Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜூலை 2007

பல ஆண்டுகளைக் கடந்து மாண்டிசோரி கல்வி முறை
- என். மாதவன்

என்னோட பையனுக்கு வெண்ணீர் வைக்கக் கூடத் தெரியாது. எங்க வீட்டுக்காரருக்கு அவரோட பணுயன் அளவு கூடத் தெரியாது நான் தான் ஞாபகம் வைச்சுக்கிட்டு வாங்கறேன்.

Indian boys உனக்கு ஒன்ணிம் தெரியாது இந்தா இப்படிச் செய்.

நீ ஷு லேஸ் போட்டு முடிக்கிறதுக்கு ஜென்மம் ஆகும்.

இப்படிப்பட்ட வசனங்கள் கேட்காத அல்லது சொல்லாத ஆட்களே இருக்க முடியாது. ஆனால் நாம் செய்யும் அனைத்து வேலைகளும் பலவிதமான அனுபவங்களைத் தர வல்லவை. அதன் மூலம் நாம் முழுமை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அமெரிக்காவில் இன்றைக்கு பணம் அதிகம் செலவாகும் கல்விமுறை எது என்றால் மாண்டிசோரி கல்வி முறையாகும். வீட்டில் செய்யும் வேலைகளெல்லாம் விலையால் மதிக்கும் காலம் வந்தால் மட்டுமே வீட்டில குடும்பத்தை நிர்வகிக்கும் தலைவிகளின் கணவர்கள், என் மனைவியா? அவங்க வீட்டில சும்மாதான் இருக்காங்க என்று சொல்வது குறையும். இதிலிருந்து ஒரு கருத்து நிச்சயம் வீட்டு வேலைகளில் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை அது மிகவும் சாதாரணமானது என்றுதான் நினைக்கிறோம்.

ஆனால் உழைப்பே முதன்மையானது. உழைப்பிலிருந்துதான் முதல் உள்ளிட்ட அனைத்தும் திரள்கிறது என்ற மார்க்சிய விஞ்ஞானக் கூறுகளை உள்ளடக்கியதாக அமைவதுதான் மாண்டிசோரி கல்விமுறை. முதலில் நாம் துவƒகிய விஷயத்துக்கு வருவோம். இன்றைக்கு அமெரிக்காவில் மிகவும் பிரபலமடைந்து வருவதும் அதிகம் பணம் செலவுக்குள்ளாக்குவதுமான முறை இதுவாகும். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முதல்வர் சந்திரா பெர்னாண்டோ அவர்கள் அறிவியல் இயக்க நண்பர்களுடன் உரையாடினார். அப்போது அவர் சொன்ன தகவல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. சாதாரண உழைப்பாளிகளின் குழந்தைகளுக்காக மாண்டிசோரி அவர்கள் உருவாக்கிய முறை குழந்தைகளால் எளிமையாக கையாளக்கூர்பு. உழைப்பினையே செயல்பாடுகளையே மையமாகக் கொண்டதாக அமைந்தது.

ஆனால் பெரும் வசதி படைத்தவர்கள் குழந்தைகளை வளர்ப்பதையே ஒரு தொழிலாகப் பார்த்து அதற்குகூட குழந்தைகளை வளர்ப்பதையே ஒரு தொழிலாகப் பார்த்து அதற்குகூட ஆட்களை நியமிக்கும் மனநிலையில் பள்ளிக்கு சென்றபின்னர், அவர்களது அறையினை அவர்களே சுத்தம் செய்வது. அவர்கள் சாப்பிட்ட இடத்தினை முடிந்தவரை சுத்தம் செய்வது அவர்களது பெரும்பான்மையான வேலைகளை அவர்களாகவே செய்து கொள்ள பயிற்சி பெறுவதைப் பார்க்கும்போது எங்கள் குழந்தைகளை இதுபோன்ற வேலைகளை செய்வதற்காகவா இவ்வளவு பணம் செலவழித்து உங்கள் பள்ளியில் சேர்த்தோம் என்றுகூட கேட்கிறார்களாம்.

சரி அப்படி என்றால் உழைப்பின்மூலம் கல்வி கற்பது அவ்வளவு பயனளிக்கக்கூடியதா? என்ற கேள்வி எழுப்பி விடைகளைத் தேடுங்களேன். நம்மில் பலரும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டிருப்போம். நீச்சல் கற்றுக் கொண்டிருப்போம். இப்படி நமது உடலினை பயன்படுத்தி நாம் கற்றுக் கொள்வது அனைத்துமே முதலில் கடினமானதாகத் தோன்றினாலும் கற்றுக்கொண்ட பிறகு என்றைக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கிறது. நமது அனைத்துவிதமான புலன்களையும் பயன்படுத்தி நாம் எது ஒன்றை கற்கிறோமோ அதுவே எளிமையான கல்விமுறை என்பதே மாண்டிசோரி கல்விமுறையின் அடிப்படைக் கூறாகும். வேறுவகைகளில் கூறினால் கற்பது என்பதை கற்றுத்தருவது கற்றுக்கொள்வது என்ற ரீதியில் மட்டும் பார்க்காமல் ஒரு செயலை ஒரு குழந்தை கற்றுக்கொள்ள எப்படிப்பட்ட கற்றல் அனுபவங்களையெல்லாம் அளிக்க முடியும் என்று யோசித்து அதற்கேற்றபடி கற்றலை வடிவமைப்பதே இதன் தனிச்சிறப்பு.

