Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2009

சமூகப் பாதுகாப்புடனான வேலை

இந்திய ஆட்சியாளர்களும், தமிழக ஆட்சியாளர்களும் தமது ஆட்சிக் குடையின் கீழ் “வேலையின்மை’’ என்ற கொடுமை இருப்பதாக ஒரு போதும் ஒத்துக்கொள்வதில்லை. வாரம் ஒரு முறை பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செளிணிவதும், அது பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வழங்கும் என்பதும், பத்திரிகையில் தமிழ்நாட்டு முதல்வர் வெளியிடும் செய்தி. “தகவல் தொழில் நுட்ப கொள்கை என்ற பெயரிலும், தமிழக தொழில் கொள்கை என்ற பெயரிலும், தமிழகத்தில் 20 லட்சம் வேலை வாளிணிப்புகள் உருவாகும்.’’ என்று மாநில முதல்வர்
அறிவிப்பு வெளியிட்டார். அறிவிப்புகள் வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பின்னரும், பயன்பெற்றவர்களை கண்டறிய இயலவில்லை. ஏனென்றால் இவை அனைத்தும் ஒப்பந்தங்கள் அவ்வளவு தான். கிராமத்தில் பேசிக் கொஷீமீவதைப் போல் “ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிற’’ கதை.

work இன்னொரு புறம் “வேலையின்மை’’ என்பதை வரையறை செளிணிகிற போது, முழுக்க முழுக்க எந்த வேலையும் செய்யாதவர்களே, வேலையற்றவர், என்று அரசு குறிப்-பிடுகிறது. இந்த வரையறையின் படி நாட்டில் பிச்சை எடுப்பவர், சாலையில் படம் வரைந்து வைத்து அதன் மீது விழும் பைசாவை எடுத்துக் கொள்பவர் ஆகியோரும் வேலையில் இருப்பவர்களாக கருதப்படுகின்றனர். சி.டி.குரியன் என்ற பொருளாதார அறிஞர், “ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்து, ஒரு வேளை உண்டு, வாழ்க்கை நடத்துபவர்களையும் இந்திய அரசு வேலையில் இருக்கிறார் என்று கணக்கெடுப்பு செய்திருக்கிறது’’, என வருத்தத்தோடு குறிப்பிட்டார்.தேசிய சாம்பிள் சர்வே என்ற அமைப்பு 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 4சதமானோர் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர், என அறிக்கைவெளியிட்டு உள்ளது. தமிழகத்திலோ வெறும் 2 சதமானோர் தான் வேலையில்லாமல் இருக்கின்றனர். எனக் குறிப்பிடுகின்றனர். இத்தகைய தவறான தகவல்களில் இருந்து, கணக்கெடுப்புகளும், புள்ளிவிவரங்களும் பொளிணி அறிக்கைகளே தவிர வேறில்லை, என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

முறைசாராத் தொழில்கள்:

உலகிலேயே அதிகமான மக்கள் பிரிவினர் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டு இருப்பது ஆசியா கண்டம் என்றும் அதிலும் இந்தியாவில் தான் அதிகம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது இடம் பெயர்வோர், சொந்தத் தொழில் செய்வோர், கைத்தறி, விசைத்தறி ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடி, பெரும் தொழிற்கூடங்கள் வந்ததாலும், விவசாய வளர்ச்சி இல்லாததாலும் நிலத்தை இழந்தோர் போன்ற அனைவரும், தங்களின் வாழ்க்கைத் தேவைக்காகச் செய்யக்கூடிய அன்றாட வேலைகளே முறைசாராத் தொழில் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நேரடி அரசு ஊழியர்கள், சுரங்கம், ரயில்வே, வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்வோரை விட, முறைசாராத் தொழில்களில் இருப்போரின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகம்.

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாக்கத்திற்குப் பின், அரசுத்துறை மற்றும் தனியாரிடம் இருக்கும் அடிப்படை உற்பத்தித் துறைகளில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்ட காரணத்தினால், ஆட்குறைப்பு செய்யப்பட்டது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. தேவைப்படும் நேரத்தில் ஒப்பந்த
அடிப்படையில், வேலைக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இத்தகைய காண்ட்ராக்ட் ஊழியர்களாகத் தான், பொறியியல் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் வேலை பெற முடிகிறது. இது நிரந்தரமற்றதாக இருப்பதால், தொடர்ந்து வேலை தேடுவோராகவே இளைஞர்கள் உள்ளனர்.

