Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2008

கேள்விக்குறியாகும் ஜனநாயகம்:
எஸ்.வி.சசிக்குமார்

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பே நசீர் புட்டோ கொலை வெறியர்களின் துப் பாக்கிச் சூட்டிற்கும் குண்டும் வெடித்தாக்குதலுக்கும் பலியாகிப்போனது அந்நாட்டில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

டிசம்பர் 27 மாலை ராவல்பிண்டி நகரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக் களிடையே உரையாற்றிவிட்டுத் திரும்பும் வேளையில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளின் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரழந்திருக்கின்றனர்.

பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் முதல் அமெரிக்கா அதிபரின் சார்ந்தவர்களுதும் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்களும் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இரு முறை பிரதமராகப் பதவி வகித்த பே நசீரின் இந்த அகால முடிவு பாகிஸ்தான் அரசியலிலும் அண்டைநாடுகளுடன் பாகிஸ்தான் அரசு கொண்டிருக்கும் உறவுகளிலும், ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் பற்றி பத்திரிகையாளர்களும், கட்டுரையாளர் களும், ஊடகங்களில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.

பே நசீர் புட்டோ அவரது குடும்பத்தில் துர் மரணத்தில் ஆலாகிப் போன, நான்காவது நபர் என்பது சோகத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்து கின்றது. அவரது தந்தையும் முன்னாள் பிரத மருமான பீகார் அலி புட்டோ 1979-ல் அரசியல் காரணங்களுக்காக ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். தொடர்ந்து பேநசீரின் இரு சகோதர்களும் கொலை செய்யப்பட்டனர்.

பயங்கரத்தாக்குதலுக்குக் காரணமானவர் யார் என்பதெல்லாம் இன்னமும் (டிசம்பர் 31 வரை) தெரியவில்லை. தெரியாமலே போனலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மத அடிப்படைவாத பயங்கரவாதிகளின் அடாத செயலா? அரசியல் விரோதிகளின் கைவரி சையா, அதிபர் முஷாரபின் ஆதரவாளர்கள் பங்களிப்பு இதில் இருக்குமா? போதுமான பாதுகாப்பு பேநசீருக்கு வழங்கப்பட்டதா என்பனவும் பல மாதங்கள் விவாதிக்கப்படும் விஷயங்களாக இருக்கலாம்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆயினும் அரசின் பாதுகாப்பு போதுமான அளவிற்கு இல்லை என்பதை மட்டும் இப் பொழுது அனுமானிக்க முடிகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானிற்குத் திரும்பி வந்த உட னேயே பேநசீரைக் கொல்ல முயற்சி நடந்ததையும் அதில் நூற்றிற்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிட்டதையும் பின்னனியாகக் கொண்டு பார்த்தால் அவருக்கு மிகக் கடுமையாகயான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும் என்பது சாதாரணமாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. தவிரவும் பேநசீரே தனக்குப் போதுமான பாதுகாப்பு கொடுக்கப் படுவதில்லை, என்று குற்றம் சாட்டியிருந்தார்.

கொலைக்கும் தங்கள் அமைப்புத்தான் காரண மென்று அல்கொய்தா கூறியதை அதன் முக்கிய பொறுப்பாளர்கள் மறுநாளே மறுத்து விட்டனர். டான் தொலைக்காட்சி வெளியிட்ட சில படங்கள் கொலை எப்படி நடந்தது என்று முதலில் கொடுக்கப்பட்ட தகவல்களை எல்லாம் அடியோடு மாற்றி உண்மையை வெளிப்படுத்து வனவாக அமைந்தன.

