Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2009

புரட்சி என்னதான் செய்யும்!

கியூபா புரட்சியின் வெற்றி செய்தி அன்று தான் வந்தது. ஆம். 1959ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி சர்வாதிகாரி பாடிஸ்டா நாட்டை விட்டு வெளியேறினார். புரட்சிக்குப் பின் பல்வேறு தடைகளைத் தாண்டி வந்த கியூபா, இன்று புரட்சியின் பொன்விழா நாளைக் கொண்டாடுகிறது. இந்த ஐம்பதாண்டுகளில் கியூபா நிகழ்த்திய சாதனைகள் அசாதாரணமானது.புரட்சிக்கு முன் மூன்றில் ஒருவர் எழுத்தறிவில்லாதவராக இருந்தார். 6 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே செல்லவில்லை. 6 சதவீதம் பேர் மட்டுமே தொடக்கக் கல்வியை நிறைவு செய்திருந்தனர். 58 சதவீதம் பேர் ஆசிரியர் பணிக்காகக் காத்துக் கிடந்தனர். பல்கலைக் கழகங்களில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் மட்டுமே படிக்க இடவசதி இருந்தது. ஆனால், புரட்சிக்குப் பின் ஏராளமான பள்ளிக் கூடங்கள் கட்டப்பட்டன. ஆசிரியர்களும், பேராசிரியர்களும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியில் நியமிக்கப்பட்டனர்.

buratchi பள்ளிக்குச் செல்லும் வயதுஷீமீள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் 98 சதம் பேர் தொடக்கக் கல்வி முடித்தவர்களாக மாறினர். 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் கியூபப் பல்கலைக் கழகங்களில் பயின்று வருகின்றனர். கல்வி மற்றும் சிறப்புத் திறனுக்கான பயிற்சிகளும் பாகுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டன. இப்படி தற்போது வளர்ந்துள்ள கியூபாவில், புரட்சிக்கு முன்பு சுமார் 5 லட்சம் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 10 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. 6 லட்சத்திற்கும் அதிகமானோர் எந்த வேலையும் இல்லாமல் இருந்தனர். வேலை செளிணித தொழிலாளர்களும் எந்தவிதமான சலுகைகளையும், உரிமைகளையும் முழுமையாக பெறவில்லை. அனைத்து நலத்திட்டங்களையும் சோசலிசம் மலர்ந்த பிறகே அனைத்து தொழிலாளர்களும் பெறத் தொடங்கினர்.


ஓய்வூதியத் திட்டமும் அனைத்துத் தொழிலாளர் களுக்கும் புரட்சிக்குப் பிறகே வழங்கப்பட்டன. தொழில் துறை வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பைகளையும் உருவாக்கியதன் விளைவாக. மின் உற்பத்தி 8 மடங்கு அதிகரித்தது. நீர்த்தேக்க வசதிகள் 310 மடங்கு அதிகமானது.

பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் போடப்பட்டன. துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட்டன. 1968ஆம் ஆண்டில் அனைத்து தொழில்களும் நாட்டுடைமையாக்கப்பட்டன. உள்நாட்டு உற்பத்தியில் தொழில்துறை 35 சதவீத பங்கை செலுத்துமளவுக்கு தரம் உயர்த்தப்பட்டது.புரட்சி வெற்றி பெற்ற அன்று மக்களிடையே உரையாற்றினார் காஸ்ட்ரோ, சோசலிசம் வேண்டுமா? என்றார், மக்கள் வேண்டாம்! வேண்டாம் என்றனர். நிலம் வேண்டுமா? என்றார், வேண்டும், வேண்டும் என்றனர். கல்வி வேண்டுமா? என்றார். வேண்டும் வேண்டும் என்றனர். இப்படி ஒவ்வொன்றாக கேட்டுவிட்டு இவைகளை தருவதுதான் சோசலிசம். இப்போது சொல்லுங்கள் சோசலிசம் வேண்டுமா? எனக்கேட்டார். அப்போது மக்கள் சோசலிசம்! சோசலிசம்!! என ஆரவாரம் செய்தனர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com