இப்படி வடிவமைக்கப்படும் செயல்பாடுகள் உழைப்பினை, செயல்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுவதால் குழந்தைகளின் இயல்பான துருதுருவென இருக்க அதிகம் வாய்ப்பளிக்கப்படுகிறது. இது கற்றலை எளிமைபடுத்துவதாகவும் ஒருவிதத்தில் உத்திரவாதப்படுத்துவதாகவும் அமைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளின் சுயமரியாதையினை அங்கீகரிப்பதற்கும் அவர்களை பாராட்டுவதற்கும் இம்முறையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் கொஞ்சம் காலதாமதமானாலும் அவர்களாகவே சமூகம் எதிர்பார்க்கும் (ஒருவிதமான...?) ஒழுங்குக்கு...? அவர்கள் வந்துவிடுகின்றனர்.

மற்றபடி குழந்தைகளின் இயல்பினை மதித்தல், குழந்தைகள் உலகிலேயே அவர்களை வளர்ˆதல், பெரிய மனிதர்களுக்கான உணர்வுகளுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தினை அளித்தல் போன்றவைகள் இம்முறையினை உலகெங்கும் இன்றளவும் நீடித்து நிலைத்து காலத்துக்கேற்ற பரிணாமம் பெற்று புத்துணர்ச்சி பெற உதவிகரமாக உள்ளது.

இத்தாலியில் பிறந்த கல்வியாளர் தமது வாழ்க்கையின் பெரும்பகுதியினை இந்தியாவில் கழித்து நமது நாட்டின் உழைப்பாளி மக்களின் குழந்தைகளின் கல்விக்காக தமது நேரத்தினை பயன்படுத்தியவர். (பார்க்க பெட்டிச் செய்தி) அப்படிப்பட்டவரின் நூற்றாண்டு அவரது சிந்தனைகளை மேலும் மெருகேற்றி கொண்டு செல்ல அரியதொரு வாய்ப்பு. சரி இந்த கட்டுரையினை படிப்பவர்களுக்கு ஒரு போட்டி. ஒரு நாளில் நாம் எத்தனை முறை அடுத்தவர்களது கருத்துக்களை (அது சரியோ தவறோ) நாம் எப்படி நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம் என்று யோசிப்போமா? ஏனென்றால் நமது ஆதரவான கருத்துக்கு நாம் எப்படி ஆதரவளிக்கிறோம் என்பதைவிட எதிர்மறையான கருத்துக்கு நாம் எப்படி நமது வாதத்தினை முன்வைக்கிறோம் என்பதே அவர்களுக்கும் நமக்கும் உள்ள உறவினை அடுத்தடுத்து தீர்மானிப்பதாக உள்ளது.

எனவே நபர்களை வெறுப்பதை விடுத்து அவர்களது குணாம்சங்களை நளினமாக விமர்சித்து நமது தரப்பு நியாயங்களை ஆத்மசுத்தியோடு விளக்குவோம். இந்த பண்புகளை வளர்த்துக் கொள்வதும் மாண்டிசோரிக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

ஏனென்றால் அவர் குழந்தைகளை மதிக்க வேண்டும் என்று வாதிட்டதெல்லாம் அவர் கனவு கண்ட சமுதாயத்தின் வெளிப்பாடுகளே... குழந்தைகளையே மதிக்கும் கலாச்சாரம் வரும்போது நமது கனவுகள் பலவும் நனவாகும்தானே...

அவரது கல்வி முறை அவரது பெயராலேயே அறியப்படும் அளவுக்கு தனது கொள்கையில் அளவற்ற ஈடுபாட்டோடு விளங்கியவர். மாண்டிசோரி அம்மையார் அவர்கள் 1870ல் இத்தாலி நாட்டில் பிறந்தவர். இத்தாலி நாட்டின் முதல் பெண் மருத்துவரும் இவரே. அடிப்படையில் மருத்துவராக இருந்தாலும் குழந்தைகளின் கல்வியின்பால் இவருக்கு ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாகவே ஷட்வ்இட்ழ் முழுவதும் கல்வி பற்றிய ஆராய்ச்சிகளிலேயே கவனம் செலுத்தினார்.

இவரது சமகாலத்தவர்களாக அலெக்சாண்டர் கிரகாம்பெல், ஹெலன் கெல்லர், எடிசன் போன்றோரும் இவரை அவ்வப்போது உற்சாகப் படுத்தியிருக்கின்றனர். 1907ல் முதன்முதலில் 60 ஏழைக் குழந்தைகளுக்கான கல்வி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் 1915ல் சான் பிரான்சிஸ்கோவில் நடை பெற்ற உலக கண்காட்சியில் இவர் அமைத்த கண்ணாடிப் பள்ளியறை பலரிடம் நல்லதொரு தாக்கத்தினை ஏற்படுத்தியது. 1919ல் தமது முறையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முறையினை இவர் வடிவமைத்தார்.

தான் பிறந்தநாட்டில் பாசிசம் பரவுவரை எதிர்த்தார். முசோலினியின் செயல்பாடுகளைக் கண்டித்தார். இதனால் கோபமடைந்த முசோலினி இவரை நாட்டை விட்டு கடத்தினார். இதுவே உலகிற்கு நன்மை அளிப்பதாகியது. பின்னர் ஐரோப்பா. ஸ்ரீலங்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமது கல்வி முறையினைப் பரப்பினார்.
குழந்தைகளுக்கு அவர்களது சுற்றுப்புறத்திலுள்ள வற்றிலிருந்து உட்கிரகிக்கும் ஆற்றலை வளர்த்து கல்வி தானாக வரும் என்பதும் இவரது ஆழ்ந்த நம்பிக்கையான ஆட்டம். பாட்டம் கொண்டாட்டம் மாண்டிசோரி வகுப்பறைகளின் தனிச்சிறப்பாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com