Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2009

ஒரு புதிய விடுதலையை நோக்கி சில அனுபவங்கள்,
சில பாவங்கள்
எஸ்.வி.சசிக்குமார்

இன்னும் மூன்றே வாரங்களில் ஜனவரி 20, 2009 அன்று அமெரிக்காவின் 56-வது அதிபராக மட்டுமின்றி அந்நாட்டின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க அதிபர் என்ற முறையிலும் பதவி ஏற்க இருக்கிறார் பாரக் ஹசேன் ஒபாமா. தமது பதவி ஏற்பு விழாவிற்கு ஒபாமா எடுத்துக்கொண்டிருக்கும் லட்சியக் கோட்பாடு என்ன தெரியுமா? “புதிய விடுதலையின் பிறப்பு’’ என்பதுவே அது. 1863இ-ல் அமெரிக்காவின் 16ஆவது அதிபராக இருந்த ஆபிரகாம்லிங்கனின் புகழ்பெற்ற ஜெட்டிஸ்பர்க் உரையிலிருந்து எடுக்கப்பட்ட, உற்சாகமூட்டும், உணர்ச்சிமிக்க சொற்றொடர் தான் அது. தமது “விடுதலை பிரகடனம்’’ மூலம் அமெரிக்க நாட்டின் குறிப்பிடத்தக்க மக்கள் திரளின் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு லிங்கன் எடுத்த முயற்சியின் தொடக்க நாட்களை நன்றியுடன் நினைவுகொள்ளும் முறையில் புதிய அதிபர் பதவியின் தொடக்க வாசகமாக ஒபாமா எடுத்துக் கொண்டிருப்பது பொருத்தமானதே.

obama ஒபாமாவின் வெற்றியைக் கருப்பர் இனத்தின் மிகப்பெரிய சாதனையாகவே உலகம் பார்ப்பதில் வியப்பொன்றுமில்லை. ஒடுக்கப்பட்ட மக்களாக ஏறத்-தாழ இருநூற்றாண்டுகளுக்கும் மேல் துயரத்தில் உழன்று கொண்டிருந்த மக்களின் மத்தியிலிருந்து அமெரிக்க நாட்டின் உச்சப் பதவிக்கு வந்திருப்பது சாதாரண விஷயமில்லை. இந்நிலையை அவர்கள் அடைவதற்கு முன் எத்தனை தடைகளை அவர்கள் தாண்டியிருக்க வேண்டும்? எத்தனை போராளிகள் தங்கல் உயிர்களைப் பலி கொடுக்க நேர்ந்திருக்கும்? மார்ட்டின் லூதர் கிங், குடி உரிமைத் தலைவர் ரோசா பார்க்ஸ் போன்று எத்தனை தியாக சீலர்களை அம்மக்கள் பலி கொடுக்க வேண்டியிருந்தது? ஆபிரகாம் லிங்கன் 1863 ஆம் ஆண்டிலேயே அம்மக்களின் அடிமை விலங்குகளை அறுத்தெறிந்து விட்டாரென்றாலும் அம்மக்களின் வாழ்நிலையை மேம்படச் செளிணியும் முயற்சிகள் தொடங்குவதற்கு மேலும் 78 ஆண்டுகளாயின. 1941இல் அப்போதைய அதிபர் ஃபிராங்ளின் டி ரூஸ்வெல்ட் தான் முதல் முயற்சி எடுத்தார். அமெரிக்கக் கூட்டாட்சியின் தொழில் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் விநியோகத்தில் கருப்பர் இனத்தவர்களுக்கு எந்தப் பங்கும் கொடுக்காமல் வைத்ததிருந்த அமெரிக்க மக்களின் செயல்களைத் தடுத்து அவர் 1941-இல் இயற்றிய தடைச்சட்டமன் இவ்விஷயத்தில் அமெரிக்கா எடுத்த முதல் முயற்சி. பாரபட்சமற்ற விநியோகத்தை இது உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து 1964-இல் அதிபர் லிண்டன் பி. ஜான்சன் குடிஉரிமைச் சட்டத்தை இயற்றி கருப்பர் இன மக்கள் அவர்களது அன்றாட வாழ்வில் சந்திக்க நேர்ந்த பாரபட்சமான நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டுவந்தார்.

