Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2007

நேசம்
- கே.எஸ். கனகராஜ்

ஊற்றாய் பெருகி
வழிந்து ஓட இடமின்றி
தேங்கி, கனமாகி
அடைத்துக்கொள்ளும் மனதில்

நகரும் நிமிடங்களில்
நடத்திப்போகும்
வெம்மை நிகழ்வுகளை
பகிர்ந்துக் கொள்ள துடித்து

பரபரக்கும் மனசுக்கு
பக்கத்தில் யாருமில்லாத
சூன்யம் விரியும்
பாலை வெளிபோல்
ஓயாது தகிக்கும்

உன் நினைவுகள்
விழுங்கிய இரவு தொலைத்து
உறக்கம் தேடி
விடியலுக்கு கீழிலிந்து
மௌனமாய்
நடக்கத் தொடங்குகிறேன்

எதுவரை என
தெரியாமல் நீளும்
உன் புறக்கணிப்பின்
எல்லை நோக்கி



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.