வரதட்சணை
- உடுமலை ராசா
வாங்கமாட்டேன்னான் அவன்
தர மாட்டேன்னாள் அவள்
தந்தாலும் வாங்கமாட்டேன்னும்
வாங்கினாலும் தரமாட்டேன்னும்
முறுவலித்து முனகி நிற்க
தந்தாத்தானே வாங்கறதுக்குன்னும்
வாங்கினாத்தானே தர்றதுக்குன்னும்
வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடிக்க
அலைமோதலில்
அப்பா அம்மாக்களும்
மாமனார் மாமியார்களும் மூழ்கிக்கிடக்க
தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்போர்
தூண்டிலிட்டு மீன் பிடிப்போரையெல்லாம்
ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு
எதற்காக... எதை... யார்தருவது... ?
புரிதல்களோடு
முரசரைந்து கரம் கோர்த்தனர்
“இருவருமே தருவோம் இதயத்தை
இருவருமே பெறுவோம் இன்பத்தை”
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|