Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2008

உலக மயம் தந்த நவீன உழைப்புச் சுரண்டல்

காலைல வேலைக்குப் போன நைட்தான் திரும்ப முடியுது. எதுவும் செய்ய டைமே இல்லாமப் போச்சு,’’ வேலை வேலை வேலை’ வேலையைத்தவிர வேறெதுவும் செய்ய வாய்ப்பில்லாதவர் களாக மாறிப்போனவர்கள் பல்லாயிரம் பேர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ம்ம்! என்ன செய்ய?. வேலைன்னா விட்டுட்டு வர முடியுமாங்க, இருந்து முடிச்சுக் கொடுத்துட்டுத் தானே வர முடியும்’ தன் வாழ்வுக்கான நேரத்தையும் கம்பெனிக்காக தானம் கொடுப்பதை தன் கடமையாகவேக் கருதும் பல்லாயிரம் பேர் புரிந்து கொள்ளவில்லை. “எஜமானர்களை மிஞ்சும் விசுவாசமானவர்களாக இருக்கிறோம். என, இப்ப வேலைக்கு எங்க போற அதே இடம் தானா, இல்ல மாறிட்ழயா? என்னாது இப்படிக் கேக்குற, போன மாதமே வேற ஜாப் மாறிட்டேன். ஆனா இதுவும் கஷ்டமாத்தான் இருக்கு.

City டைம் 10 முதல் 6வரை தான் சொன்னாங்க ஆனா 8ல் இருந்து 9வரை இழுத்தடித்தாங்க’ அப்புறம் பஸ் பிடிச்சு வீட்டுக்கு போறதுக்கு ரொம்ப லேட்டாயிடுது. இப்படி கஷ்டப்படுறே, பேசாம லோன் போட்டு வண்டிய எடு. வேலை முடிஞ்சுதா வீட்டுக்கு போனமான்னு இருக்கலாம்’ மிகக் சாதாரணமாக எல்லா இடங்களிலும் கேட்க முடிகிறது கடன் வாங்கி கடமையாற்றுபவர்கள் பல்லாயிரம் பேரை. நிச்சயமற்ற வேலை, நிரந்தரமில்லாத ஊதியம், 10 முதல் 12 மணி நேர வேலை செய்வோர், வேலைக்காக கடன் வாங்குவோர், ஆகமொத்தத்தில் நிம்மதியே போச்சு வேலையால் என்ற லட்சக்கணக்கானவர்களில் சர்வ சாதாரணம்.

ஒரு சிக்னலில் காத்திருக்கக் கூட நேரமில்லை என்று சிகப்புக்கோட்டை தாண்டிச்செல்லவும் தயாராகிவிட்ட இந்த லட்சக்கணக்கானவர்கள் இழந்தது நேரமா? நேரம் மட்டுமா? யாருக்கான நேரம்? யாருக்காக இழந்தார்? சுவடுக்காகவா? இழப்பினால் இலாபம் அவருக்கா? இழந்தது நேரமா இல்லை உழைப்பா? இது இழப்பா அல்லது சுரண்டலா? மிக அப்பட்டமான ஒர் உழைப்பு சுரண்டல் தான் இந்த லட்சக்கணக்கானவர்களின் நேரத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும், தொழிற்சாலைகள், தனியார், அலுவலகங்கள், வங்கிகள் மட்டுமல்லாது தனியார், பள்ளி கல்லூரி வரை அதாவது சாப்ட்வேர் முதல் டாஸ்மாக் வரை புதிய வேலைக்கான கலாச்சாரமாக இது மாற்றப்பட்டு விட்டது.

இயந்திரத்தனமான வாழ்க்கையின் வெறுப்புகள் இந்த வேலைக்கான புதிய கலாச் சாரத்தில் இருந்து தான் துவங்குகின்றன.

ஆனால் வேலை ஒரு பிரச்சனையே இல்லை, மிக எளிதில் கிடைத்து விடும் என்ற மாயத் தோற்றம் இன்று பரவலாக உருவாக்கப்பட்டு விட்டது. இது தான் வேலையா?

