Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2009

இளைஞர் எழுச்சியும் இயக்கங்களும் - 4
நாங்கள் தகர்ப்போம்! காரணம் நாங்கள் வலிமையானவர்கள்!
ஏ.பாக்கியம்

1848இன் துவக்கத்தில் பாலிங்கேரி கிராமத்தில் துவங்கிய எழுச்சி முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து பல இடங்களில் போராட்டம் தலைதூக்கியது. இங்கிலாந்து அரசு அ டக்குமுறைகளை கடுமையாக்கியது. பலர் கைது செய்யப்பட்டனர். பலர் பிரான்சிற்கும் , அமெரிக்காவிற்கும் தப்பிச்சென்றனர். 1849இல் கடைசியாக மிச்சேல் என்ற வழக்கறிஞர் மற்றும் ஜேம்ஸ்மின்டன் தலைமையில் நடைபெற்ற எழுச்சியும் நசுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். இளம் அயர்லாந்து சொந்த நாட்டிலும் அந்நிய நாட்டிலும் தலைமறைவாக செயல்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வமைப்பினர் முன் முயற்சி எடுத்து அமெரிக்காவில் குடியேறியவர்களை அணிதிரட்டி குடியரசு சமூகம் (IRB) என்றஅமைப்பை உருவாக்கினர். பென்னியன் (fenians)என்று பூர்வகுடி மக்கஷீமீ பெயராலும் இவ்வமைப்பை அழைப்பார்கள். ஐரிஷ் குடியரசு சமூகமும் , இரகசிய இராணுவ அமைப்பாக ஆயுதம் தாங்கி போராடியது. 1860 முதல் 1870 வரை தீரமிக்க போராட்டங்களை நடத்தியது. 1867இல் செப்டம்பரில் இதன் முக்கிய தலைவர்கள் கெல்லி மற்றும் டிசே ஆகிய இருவரையும் விடுவிக்க நடந்த போரில் ஒரு காவலர் இறந்தார். இதற்காக இதன் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, தூக்குதண்டனை அளிக்கப்பட்டனர்.

youth இந்த கொடூர தண்டனையை எதிர்த்தும் அயர்லாந்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தும், தொழிலாளர் சங்கத்தில் காரல்மார்க்ஸ் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .இளம் அயர்லாந்தின் முதல் எழுச்சி 1830 முதல் 1840 வரை இராபர்ட் எம்மட் மற்றும் ஓ கன்னல் ஆகியோரால் தலைமையேற்று நடத்தப்பட்டது.இரண்டாவது எழுச்சி ஓபிரையன், டேவிஸ் போன்ற-வர்களால் தலைமையேற்கப்பட்டு 1840 முதல் 1860வரை நடத்தப்பட்டது .

1860 முதல் பென்னியன் அமைப்பாக மூன்றாவது எழுச்சி ஏற்பட்டது. அயர்லாந்தின் தேசிய உணர்வுக்கும், ஆக்கிரமிப்பை எதிர்த்த ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கும் இளம் அயர்லாந்து அமைப்பினர் அடித்தளமிட்டனர். அதன் தொடர்ச்சி அடுத்த நூற்றாண்டிலும் தொடர்கிறது. இளம் அயர்லாந்தியர்களை பற்றி 100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளதை அறிந்தால் அதன் ஆற்றலையும் செயலையும் புரிந்துகொள்ள முடியும். இளம் ருஷ்யா நாங்கள் தகர்ப்போம், காரணம் நாங்கள் வலிமையானவர்கள் நாங்கள் அழிக்கப்பட்டாலும், எங்களது செயல் நியாயமானது 1862இல் டர்ச்னேவ் எழுதி வெளிவந்த தந்தையும் மகனும்என்ற நாவலில் அன்றைக்கு செயல்பட்ட நிஹிலிச இளைஞர்களை பற்றிய வர்ணனை இது.

