Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2007

இந்தியனுக்கு சுதந்திரம்
- பழனி இளையபாரதி

ஐம்பது ஆண்டுகால சுதந்திரம்
ஐயமுடன் திரும்பிப் பார்க்கிறேன்!
சுதந்திர தின பொன்விழாவாம்!
சுருக்கமாய் நினைக்கத் தோன்றுகிறது!
அரசியல்வாதிக்கு சுதந்திரம்
அளவிலா செல்வம் கொள்ளையடிப்பதில்!
அதிகாரிகளுக்கும் ஒரு வகை சுதந்திரம்
ஆண்டான் அவன் கையில் கிடைத்து விட்டால்!
ஆணுக்குப் பெண் சமமென்று பெண்ணை
அடிமைப்படுத்துவதில் ஆணுக்குச் சுதந்திரம்!
ஏர்பிடிக்கும் ஏழை விவசாயிக்கு
ஏக்கத்துடன் பார்க்கும் சுதந்திரம்
எப்போது அவன் கோவணம் போகுமென!
எதிலுமே சேராமல் நடுத்தர வர்க்கம்
ஏக்கத்துடன் பார்க்கும் விலைவாசிக்கும் சுதந்திரம்
ஏறிக்கொண்டே போவதால்!
இப்படி....
எல்லாவற்றிற்கும் சுதந்திரம் கொடுத்து
எதையும் மூட முடியாமல் சுதந்திரமாய் – இந்தியன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.