பள்ளிகளிலும், பேருந்துகளிலும், அனுபவித்து வந்த ஓரவஞ்சனைகளை முறியடிக்கும் வகையில் இச்சட்டம் அம்மக்களுக்குப் பெரிதும் கைகொடுத்தது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லிண்டன் பி.ஜான்சன் இச்சட்டத்தை இயற்றியது முற்றிலும் துணிச்சலான செயலாகக் கருதப்பட்டது.ஏனென்றால் இந்த செயல்பாடு நாட்டின் தென்பகுதி மாநிலங்களில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த ஜனநாயகக் கட்சிக்கு வினையாக வந்து முடியும் என்று அந்நாளில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஜான்சன் தளரா நம்பிக்கையுடன் சட்டத்தை உறுதியோடு நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இந்தத் தேர்தலின் போதும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு கட்சியின் செல்வாக்கை இழந்துவிட நேரிடுமோ என்ற அச்சம் சிறிதுமின்றிப் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றிருக்கிறார் என்றால் ஒபாமாவின் உறுதிப்பாடே காரணம். ஜான்சனின் மன உறுதிக்குச் சிறிதும் குறைந்ததல்ல தன்னுடைய துணிச்சல் என்று ஒபாமா நிரூபித்திருக்கிறார். ஆதிக்க சக்திகளின் மூர்க்கத்தனமான தடைகளையெல்லாம் தாண்டி ஒபாமா பெற்ற வெற்றிஇந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில்வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை. இத்தகைய வரவேற்பின் ஒரு பிரதிபலிப்புதான்உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியை “இந்திய ஒபாமா’’ என்று அழைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரு பகுதியினர் மகிழ்ந்திருப்பது, சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் பிரச்சனைகளை இனம்சார்ந்த ஓரவஞ்சனையைப் போன்ற ஒரு பிரச்சனையாக ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக நாடுகளின் அரங்குகளில் கொண்டு வர முயற்சித்தது நினைவிற்கு வரலாம்.

தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக இந்திய அரசின் ஆரசியல் சட்டம் பிரகடனப் படுத்தி ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகும் தலித் மக்கள் வேறு வகைகளில் இக்கொடுமைகளுக்கு ஆளாகித் துயர்படுவது எல்லோரும் அறிந்த விஷயம் தானே. எத்தனை, எத்தனை உரிமைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன? என்னென்ன கொடுமைகளையெல்லாம் அவர்கள் அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறது. சமூக, பொருளாதார சுரண்டலினால் இந்திய மக்கள் மட்டுமின்றி பிறபகுதியினரும் கருப்பு இன அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், அவர்களது, மேம்பாட்டிற்கும், உறுதியான விடுதலை வேட்கையை எடுக்கும் முயற்சிகளிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன.

ஒபாமாவின் வெற்றி ஒரு தனிநபர் வெற்றியாக மட்டுமே பார்க்க முடியும் என்றாலும் இதை அடைய அவர் எடுத்துக் கொண்ட பெருமுயற்சியின் பின்னணியாக ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் மேம்பாடு பற்றிய பல முயற்சிகள் ஊடகங்கள் வழியாக உலக மக்களின் பார்வைக்கு வந்திருக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளில் அதிபர் ஜான்சன் கொண்டுவந்த குடிஉரிமைச் சட்டத்தின் காரணமாக அமெரிக்க மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய விழிப்புணர்வு புதிய தலைமுறை அமெரிக்க மக்களிடம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்கள் தாத்தாக்கள், பாட்டிகள் போலன்றி இனத்துவேஷ மற்றவர்களாக மாறியிருப்பது கண்கூடாகத் தெரிவதாக ஆளிணிவாளர்கள் பலர் கூறியிருக்கின்றனர். கருப்பர் அல்லாது பேராசிரியர்கள், கல்வியாளர்கள் போன்ற அனைத்துப்பகு தியினரும் மிகுந்த அக்கரையோடு இயல்பாகவே கருப்பர் இன மக்களின் மேம்பாட்டுக்கு முயற்சிக்கின்றனர் என பத்திரிகைக் கட்டுரைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தத் தலைமுறை மாற்றம் பெரும்பான்மையினரின் துவேஷ, வெறுப்பு மனப்பான்மைகளை விரைவில் அடியோடு ஒழித்துவிட முடியுமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இம்மாறுதலைக் கொண்டு வந்தது அமெரிக்க அரசினுடைய சில சட்டங்களே.