19ஆம் நுற்றாண்டில் பெரியநாடாகவும், அதிகமக்கள் தொகை கொண்ட நாடாகவும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவும்,சட்டம், சட்டமன்றம் எதுவுமற்று . சார் மன்னனின் வானாளவிய அதிகாரம் கொண்ட நாடாக ருஷ்யா இருந்தது . 19ஆம் நுற்றாண்டின் மத்திய காலத்தில் ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பாதிரியார்களின் எண்ணிக்கையும் , மடத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் சரிபாதியாக குறைந்தது. இதற்கு நேர்மாறாக அதிகாரிகள் வர்க்க எண்ணிக்கை இக்காலத்தில் (1804_-1840) மூன்று மடங்காக அதிகரித்து. ருஷ்யாவிலிருந்த ஐந்து பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தது. வழக்கமாக உயர்தட்டு மக்களின் மாணவர்களுக்கு பதிலாக, நடுத்தர, கீழ்நடுத்தர பிரிவைச் சேர்ந்த எண்ணற்ற இளைஞர்கள் பல்கலை கழகங்களுக்கு படிக்கச் சென்றனர். இதே காலத்தில் 1830_1860இல் ருஷ்யாவின் அரசியலில் தத்துவார்த்த போராட்டங்கள் துவங்கியது. 1848இல் கம்யூனிஸ்டு அறிக்கை வெளியிட்டது இதை மேலும் தீவிரப்படுத்தியது. பல எழுத்தாளர்கள் சோசலிசம்தான் தீர்வு என்று எழுதினர். அடிமைகள் விடுதலை, அரசின் அதிகாரம் குறைத்தல், பத்திரிகை சுதந்திரம் பற்றி எழுதினர். மறுபுறம் பக்கூன் போன்றவர்கள் அராஜகவாத கருத்துக்களை விதைத்தனர்.

அனைத்தும் அழித்தொழிக்கப்படவேண்டும் என்று பக்கூனின், கிரஸ்ட்கின் ஆகியோர் போதித்தனர் . இந்தப் பின்னணியில் ருஷ்ய இளைஞர்களின் செயல்பாடுகள் அரசியல் நடவடிக்கையில் வெளிப்படத்தொடங்கின. பல்கலைக்கழகங்கள் அரசியல் நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்தன. 1861இல் சார் இரண்டாம் அலெக்சாண்டரை கொலை செய்ய நடந்த முயற்சி தோல்வி அடைந்தது.1866ஆம் டிமிட்ரிவ் கரக்கோசவ் என்ற மாணவன் குற்றஞ்சாட்டப்பட்டு கசான் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். தோல்வி அடைந்த இந்த கொலை முயற்சியால் மாணவர்களின் கல்லூரி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. பல கட்டுப்பாடுகள் புகுத்தப்பட்டு மாணவர்கள் அடக்கப்பட்டனர். ஆனால், 1881இல் கொலைத்திட்டம் தீட்டப்பட்டு, சார் இரண்டாம் அலெக்சாண்டர் படுகொலை செய்யப்பட்டான். மாணவர்கள் இப்படுகொலையை பரவலாக வரவேற்றாலும் , சார் மூன்றாம் அலெக்சாண்டரின் அடக்குமுறைகளையும் ஆயிரக்கணக்கான மாணவர்களை கைதுசெய்யவுமே வழி செய்தது. 1857 லிருந்து 1890 வரை மாணவர்களிடையே 83க்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கில் பல்கலைக் கழகங்களிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 1861இல் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழக மாணவர்களில் 43 சதவீதம் தண்டிக்கப்பட்டுள்ளனர். காரணம், மூன்றுக்கும் மேற்பட்ட உள்துறை அமைச்சர்களை மாணவர்கள் கொலை செய்துள்ளனர்.

பல மாணவர்களை சைபீரிய காடுகளுக்கு நாடுகடத்தி உள்ளனர். இளம் ருஷ்யர்களின் ஸ்தாபனம் சிறந்த அமைப்பாகவும் , நவீன வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்துள்ளது. குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்கள் கிளை, மத்தியக் குழு, ரகசிய அச்சகம் என அமைப்பை முறைப்படுத்தி உஷீமீளனர். சுற்றுப்புறத்தை அறிதல், பிரச்சனைகளை தேடித்தெளிவு பெறுதல் பிறகு ஆர்பாட்டம், வேலைநிறுத்தம் ,படுகொலை என்று செயல்படுதல் போன்ற முறைகளில் அமைப்பின் செயல்பாட்டை வடிவமைத்துள்ளனர்.