வாழ்வுக்கான உத்தரவாதத்தை, வாழ்வுக்கான கௌரவத்தை, வாழ்வின் உண்மையான சந்தோஷங்களை கம்பனிக்கும் இந்த புதிய ஏற்ப்பாட்டை எப்படி வேலை என அழைக்க முடியும். விடியலில் சென்று இரவில் திரும்பும் பழங்காலத்து பண்ணையடிமைகளின் நிலையில் இருந்து எதில் மாறு பட்டிருக்கிறது இந்த புதிய வாழ்க்கைமுறை? டிவி,பைக், டிவிடி, செல்போன் என புதிய வணிக விரிவாக்கத்தை நாம் நமது வளர்ச்சி அல்லது சந்தோஷம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இ.எம்.ஐ. என்ற கந்துவட்டி நடைமுறைக்கு குக்கர் முதல் செல்போன் வரை கிடைப்பதை நாம் “நமது பெருமையாக’கருதுகிறோம்.

இது வளர்ச்சியா? அல்லது வாழ்க்கை சிதைவா?

வீதிகளில் இளைஞர்களோடு இரவு நேரங்களில் நின்று பேசுவது, தெருவில் நல்லது கெட்டதில் பங்கேற்பது, என செலவழிக்க வேண்டிய நேரமும் வாழ்க்கையில் சுரண்டப்பட்டதால் ஏற்பட்ட இழப்புதான் “நேரமின்மை மற்றும்

நிம்மதியின்மை’’ சிதை மூடும் ஒர் மாயப்போர்வை தான் நவீமையம்.

தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய். இந்த மாற்றமும் காலத்தின் வழியே ஏற்பட்ட ஒர் தற்செயல் மாற்றமல்ல. இளைஞர்கள் வேலை இல்லாமலும் இருக்கக்கூடாது.

அதே நேரத்தில் வேலையைத் தவிர வேறு நேரமும் இருக்கக் கூடாது. இதுதான் இன்று உலகமெங்கும் கடைப்பிடிக்க வேண்டிய இளைஞர் கொள்கை யாக உலக நிதி மூலதனம் கருதுகிறது. இதன் அமலாக்கம் தான் புதிய பணிச் சுமை வேலை கலாச்சாரம்.

இது மேலோட்டமான ஊடுவுருவல் அல்ல. மாநகர வாழ்க்கை முறையாக கற்றுக் கொள்ளும் அளவிற்கும் மனமாற்றம் செய்யப்பட்டுவிட்ட ஒர் பொருளாதார கலாச்சாரம். எனவே தான் நம் இளைஞர்கள் வேலையில் மாறிக்கொண்டே இருப்பதை, 12 மணிநேர வேலையை கடமையாக உணர்வதை, நேரமே கிடைக்காத ஒர் வேலையில் சேர்வதை, எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். இது ஒர் ஆண்டில் ஏற்பட்ட தல்ல. 1997ல் தலை காட்டத் துவங்கிய உலகமயமாக்கல் ஏற்படுத்திய நுட்பமான உணர்வு மாற்றங்கள் தான் இந்த கலாச்சாரம்.

உலகமயமாக்கல் என்ற இந்த பின்னணியும், எதிர் கால இதன் ஆபத்தும் புரியாத ஒர் கூட்டமாக இளைஞர்கள் மாறிப் போனால் இந்த ஆபத்து தேசத்தை அடிமைப்படுத்தி விடும். அரசியல் புரிதல் இல்லாதவர்களின் புலம்பல் வார்த்தையாக நேரமே இல்லை’ என இருக்கலாம் ஆனால் இந்த புலம்பல் அரசியலைப் புரிந்து கொள்ளக் கூட நேரமில்லாமல் செய்துவிடும் ஆபத்து கொண்டது. இன்றைய இடதுசாரி இளைஞர் அமைப்பின் பிரதானப்பணி இதற்கெதிரான ஒர் பிரச்சாரத்தில் அல்லது சமூகப்பணிகளுக்கான திட்டமிடல் மூலம் நேரத்தை அந்த லட்சக்கணக் கான இளைஞர்களுக்கு உணர்த்துவது தான்.

மிக விருப்பமான ஒர் செயல் திட்டம் மூலமே இதை வெல்லமுடியும். “சே குவேரவின் வார்த்தையில் செயல் அதுவே சிறந்த சொல்’’


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com