Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2008

மருத்துவக் குறிப்புகள்


சர்க்கரை அளவைக் குறைக்க...

பரம்பரையில் சர்க்கரை நோய் இருந்தால், அதாவது பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அது, குழந்தைகளையும் தாக்கும். எனினும் இந்த நோய் பெரும்பாலும் 30 வயதுக்கு மேல் தான் இருப்பது தெரியவரும்.

சர்க்கரை நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால், கண், இதயம் மற்றும் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு தேவை. அப்படி விழிப்புணர்வு இருந்தால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளான சர்க்கரை, இனிப்பு, கிழங்குகள், மா, பலா, வாழை, பேரீச்சை, திராட்சை மற்றும் சப்போட்டா போன்ற பழவகைகள், இனிப்புப் பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவைற்றை தவிர்க்க வேண்டும்.

அதோடு உடலின் உடையை ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டும். நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஸ்ராய்டு மாத்திரைகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

வயிற்றுப்புண் குணமாக...

வயிற்றுப் புண் வந்துவிட்டால் ஏற்படும் அவஸ்தை சொல்லி மாளாது. வயிற்றுப் புண்ணை தொடர்ந்து வாய், உதடு மற்றும் நாக்கில் உட்புறம் போன்ற பகுதிகளிலும் புண்கள் ஏற்படும். வாயிலிருந்து துர்நாற்றம் வீசும். சாப்பிட சிரமமாக இருக்கும். இதேநிலை தொடர்ந்தால் மேலும், பல நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

எனவே, வயிற்றில் புண் வந்துவிட்டால் உடனே அதை குணப்படுத்த வேண்டும். அதற்கு எளிய வைத்திய முறை இது.

காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீரில் தேன் கலந்து குடிக்கலாம். தேனில் சீரகப் பொடி கலந்தும் குடிக்கலாம்.

வேப்பிலை, அருகம்புல், வெந்தயக் கீரை, மணத்தக்காளி, முருங்கை இலை, குப்பைமேனி, புதினா, கொத்த மல்லி போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை சிறிதளவு எடுத்து 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி, சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பருகவும்.

பழங்கள், காய்கள், வெஜிபிள் சாலட், புரூட் சாலட், புரூட் ஜூஸ், இளநீர் போன்றவற்றை அதிகளவில் சாப்பிடவும். மதிய உணவில் வேகவைத்த காய்கள், கீரைகள் போன்றவற்றை அதிகளவில் தேர்க்கவும்.

நாள்தோறும் 6 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.