இளம் ருஷ்யர்களின் செயல்பாடுகளால் சாரின் ருஷ்யாவை ஒட்டுமொத்த மறுசீரமைப்பிற்கான வழிவகைகளை உருவாக்கியது. நிஹிலிசத்தின் செல்வாக்குடன் இருந்த இளைஞர்கள் சர்வாதிகாரத்தையும், பொருளாதார சுரண்டலையும் எதிர்த்தனர். அடுத்து உருவான நரோத்னிக்குகள் (பழங்குடி மக்களின் பெயர்) மக்களிடம் செல்லுதல், அனைத்து சட்டத்தையும் புறக்கணித்தல், மக்கள்தாங்களாகவே பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று செயல்பட்டனர்.

முற்போக்கு அறிவுஜீவிகளால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் கற்பனாவாத அமைப்பை நோக்கி அணிதிரண்டு புதிய மாற்றத்தை கோரினர். இதே காலத்தில் சார் இரண்டாம் அலெக்சாண்டரின் சீர்திருத்தங்களை ஆதரித்த இளைஞர் அமைப்புகளும் செயல்பட்டன.

இக்காலத்தில் ருஷ்யாவின் இசைக்கலாச்சாரத்தில் ரொமான்டிசத்தை புகுத்தி மக்களிடம் பழைமையான முறைக்கு எதிராக புகழ்பெற்ற க்யூ, கிளிங்கோ, மஸ்ஸோகி, ரிம்ஸ்கி-கார்சாகோ, பரோடின் என்ற ஐந்து இளைஞாகள் ருஷ்ய இளைய தலைமுறையை வென்றெடுத்தனர். 1890ஆம் ஆண்டுகளுக்கு பிறகு ருஷ்யாவிலும் இளைஞர்கள் சமூக ஜனநாயக இயக்கங்களை நோக்கி அணிதிரண்டனர். இளம் வியன்னா 1840 முதல் 1880 வரை ஆஸ்திரிய நாட்டில் வியன்னாவில் செயல்பட்ட இளைஞர்களின் நடவடிக்-கைகளை இளம் வியன்னா என்று அழைக்கின்றனர். தேச ஒற்றுமை , சமூக நீதி ,பொருளாதார வளம், சமூக மதிப்புகள் ஆகியவையே இக்காலத்தில் இளம் வியன்னா வினரின் செயல்களமாக அமைந்தது. வியன்னாவை ஜெர்மனியுடன் இணைத்து மகாஜெர்மனி உருவாக வேண்டும் என பல்கலைக் கழக மாணவர்கள், இளைஞர்கள் தெருக்களில் இறங்கினர். ஜெர்மனி தேசியத்தைவிட ஆஸ்திரிய தேசியம் உயர்ந்தது என்ற பிரிவினருடன் மோதல் , போராட்டங்கள் தொடர்ந்தது. சமூக நீதியை பொருத்தவரை இளம் சோசலிஸ்டு தலைவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை, தொழிற்சங்க உரிமை, என்ற கோரிக்கையுடன் அணிதிரண்டனர். பொருளாதார நெருக்கடிக்கு எதிரான இயக்கம், பழைய பாரம்பரிய ஆஸ்திரிய நாட்டு தலைமைக்கு எதிராக இளைஞர்களை அணிதிரளச் செய்தது. ஜெர்மனியை போன்றே இருவித மாணவர் சங்கங்கள் களத்தில் இருந்து போராடினர். 1860 முதல் 80 வரை இலக்கிய படைப்புத்துறையில் புத்தெழுச்சியை இளம் வியன்னாவினர் ஏற்படுத்தினர் . புதிய பல உரிமைகள் பெறுவதற்கும் வாக்குரிமை பெறுவதற்கும் இளம் வியன்னாவின் போராட்டங்கள் உதவி செய்தன. இதே போன்று 1830 முதல் 1890 வரையிலான இக்காலத்தில் போலந்திலும், சுவிட்சர்லாந்திலும் இளைஞர்கள் அமைப்புகள் செயல்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் 19ஆம் நுற்றாண்டில் 1815க்கு பிறகு பல நாடுகளிலும், பல பிரதேசங்களிலும் இளைஞர் இயக்கங்கள் தோன்றின. பல எழுச்சிகள் ஏற்பட்டன. இவ்வியக்கங்கல் தோன்றவும், செயல்படவும், அந்தந்த நாட்டின் குறிப்பிட்ட சூழ்நிலைகள் காரணமாக இருந்தன. ஆனாலும் சில பொதுவான காரணங்கள் இவ்வியக்கங்கள் தோன்றுவதற்கு அடித்தளமிட்டன.16 முதல் 25 வயதுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை இக்காலத்தில் பலமடங்கு உயர்ந்தது.அயர்லாந்து மட்டும் 1848இல் கடுமையான பஞ்சத்தால் மக்களும், இளைஞர்களும் குடிபெயர்ந்ததால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது. இளம் அயர்லாந்தின் சில எழுச்சிகள் தோல்வியடைய இதுவும் பிரதான காரணமாக அமைந்தது. மற்றொரு காரணம் உயர் கல்வி நிலையங்கள் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவியது. மாணவர்களின் எண்ணிக்கை பெருகியது.இக்காலத்தில் உருவான இளைஞர்கள் இயக்கத்தில் பங்கேற்றவர்கள் பல்கலை மாணவர்களும், பட்டம் முடித்து வெளியே வந்தவர்களும்தான். பெரும் பாலான இளைஞர்கள் வயதாலும், அவர்களின் அடித்தள வாழ்க்கையும் கூட இயக்கங்களில் பங்கேற்க பொதுவான காரணங்களாக அமைந்தது. இக்காலத்தில் ஐரோப்பா முழுவதும் தேசியவாதம், குடியாட்சி, வாக்குரிமை, சுயநிர்ணய உரிமை, ஆகிய கோரிக்கைகள் அனைத்தும் இளைஞர் அமைப்புகள் உருவாக பொதுவான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. தேசியவாதமும், சுதந்திரமும், சமத்துவமும் இளைஞர்களை திரட்டுவதற்கு சக்திவாய்ந்த கருவியாக அமைந்தது. இக்காலத்தில் நடைபெற்ற நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களும், யுத்தங்களுக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தங்களாலும், இளைஞர் அமைப்புகள் திரள்வதற்கு காரணமாக அமைந்துள்ளன.