இந்தியாவைப் போன்று இடஒதுக்கீடு அங்கில்லை என்றாலும் “உறுதியான அரசு நடவடிக்கை’’ (Affrinative Action) மூலமாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓரவஞ்சனையற்ற, சமத்துவ முயற்சிகளை எடுத்து அம்மக்கள் பல்வேறு துறைகளில் முன்னேற வாளிணிப்புகள் மக்களின் அனைத்துப் பகுதி உதவியோடு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன என்று ஆளிணிவுகள் கூறுகின்றன. கல்வி, வேலை வாளிணிப்பில் மட்டுமின்றி, தொழில்முயற்சிகள், அரசு ஒப்பந்த (contracts) செயல்பாடுகளிலும், பொருளா தார நடவடிக்கைகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இம்முயற்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்பட்டிருக்கிறது என்பது பாராட்டிற்குரிய விஷயம் தானே.

இந்தியாவில் அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியாகவே வந்த இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் கல்வி, வேலை மற்றும் அரசியல் அதிகாரம் சார்ந்த முயற்சிகள் அனைத்திற்கும் உதவியாக நிறைவேற்றப்படும் வாய்ப்பு இருந்தும்உண்மையில் இங்கு இன்னமும் அது முழுமையாகப் பயன்படவில்லை என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகப் பலன் கிடைக்கவில்லை என்பதை மத்திய, மாநில அரசுகளின் வேலை, இடங்கள் (Vacancies) ஆயிரக்கணக்கில் காலியாகவே இருப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணங்களில் ஒன்று இடஒதுக்கீடு அமலாக்கப்படுவதை கண்காணிப்பற்கான எந்த ஒரு நிறுவனமும் தேச அளவில் ஏற்படுத்தப்படவில்லை என்பது தான். அமெரிக்காவில் கறுப்பர் சார்ந்த உறுதியான நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஒரு அமைப்பு நிறுவப்பட்டு அது மிக்க கவனத்துடன் தனது பணியைச் செளிணிது கொண்டிருப்பதாக பல கட்டுரையாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இந்தியாவில் கண்காணிப்பு அமைப்பு இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிமன்றங்களுக்குத் தான் தங்கள் புகார்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இதில் அவர்கள் இரண்டு கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுவதற்குத் தேவையான பெரும் நிதி அவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை. தவிரவும், மாதக்கணக்காக, வருடக்கணக்காகக் காத்திருப்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமில்லை. இன்னொரு சிக்கலையும் அவர்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. நீதியரசர்களில் பெரும்பாலானவர்கள் இடஒதுக்கீடு கொஷீமீகையையே எதிர்க்கும் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் அவ்வப்போதுவரும் தீர்ப்புகள் மூலம் தெரிய வருகின்றன. இவ்விஷயத்தில் கருப்பர் இனத்தாரைவிடவும் பரிதாபநிலையில் தலித்துகள் இருக்கிறார்கள் என்று சொல்வதில் போலன்றி தலித்துகள் பன்முகத்தாக்குதல் களையும், தடை-களையும், எதிர்புக்களையும் இங்குள்ள சாதிக் கட்டமைப்பின் காரணமாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. சமகல்வி என்ற கொஷீமீகையைக் கூட அனைத்துப் பகுதி மக்களின் ஆதரவோடு நிறைவேற்றும் முயற்சி அரசிடம் இல்லை என்பது கசப்பான உண்மை.

ஆம். உண்மைதான் கருப்பர் இன மக்களைப்போல இரண்டு, மூன்று நூற்றாண்டுப் பிரச்சனையல்ல தலித் மக்கள் பிரச்சனை, பன்னூறு ஆண்டுகள் ஊறிய சாதி சார்ந்த ஒடுக்குமுறைப் பிரச்சனை இது. பலம் வாய்ந்த பழமையாளர்கள் மற்றும் துவேஷ வெறியர்களின் அரவணைப்புடன் கட்டிக்காக்கப்படும் சாதியக் கண்ணோட்டத்தைத் தாங்கிப்பிடிக்கும் ஆதிக்க சக்திகளை, அவர்களின் பன்முக எதிர்ப்புகளை எதிர்த்துப் போராடிப் பெற வேண்டிய பொறுப்பு தலித் மக்களுக்கு மட்டுமல்ல,அவர்கள் நிலையை உணர்ந்திருக்கும் அனைத்துப்பகுதி மக்களுக்கும் உண்டு. இது அமெரிக்க அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாக இருக்கும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com