அரசின் கொள்கைகளும் வேலை வாய்ப்பும்:

இந்தியாவின் முதலாளித்துவ பொருளாதார மேதைகள், உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை அமலாகத் துவங்கிய போது, உற்பத்தி பெருகும் வேலையின்மை தீரும் என்றெல்லாம் கூறினார்கள். இந்த மாயை சில சாகசங்களை நிகழ்த்திக் காட்டியது. படித்த பெரும் கூட்டம் இந்த மாயையை நம்பியது. இடதுசாரிகளின் எதிர்ப்பை ஏற்கவில்லை. இடதுசாரிகள், “முதலாளித்துவத்தின் அடிப்படை விளைவு வேலையின்மை,’’ என்று கூறினர். பொருளாதார விதியின் படி, உழைப்பு சந்தையில் வேலையற்றவர்கள் அதிகம் இருப்பதால் தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமைவலுவிழக்கும். உண்மை ஊதிய விகிதம் சரியும். வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க உரிமைகளை கடுமையாகப் பாதிக்கும். வேலையற்றோரை, முத-லாளிகள், தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும். எனவேதான் வேலையின்மை என்பது முதலாளித்துவத்திற்குத் தேவைப்படுகிறது. மேலேகுறிப்பிட்டபடி முறைசாராத் தொழிலாளர்-களை உருவாக்குவதும் இப்படித்தான். டி.ஒய்.எப்.ஐ உலகமயமாக்கல் காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை “வேலை வாளிணிப்பற்ற வளர்ச்சி மற்றும் வேலையிழப்பு வளர்ச்சி’’ என்று குறிப்பிட்டது. பலர் ஏற்கவில்லை. ப.சிதம்பரம் போன்றோர் 8 சத வளர்ச்சி, 9 சத வளர்ச்சி, பங்கு சந்தை ஏற்றம், இறக்கம் என மக்களுக்குப் புரியாத மொழிகளில் பேசிக் கொண்டிருந்தனர். பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தி, வளர்ச்சி பெற்றால், உற்பத்திக்கேற்ப வேலைவாய்ப்பு கூடும். இந்தியாவில் இது நடைபெறவில்லை. பொருளாதார விதி ஏன் இந்தியாவில் அமலாகவில்லை என்ற கேள்வியை எழுப்பிய போது, தொழிற்சங்கங்கள் தான் காரணம் என்றனர்.

ஆனால், இலாபத்தின் தேவைக்காக வேலையில் அமர்த்துவதும், எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பு-வதும் முதலாளிகளின் அல்லது நிறுவனங்களின் விருப்பமாக நீடிக்கிறது. மிகச் சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் 1900 பேரை வீட்டுக்கு அனுப்ப உத்தரவிட்டதும், கிங் ஃபிஷர் விமான நிறுவனம் சம்பளக் குறைப்பு செய்ததும், இன் போசிஸ் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு அறிவிப்பு செய்து, பின்சம்பளக் குறைப்பு செய்ததும் உதாரணங்களாகும். இப்போது நமது ஆட்சியாளர்களிடம் “அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி, இந்தியாவைப் பாதிக்குமா? என கேள்வி கேட்டால் ஆமாம். லேசான பாதிப்புகளை ஏற்படுத்தும்’’ என்று பதிலளிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நாயகி அடி அடியென்று அடித்து விட்டு வலிக்கிறதா என்று கேட்பார், ச்ச் என்று, வலிக்கவில்லை என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டுவார். பின் வடிவேலுவை குனிய வைத்து முரட்டுத் தனமாக தாக்கி விட்டு, இப்ப என்று கேட்பார், அதற்கு வடிவேலு ‘லைட்டா’ என்று பதிலளிப்பார். படம் பார்க்கும் அனைவரையும் இக்காட்சி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் இதே போல் தான் நமது ஆட்சியாளர்கள், ஒன்றும் செய்யாது என்று பேசி வந்தவர்கள், இப்போது லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என முனு முனுக்கத் துவங்கியுள்ளனர். பாவம் இவர்களும் எவ்வளவு காலம் தான் வலிக்கா-தது போலவே நடித்துக்கொண்டிருப்பார்கள். ஆனாலும் மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் வகையறாக்களுக்கு வலி ஏற்பட, 18 ஆண்டு கால பிரச்சாரமும், போராட்டமும் தேவைப்பட்டிருக்கிறது.