நெப்போலியனிக் யுத்தம் (1803-_15), கிரிமியன் யுத்தம் (1854_56) இத்தாலி இணைப்பு யுத்தம்(1859) ஆஸ்திரிய -பிரஷ்ய யுத்தம் (1866) , பிராங்கோ, பிரஷ்ய யுத்தம் (1870_71) போன்ற யுத்தங்கள் நடைபெற்றது. யுத்தத்தை எதிர்த்தும், ஒப்பந்தத்தை எதிர்த்தும் தோல்வியடைந்த நாட்டின் ஆட்சிமுறையை எதிர்த்தும் இளைஞர் இயக்கங்கள் அணிதிரண்டன. தத்துவார்த்த அடிப்படையில் உருவான சிந்தனை போக்குகள் இளைஞர் இயக்கங்களுக்கு உதவின.
ஒரே மொழி பேசக்கூடியவர்கள்,சோசலிசம், கற்பானாவாத சோசலிசம், கம்யூனிசம் போன்ற இசங்கள் அனைத்து இளைஞர் இயக்கங்களையும், குறிப்பாக கற்பனாவாத சோசலிச கருத்துக்கள் மேலோங்கி இருந்தது. ஐரோப்பிய இளைஞர் இயக்கங்களுக்கு மற்றொரு மிக முக்கிய பொதுக்காரணங்களாக அமைந்தது. வசீகரமும், ஆற்றலும், ஒற்றுமைப்படுத்தும் திறமையும், விரைந்து கிளர்ச்சி செய்யும் தன்மையும் கொண்ட தலைவர்கள் அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனி முதல் அயர்லாந்து வரை இருந்த அனைத்து அமைப்புகளுக்கும் இது போன்ற தலைவர்கள் அமைந்திருந்தனர். ஐரோப்பாவின் முதல்கட்ட எழுச்சியில், அரசியல் ரீதியாகவும் போராட்டங்கஷீமீ நிகழ்ந்தது.

இதேபோல் இசையில் மொசார்ட் முதல் ருஷ்யா வரை பலமாற்றங்களும், புதுமைகளையும் புகுத்தினர். கெதே, கில்லர் முதல் விக்டர் ஹியுகோ வரையிலான நாடகங்களும், பிரெஞ்சு நாட்டு ஓவியங்களும் என பலதுறைகளிலும் இளைஞர் இயக்கங்கள் தங்களது பங்கை செலுத்தியுள்ளனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com