவித்திருப்பது சிறப்புதான், எனினும் தேசத்தில் உள்ள விவசாயிகளில் 42 சதவிகிதம் பேர் வெளியில் கடன் வாங்கி, அதுவும் 30 சதவிகிதம் வட்டி எனும் கடும் விஷ வலையில் சிக்கி உள்ளனர் என்பதோடு இதை இணைத்துப் பார்க்க வேண்டும். பொருளாதாரத்தைப் பாதுகாக்க நிதி திரட்சியை ஏற்படுத்த வைத்துள்ள திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை, நவரத்தினா பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை 10 சதவிகிதம் தனியாருக்கு விற்பனை செய்வது. நிலக்கரி சுரங்கங்களில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது. தொழிலாளிகளின் வேலை நேரத்தை அதிகரிப்பது.


ஆசிரியர் குழு

எஸ்.கண்ணன்
ஆர்.வேல்முருகன்
ஆர்.வேலுசாமி
வி.ஜானகிராமன்
எம்.கவிதா

ஆசிரியர்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

முகவரி:

ஏ.பாக்கியம்
118/10, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 600 003

[email protected]

ஆண்டு சந்தா: ரூ.50
ஆயுள் சந்தா: ரூ.500

எண்ணெய் வயல்களை அந்நிய முதலாளிகளுக்கு விற்பனை செய்வது. இன்சூரன்ஸ் துறையில் நேரடி வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிப்பதோடு 51 சதவிகிதம் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது. டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களின் போக்குவரத்தை முழுமையாக தனியாருக்கு கொடுப்பது போன்ற அபாயகரமான ஆலோசனைகளை நிதியமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் ஒருபடி மேலே சென்று “சந்தை மிகவும் பசியாக இருக்கிறது, இன்னும் சில பொதுத்துறை நிறுவனங்களை விற்பனைக்கான பட்டியலில் அறிவிக்க வேண்டியுள்ளது” என்று அறிவிக்கிறார். சந்தை பசி என்பது டாட்டா, பிர்லா, அம்பானி, மிட்டல்களின் லாப பசி என்ற “மொழிபெயர்ப்புடன்” பார்க்கப்பட வேண்டும்.

இதே நடைமுறைதான் ரயில்வே பட்ஜெட்டிலும் உள்ளது. பயணிகள் கட்டணக் குறைவும், இந்திய ரயில்வே சில ஆண்டுகளாக ஏற்படுத்தி வரும் லாபமும், சுமார் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடங்களை காவு கொடுத்துப் பெறப்படுவதாகும். புதிய ரயில் வாகனங்கள், புதிய ரயில் பெட்டிகள், சரக்குப் பெட்டகங்கள், முக்கிய ரயில் நிலையங்களின் மேம்பாடு என வரிசையாக தனியார்மயம் நுழைக்கப்படுகிறது. ஏற்கனவே அவுட்சோர்சிங் என்கிற ஆக்கிரமிப்பு பலபகுதிகளில் துவங்கிவிட்ட நிலையில், தற்போது பெட்டிகளைக் கழுவுவதற்குகூட தனியாரை அழைத்துள்ளனர்.

ராணுவத்திற்கு நிதி அதிகரித்துள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாய் கூலியில் வாழ்க்கை நடத்துகின்ற கிராமப்புற மக்களுக்காக கொண்டுவரப்பட்ட கிராமப்புற வேலை உறுதி சட்டத்திற்கு ஒதுக்கீடு மிகவும் பாவமாய் காட்சியளிக்கிறது. 200 மாவட்டங்களில் அமலாக்கம் இருந்த போது 11,300 கோடியாக இருந்த தொகை, 596 மாவட்டங்களாக உயர்ந்த பின் வெறும் 16,000 கோடி மட்டுமே. அதாவது 296 மாவட்டங்கள் உயர்ந்தாலும் 4,700 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. உலகமயத்தின் பரிசான வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியாகும்.

உணவு மானியம் அதிகரிப்பு, பொது விநியோக முறையை பலப்படுத்தல், விலைவாசி உயர்வு குறித்தெல்லாம் இந்த பட்ஜெட் கவலை கொள்ளவில்லை. கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் ஐந்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு பின்னோக்கி செல்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் நிதி மூலதனத்தின் சூதாட்டம் காரணமாக இந்தியாவில் பெருகி வரும் வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி குறித்து இந்த பட்ஜெட் அக்கறை கொள்ளவில்லை.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல இனிப்பு தடவிய அறிவிப்புகள் நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் இடதுசாரிகளும், மக்களும் பலத்துடன் போராடாமல் சாத்தியமில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் அறிவித்த பல அறிவிப்புகள் நடைமுறைக்கு வரும் போது “ஐந்தாவது பிள்ளைக்கு கிடைக்கும் குச்சிஐஸ்” போல மாறியதை மறந்திடுவோமா என்ன?

ஆசிரியர் குழு


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com