Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2008

கனவிலும் நினைக்க முடியாததை வாழ்ந்து காட்டியவன் சே
தமிழில்: எஸ்.சுகுமார்

இன்று இருந்தால் அவனுக்கு வயது 80

இந்தச் செய்தி வேறு வகையில் நமது கவனத்தை ஈர்க்கும். அந்த நாட்களில் அந்த நாட்குறிப்பானது அதிக அளவில் விற்பனை ஆகியது என்று முடிகிறது. “பொலிவிய காலங்கள்’’ என்ற பிரதியைப் பெற. 1960ல் ஹவானாவில் பல மைல்கள் தொலைவிற்கு மக்கள் கியு வரிசையில் நின்றனர். அக்டோபர் 9,1967 நடுப்பகல் ஒன்று பத்துக்கு பொலிவியாவில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சே என்று பிரபலமாக அறியப்படும் புரட்சிக்காரன் எர்னஸ்டோ சேகுவாரா கொலை செய்யப்பட்டான் (சே என்றால் அர்ஜன்டீனாவில் ஏ நீயா என்று பொருள்) ஜான் லெனாள் என்ற கவிஞன் தனக்கென்று கொள்ளாமல் வாழ்ந்த தன்னிகரற்ற போராளி என்று புகழ்ந்து பாடப்பட்டவன் எப்படி மறக்க இயலும்.

கியூபாவில் தொழில் அமைச்சராக இருந்தவனை எப்படி நினைவில் கொள்வது. கரும்பு வயலில் வாரந்தோறும் சென்று கரும்புகளை அறுவடை செய்வான். ஆனால் ஒரு சல்லிக் காசு தன்னிடம் வைத்துக் கொள்ள மாட்டான். ஏனெனில் அவன் மானஸ்தன், பதவியையும், அதிகாரத்தையும் துறந்து தனியாக பொவிலிய காடுகளில் சுற்றி அலைந்து போராடி உயிர் நீத்தவனை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது.

1960களில் இருந்தவர்களுக்கு “சே’’ கனவிலும் நினைக்க முடியாததை நிகழ்த்தியவன் என்று தெரியும். பிரெஞ்சு அறிஞன் ஜூன் பால் சார்ட்ரே “நம் காலத்து முழு மனிதன்’’ என்று வர்ணித்தான். ஏனெனில் சே நோபல் பரிசு பெற்ற வரிசையில் இல்லை. ஆனால் சாதாரண மனிதனுக்கு சொந்தமானவன். மெக்சிகோ நாட்டு வரலாற்று ஆசிரியர் பாகோ இஃனாசியோ டையோ என்பவர் ஜெர்மன் கவி ஒருவர் கூறியதை சுட்டிக்காட்டினார்.

சே சாவினுள் புகுந்து வந்தவன். சாவில் சுற்றித்திரிபவன். சிறந்தவன், சிறப்பு மிக்கவன். மன உறுதி படைத்தவன். என்னுடைய நாட்டில் சே மறுமுறை இறக்க வேண்டும். அவன் இறப்பை நாம் எத்தனை பேர் இறந்தால் ஈடு செய்ய முடியும். நம்மிடையே சிரித்துக் கொண்டிருத்தவன் இன்று புல் பூச்சிகளுக்கு இரையாகிவிட்டான். அவனை எண்ணி வருந்துகிறவர்கள் எண்ணிப் பார்க்கட்டும், அவனை மறந்தும் மறக்க முயன்றால் மீண்டும் நினைவில் வருபவன்.

பொலிவியாவில் சே வுடன் இருந்த ரெகிஸ் டெப்ரே கடைசிகாலத்தை வர்ணிக்கிறார். சே சுட்டுக் கொல்லப்படுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் நடந்ததை கூறுகிறார் இவர். லா ஹிகேரே என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் ஜீலியா கோர்டெஸ் என்ற ஆசிரியைப் பார்த்து சே அறிய முற்பட்டான். மத போதனைகளும், இராணுவ தளபதிகள் பென்ஸ் காரில் சென்று கொண்டிருக்கும் ஒரு நாட்டில் விவசாய குடும்பப் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பதன் காரணத்தை வினவினார். அடுத்த இரண்டு நிமிடத்திற்குள் சே எதிராளிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். லத்தின் அமெரிக்காவில் சர்வாதிகார ஆட்சிக்கு இருந்த ஒரே எதிர்ப்பு சக்தி ஒரு நொடியில் மறைந்துவிட்டது.

மக்கள் முன் வாழ்ந்து வந்த சரித்திர நாயகன் தியாகியானான். புரட்சி வீரன் சே இறந்தவுடன் அந்த இடத்தை புரட்சிதான் பிடித்தது பொவிலியாவில் வறுமையில் வாழும் சுரங்கத் தொழிலாளர்கள், அர்ஜென்டைனாவில் சட்டை கூட இல்லாத பனாதைகள், கௌதமாலாவில் வாழும் இந்தியாவில் பிரேசில் மக்களிடமும் சேவும் அவன் விட்டுச் சென்ற புரட்சியும் இறக்கவில்லை.

இன்று கியூபாவின் பள்ளியில் குழந்தைள் முதலில் நான் சே போன்று வாழ்வேன் என்று சொல்லிவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார்கள். ஏனெனில் நாம் கனவிலும் நினைக்க முடியாததை நடத்திக் காட்டியவன் சே. அவன் மடிந்து 40 ஆண்டுகள் ஆகியும் அவன் நம்மிடம் இருக்கிறான். அவன் நம்மிடம் இல்லை. அவன் எந்த சுடுகாட்டில் இருக்கிறான் என்று தெரியவில்லை. ஆனால் எண்ணங்களை எப்படி கொல்ல முடியும் கனவினை எப்படி கொல்ல முடியும்?

நன்றி: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’
தமிழில்: எஸ்.சுகுமார்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com