மனித வெடி குண்டு தாக்குதலில் அவர் இறந்தார் என்று முதலிலும், பின்னர் வெடி குண்டுத் தாக்குதலில் இருந்து தன்னைக் காப் பாற்றிக் கொள்ள முயன்ற போது இடிபட்டு மரணம் சம்பவித்தது என்றும், மாறி மாறிக் கூறப்பட்டது. ஆனால் டான் தொலைக் காட்சிப் படங்கள் ஒரு துப்பாக்கி ஏந்திய வாலிபன் வெகு அருகாமையிலிருந்து மனித வெடிகுண்டு என்று நம்பப் பட கூடிய ஒருவரின் பின்புறத்தி லிருந்து சுட்டதில் பேநசீரின் எண்ணத் தக்க புதிய சாட்சியங்களைத் தருகின்றன. ஜனவரி 8ல் பொதுத் தேர்தல் அறிவித்தபடி நடக்குமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பதெல்லாம் தெரியாத நிலையில், கொலை நடைபெற்ற நான்கு நாட்களுக்குளேயே பேநசீரின் 19 வயது மகன் பிலாவால் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். தனது படிப்பு முடியும் வரை தனக்குப் பதிலாகத் தலைமைப் பொறு பொறுப்பை வேரொருவர் ஏற்று நடத்துவார் என்று பிலாவல் கூறுயிருக்கிறார்.

அயல்துறை உயர் அதிகாரியாகப் பணியாற்ற விரும்பிய பே நசீர் அரசியல்வாதியானது ஒரு எதிர்பாராத திருப்பம் தான். நாடு திரும்பிய பேநசீர் அப்பொழுது பிரதமராகப் இருந்த பெரும் நெருக்கடிகளுக்கிடையில் பணியாற்றி வந்த தனது தந்தைக்கு ஆலோசகராகவும் உதவியாளராகவும் இருக்க நேரிட்டது. தங்தையின் துயர் மரணத் திற்குப் பின்னர் 1977 தேர்தலில் வெற்றி பெற்று பேநசீர் தமது 35வது வயதில் பிரதமரானர். உலகிலேயே ஒரு இஸ்லாமிய நாட்டின் பிரதமர் பதவி வகுக்கும் முதல் இஸ்லாமியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். தொடக்க நிலை யில் சமூகத்தின் அடித்தள மக்களின் வாழ்வில் அக்கறையுள்ளவராகவே அவர் விளங்கினார். மாணவர் அமைப்புக்களுக்கும், தொழிற்சங்கங்க ளுக்கு எதிரான தடைகளை நீக்கினார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த அதேவேளையில் பேநசீர் இந்திய-பாகிஸ்தான் நல்லூறவுகளுக்கான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆயினும் அப்போதைய பாகிஸ்தான் அதிபருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களின் காரணமாக1990ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 1993 -ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரான பேநசீர் மூன்றாண்டுகளுக்குள்ளாக மீண்டும் பதவி இழக்க நேரிட்டது. கடுமையான ஊழல் குற்றச் சாட்டுகளுக்காக பேநசீர் பதவி இழக்கும்படி யாயிற்று. அவரது கணவர் இதற்குப் பெருமளவில், காரணமென்றும், பலகோடி ரூபாய் அவருக்குக் “கமிஷனாக கிடைத்த தென்றும் கூறப்பட்டது. பேநசீர் முதன் முதலாகப் பிரதமர் பதவி ஏற்ற போது ஏற்படுத்திய நம்பிக்கை 10 ஆண்டு களுக்குள்ளாகவே தகர்ந்து விட்டது. இந்த வகையில் அவரை அவரது தந்தையுடன் ஒப்பிட லாம். தந்தை புட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சி யைத் தொடங்கிய பொழுது அது ஒரு தீவிர இடது சாரிக்கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந் ததாகவே அறியப்பட்டது. நாட்டைத் தொழில் மயமாக்கல் , தொழிற்சங்க உரிமைகளை அங்கீரித் தல், வங்கிகள் நாட்டுடைமை என நல்ல தொரு தொடக்கத்தைக் கொண்ட புட்டோ ஆட்சி விரைவிலேயே தடம்புரண்டது.

அரசியல் கெடுபிடிகளும், வலைப்பின்னல்களும் அவருக்கும் அதிபருக்கும் இருந்த உறவைப் பல வீனப்படுத்தியது. விரைவிலேயே நெருக்கடிக் குள்ளாகிய கட்சி ஊழியர் ஒருவரின் தந்தையைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்ற சாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டு புட்டோ பரிதாபமாக மரணமடைய நேரிட்டது ஒரு சோகக் கதை.

