Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூன் 2007

தலையங்கம்

ராஜஸ்தான்...

ஒரு மாநிலத்தை ஆளும் அரசே கலவரத்தில் ஈடுபட்டு பல்லாயிரம் அப்பாவி மக்களை படுகொலை செய்த வரலாறு நமது நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்த குஜராத்தில் நடந்ததை பார்த்தோம். குஜராத்தில் நடந்த கோரப் படுகொலைகள் உலக மக்களை நிலைகுலையச் செய்தன. இப்போது ராஜஸ்தானை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அவ்வழியை கடைப்பிடிக்கத் துவங்கி உள்ளது போல் தெரிகிறது. ராஜஸ்த்தானை ஆளும் பா.ஜ.க அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்காக போராடும் மக்களை படுகொலை செய்து வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நடந்தபோது ராஜஸ்தானில் உள்ள குஜ்ஜார் இன மக்களை தற்போதுள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து மாற்றி பழங்குடியினர் என்ற அந்தஸ்த்தை தருவதாக வாக்குறுதி அளித்தது. இப்படி ஒரு வாக்குறுதியை கொடுத்தது எந்த இயக்கம் தெரியுமா?

இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளாத, அதற்கு எதிராய் காலங்காலமாய் கலவரம் செய்துவரும், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக அந்தஸ்த்தை முன்னேற விடாமல் புறம் தள்ளும் இயக்கமான பாரதிய ஜனதா கட்சிதான் அது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை கோரிய மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல் படுத்த முயன்றதன் காரணமாய் வி.பி.சிங் ஆட்சியை களைத்த இயக்கம்தான் பாரதிய ஜனதா கட்சி. தகுதி திறமை என்று வாதம் பேசி தற்போது கல்வியில் 27 சதம் இடஒதுக்கீட்டை தடுக்க முயல்வதும் பாரதிய ஜனதா கட்சிதான்.


ஆசிரியர் குழு

எஸ்.கண்ணன்
ஆர்.வேல்முருகன்
ஆர்.வேலுசாமி
வி.ஜானகிராமன்
எம்.கவிதா

ஆசிரியர்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

முகவரி:

ஏ.பாக்கியம்
118/10, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 600 003

[email protected]

ஆண்டு சந்தா: ரூ.50
ஆயுள் சந்தா: ரூ.500

இப்படிபட்ட இயக்கம்தான் தேர்தலில் வெற்றிபெருவது ஒன்றே நோக்கமாய், சலுகைகள் எனும் ஆசைக்காட்டி பிற்ப்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளவர்களை பழங்குடியினராய் மாற்றுவோம் என்று இடஒதுக்கீட்டு ஆசைகாட்டி அப்பாவி மக்களின் வாக்குகளை வாங்கி வென்றது. ஆனால் வெற்றியடைந்து மூன்று ஆண்டுகள் கடந்தும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நாடகமாடி வந்தது. எனவே குஜ்ஜார் இனமக்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென போராடதுவங்கி உள்ளனர்.

இந்த போராட்டத்தை பேசி தீர்க்கமுடியாத பா.ஜ.க அரசு துப்பாக்கிச் சூட்டை நடத்தி பல அப்பாவிமக்களை படுகொலை செய்துள்ளது. மக்களை நரவேட்டை ஆடுவது பா.ஜ கட்சிக்கு புதிதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. தேர்தலின் போது விதைத்த விணையை இப்போது அந்த அரசு அறுவடை செய்யத் துவங்கி உள்ளது. இப்போது குஜ்ஜார் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என தற்போது பழங்குடியுனர் பட்டியலில் உள்ள மீனா இன மக்கள் போராடத் துவங்கி உள்ளனர். இந்த எதிர்மறையான பிரச்சினை சாதிய மோதலாக தளம் மாறிஉள்ளது.

சமீபத்தில் தான் ராஜஸ்தான் மாநில முதல்வரையும் அவரது சகபாடிகளான அமைச்சர்களையும் கடவுள்களைப்போல் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கடும் சர்ச்சை கிளம்பியது. கடவுளே ஆனலும் துப்பாக்கிச்சூட்டை நடத்தினால் மக்கள் தூக்கி எறியாமல் விடமாட்டார்கள் என அறியாமல் பா.ஜ.க ஆடிவருகிற ஆட்டம் விரைவில் முடியும்.

இந்நேரத்தில் நமது தமிழகத்தில் உள்ள பத்திரிக்கைகள் அங்கு ஏதோ சாதி கலவரம் நடப்பது போல செய்திகளை வெளியிடுகினறன. இப்பிரச்சினைகளுக்கு காரணம் பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி என்ற இச்சம்பவத்தின் உண்மையை மக்களுக்கு சொல்ல மறுப்பதன் நோக்கம் புதிரானதுமல்ல. வர்க பாசம் அத்துனை எளிதில் மறைக்கக்கூடியதுமல்ல.

மேற்குவங்க நந்தி கிராமத்தில் மம்தா கட்சி குண்டர்களும், நிலப்பிரபுத்துவ ஆதரவு சக்திகளும் கலவரம் செய்தபோது தமிழகத்தில் உள்ள பத்திரிக்கைகள் அங்குள்ள அரசுதான் கலவரத்திற்கு காரணம் போல சித்தரித்தன. பல அறிவுஜீவிகள் உன்மையை மறைத்து சொந்த கற்பனையை கட்டுரையாக எழுதி தள்ளினார். மேற்கு வங்கத்தில் இரத்த ஆறு என்று பாட்டாளி பத்திரிக்கை கூட தலைப்பு செய்தி போட்டது. ஆனால் ராஜஸ்தான் கலவரங்களுக்கும் துப்பாக்கிச் சூட்டிற்க்கும் பா.ஜ.க அரசின் தேர்தல் வாக்குறுதிதான் காரணம் என்ற எளிய உண்மைகளைக்கூட இப்பத்திரிக்கைகள் வெளியிட மறுக்கின்றன. வாழ்க பத்திரிக்கை தர்மம்.

-ஆசிரியர் குழு




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com