வேலையின்மைப் பிரச்சனை:

வேலையின்மை என்ற நிலை சமூகத்தினை பின்நோக்கி இழுத்துச் செல்வதாக அமையும். வறுமை, பட்டினிச்சாவு, தற்கொலை, வழிப்பறி, கொள்ளை போன்றவை பெருகும். ஆள்கடத்தல் கூலிப்படை அமைத்து செயல்படுதல் போன்றவை உரமிட்டு வளர்க்கப்படும். கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை, கடத்தல் போன்ற துயரங்கள் அதிகரிக்கும். வேலை வாளிணிப்பற்ற இளைஞர்கள், சமூகத்தில் புறக்கணிக்கப் படுவதாலும், அங்கீகாரம் அற்றவர்களாகவும் மாறுவதால் எளிதில் சீர்குலைவு சக்திகளினால் ஈர்க்கப்படுகிறார்கள். இனம், சாதி, மதம் ஆகியவற்றின் பெயரில் தீவிர செயல்பாட்டுக்கு உஷீமீளா-வதும், சில நேரங்களில் தீவிரவாதிகளாகவும் மாறுகின்றனர். முதலாளித்துவம் உருவாக்குகிற வேலையின்மை என்ற கொஷீமீகை நடவடிக்கை, மக்களின் நியாயமான தேவைகளுக்கான போராட்டத்தில் இருந்து, திசை திருப்புவதற்கு உதவி செளிணிகிறது.

மற்றொரு புறம், வேலையில் இருப்போரின் உரிமைகளை பறிக்கவும் வேலையற்ற இளைஞர்கள் என்கிற படையை முதலாளித்துவம் பயன்படுத்துகிறது. ஆகவே வேலையின்மையை முதலாளித்துவம் திட்டமிட்டு வளர்க்கிறது. என்ன செய்ய வேண்டும்? வேலையின்மை என்கிற பிரச்சனை தீர, முதலில் சமூக நலத் திட்டங்களை இன்றைய அரசு விரைவு படுத்த வேண்டும். அதன் மூலம் ஏற்படும் பணப்புழக்கம், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும். அதன் காரணமாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை ஆகும். புதிய உற்பத்திக்கான தேவை உருவாகும். வேலை வாய்ப்பும் கிடைக்கும். 2002ஆம் ஆண்டு கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டிக்கு முன்பு கையேந்தி நின்றதும், பின்னர் அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியர்,கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கைத்தறி புடவை மற்றும் துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்ததும் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.நாடு முழுவதும் விவசாய வேலை நாட்களின் எண்ணிக்கை குறைந்து, இடம் பெயர்தல் அதிகரித்த போது, இடதுசாரிகளின் வலி-யுறுத்தலால், மத்திய அரசு முன்மொழிந்த கிராமப்புற வேலை உத்திரவாதச் சட்டம் 2005 ஆகும். 2004 செப்டம்பரில் 150 மாவட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், 2005இல் சட்ட-மாகியது.

250 என உயர்ந்து, இப்போது எல்லா மாவட்டங்களுக்கும் பொருந்துவதாக மாற்றம் பெற்றுள்ளது. இதன் மூலம் கிராமப்புற குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 8 ஆயிரம் ரூபாய் வருமானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 நாஷீமீ வேலைக செய்வதன் மூலம் கிராமத்தின் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட திட்டம் ஒரே நேரத்தில் மக்களின் வாங்கும் சக்தியை அதிகப்படுத்துவதால், தேங்கி கிடக்கும் பொருள் விற்பனையும், கிராம கட்டமைப்பு வலு பெற்றதால், வேறு பல விவசாயப் பணிகளில் புதிய வேலை வாளிணிப்பும் பெருகியது, என்பதை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான்,மஹாராஷ்ட்ரா, கேரளா, மே.வங்கம், ஆந்திராஆகிய மாநில அனுபவங்கள் நிரூபித்துள்ளன.தமிழகத்தில் இத் திட்டம் போதுமான செயலாக்கவடிவம் பெறவில்லை. ஒதுக்கப்பட்ட நிதி, இருப்பு இருப்பதாக, அரசு விவரங்கஷீமீ தெரிவிக்கின்றன. இதுபோன்ற சட்டங்களுக்கு, மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கீடு செளிணியுமானால், கூடுதல் நன்மையை உருவாக்க முடியும். (சைக்கிள் பிரச்சாரம் மற்றும் மறியலையட்டி டி.ஒய்.எப்.ஐ. மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.கண்ணன் எழுதிய ‘சமூகப் பாதுகாப்புடனான வேலை’ என்ற பிரசுரத்திலிருந்து)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com