புட்டோ குடும்பமே சர்வாதிகாரம் பாதைக்கும் பாகிஸ்தானை இழுத்துச் சென்ற அதிபர்ஸியா-உல்-ஹக்கினால் வேட்டையாடப்பட்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது,அதனினும் சோகம்.

பேநசீரின் தந்தை புட்டோ தனது ஆட்சியக் காலத்தில் மதச்சார்பின்மை அரசியலுக்குப் பாகிஸ்தானைத் திருப்பினார். அதிபர் ஸியா-உல்-வரக் அதனைச் சர்வாதிகார வழிக்குத் திரும்பி, இராணுவ ஆட்சிக்கும் வழிவகுத்து மதவாகப் பயங்கரவாதிகளின் புகலிடமாக அந்நாட்டைத் திசை திருப்பியது வேதனைக்குரியது. இதுவே அந்நாட்டைப் பெருமளவிற்கு அமெரிக்காவின் கைப்பாவையாகவும், அதன் ஏகாதிபத்திய முயற்சி களை இயக்கும் கருவியாகவும் ஆக்குவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறியிருக்கின்றனர். தொடர்ந்து வந்த சர்வாதிகார, ராணுவ ஆட்சிகள் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் ஆடுகளமாகப் பாகிஸ்தானை மாற்றின.

இந்நிலையில் பேநசீரோ, நவாப்ஷெரீபோ எந்தப் பிரதமரும் அங்கு தாக்குப் பிடிக்க முடியாத நிலைதான். ஆப்கானிஸ்தானுக்கும் தாலிபானுக் கும் எதிரான தனது பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு முஷாரபைப் பயன்படுத்துவது அமெரிக்காவிற்கு சுலபமாக இருந்தது. முஷாரபும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற காரணத்தை முன்னிறுத்தி கோடிக்கணக்கான டாலர் அமெரிக்க உதவி பெற்று தனது அடித்தளத்தை வலுப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளுக்குப் பெரியளவில் முஷாரப்பிற்கு அமெரிக்காவின் உதவி பயனளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்டநிலையில் பேநசீரோ, நவாப்ஷெரீபோ எந்தப் பிரதமரும் அங்கு தாக்குப் பிடிக்க முடியாத நிலைதான்.

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டு மென்ற முயற்சிகளைத் தொடர்ந்து பெயரளவிலாவது தனது ஆதரவு அதற்கு இருக்க வேண்டுமென நினைப்பில் தான் முஷாரப்பை தேர்தல் நடத்தச் செய்யவும், பேநசீரைப் பிரதமராக்கவும் விரும்புகிற நிலைக்கு அமெரிக்காவை கொண்டு வந்திருக்கிறது. தேர்தல் நடந்து பேநசீர் அதில் வெற்றியும் பெற்றிருந்தால் முஷாரப்-பேநசீர் உறவு வலுப்பட்டு அமெரிக்காவின் நலன்களும் பாது காக்கப்பட்டிருக்குமா, அல்லது பேநசீர் தன் வழியில் செல்லும் முயற்சியில் முஷாரப்பின் எதிர்ப்புக்களைச் சமாளிக்க நேரிட்டிருக்குமா என்பதெல்லாம் இப்பொழுது பொருந்தாத, தேவையற்ற சிந்தனை ஆகி விட்டது.

தேர்தல்கள் எப்பொழுது நடைபெறும்? புதிய சூழுலில் வெவ்வேறு கட்சிகளின் தேர்தல் உத்தி எதுவாக இருக்கும்? முஷாரப்பிற்கும் அமெரிக்கா விற்கும் உள்ள உறவு மாறுமா? பாகிஸ்தான் மக்களின் உண்மையான ஜனநாயகத்தை நோக்கிய பயணம் தொடருமா? அவர்களின் நம்பிக்கை களும், கனவுகளும் நிறைவேறுமா? பதிலுக்குப் பொறுத்திருக்க வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com