Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2008

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...
அரவிந்தன்

மரம் ஓய்வை விரும்பினாலும், காற்று அதை விடுவதில்லை.. கரைகள் ஒய்வை விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை.. என்பது வழக்கு
அரசியல் நிகழ்வுகளை பற்றி பலர்,
“ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை “ என சொல்வதுண்டு.. ஆனால் இதற்கு விதிவிலக்குகளும் உலகில் இருந்து வருகின்றன.

bagawath singh உலகை ஆள நினைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு தனது நாட்டின் சொந்த குடி மக்களிடையே இனவெறியை காட்டி ரீட்டா, கேத்ரினா புயல் தாக்கியபோது கருப்பின மக்களை தவிக்கவிட்டது. மனித நேயத்தை வலியுறுத்தும் சோசலிசத்தின் மீது நம்பிக்கை கொண்ட சின்னஞ்சிறு கியூபா பல ஆயிரக்கணக்கான மருத்துவர்களை, மருந்து பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பி அமெரிக்காவை வெட்கித் தலை குனிய வைத்தது.. கியூபா வழியிலே லத்தீன் அமெரிக்கா நாடுகள் இன்று அணிவகுக்க ஆரம்பித்து விட்டது.

இந்தியாவிலும் மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா போன்ற மாநிலங்களில் விதி விலக்கான மக்கள் நல அரசுகளே கொள்கை அடிப்படையில் மக்களுக்காக செயல்படுகிறது..

இந்தாண்டு தமிழகத்திலும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் இடதுசாரி சிந்தனையோட்டம் கொண்ட அமைப்புகளால் விதிவிலக்காக நடை பெற்றுள்ளன. தமிழகத்தின் பல்வேறு நிகழ்வுகள் நம்பிக்கையை வளர்க்கின்றன. இன்னும் பல நிகழ்வுகள் நம்பிக்கையை இழக்க வைக்கின்றன..

தமிழக அரசியல் வானில் சேது சமுத்திரத் திட்டம் ஆதரவு - எதிர்ப்பு நடவடிக்கைகள், சேலம் ரயில்வே கோட்டம், முல்லை பெரியாறு அணை, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தீர்ப்பு, கோவை குண்டு வெடிப்பு தீர்ப்பு, சென்னை மாநகராட்சி தேர்தல் முறைகேடு -ஆளும் கட்சி கவுன்சிலர்கள் ராஜினாமா நாடகம், தேமுதிக கட்சித்தலைவர் கல்யாண மண்டபம் இடிப்பு - வீட்டில் வருமானவரி துறை சோதனை.

சரத்குமாரின் புதிய கட்சி துவக்கம், கருத்து கணிப்பும் அதையொட்டி தினகரன் பத்திரிக்கை அலுவலக ஊழியர்கள் எரித்து கொலை, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ராஜினாமா, முதல்வர் கருணாநிதியின் சட்டப்பேரவையில் 50 ஆண்டு பொன்விழா கொண்டாட்டம், மதுரை இடைத் தேர்தலல் காங்கிரஸ் வெற்றி., ஜெயலலிதா வீட்டில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி துவக்கம், கொஞ்ச நாளில் மறைவு,. சிவகங்கை நகராட்சி தலைவர் படுகொலை, திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச் செல்வன், அதிமுக குரங்கு குமார் படுகொலைகள்,தமிழக அரசியலில் வன்முறைக்கு துhபம் போட்டு வளர்த்தது.

சுய நிதிக் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் தமிழக அரசின் சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு. கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ், நெல்லையில் டாட்டா நிறுவனம் துவங்க எதிர்ப்பு ஆதரவு அரசியல் கட்சிகளின் குழுக்கள் ஆய்வு..

ராமர் பற்றி முதல்வர். கருணாநிதி கருத்து தெரிவித்ததால் அவரது மகள் செல்வி வீடு தாக்குதல்,பேருந்தில் பயணம் செய்த 3 அப்பாவி பெண்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். தலை வாங்கி வேதாந்தி கருணாநிதியின் தலை, நாக்கை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என பேசும் அளவிற்கு வகுப்பு, மத வெறி கிளறி விடப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தலைவர் மீது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போஸ் தொப்பியை வீசியது - கூட்டத் தொடரில் சஸ்பெண்ட், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீது தாக்குதல், காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்திய மூர்த்தி பவனில் இளைஞர் அணி தலைவர் மயூரா ஜெயக்குமாரை சொந்த கட்சி யினரே தாக்கியது..கோத்தகிரி கொடநாடு எஸ்டேட் கிராம மக்களுக்கு நடப்பதற்கு பாதையை தரமாட்டேன் என மக்கள் தலைவர் ஜெயலலிதா சொன்னதால் மக்கள் சென்னை உயர்நீதி மன் றத்தை நாடினார்கள்.

sethu samuthram எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தாங்கள் தான் உண்மையான மதிமுக என பிரிந்து வந்தனர். தமிழக அரசு இலவச எரிவாயு- அடுப்பு திட் டத்தை துவங்கியது. பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க தடை விதித்தது. அறிவித்தது. இரு சக்கர வாகனங்களில் செல் வோர் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும்.. காவல் துறை இலகுவாக கண்காணிக்க வேண்டும்.. கட்டாயமில்லை.. மீண்டும் அணிய வேண்டும்.. அரசு ஆணை ஊசலாடுகிறது.

இட ஒதுக்கீட்டு பிரச்சனையில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என தமிழக சட்டமன்ற தீர்மானம். மத்தியில் அனைத்தும் ஓகே.. மாநிலத்தில் சில்லரை வர்த்தகத்தில் அன்னியனா ? எதிர்ப்பு.. மருத்துவ மாணவர்களை கட்டாய கிராமப்புற பணி.. புதிய நியமனம், கூடுதல் நிதி ஒதுக்கிடு, ஐயாவிடம் சத்தத்தை காணோம்.. துணைநகரம், விமான நிலை விரிவாக்கம் அரசின் இரண்டு திட்டங்களும் அவசர கோலத்தில் அள்ளி தெளிக் கப்பட்டு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் சேர நுழைவு தேர்வு இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலை தேர்வு செய்ய பெண்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி அரசி யலில் பெண்களின் முக்கியத்துவத்தை பறை அடித்தது.

கூட்டுறவு தேர்தல் ஆளும் கட்சியின் முறை கேடு, அரசே தேர்தலை ரத்து செய்து விட்டது. 10ம் வகுப்பு வரை கட்டாய தமிழ் அரசின் உத்தரவு செல்லும் உயர்நீதி மன்றம் தீர்ப்பு.. இப்படி ஒரு பக்கம் அரசின் அறிவிப்புகள்.. நீதிமன்ற அறிவிப்புகள் வந்த வண்ணம்.. தமிழக எதிர்கட்சி வரிசையில் அம்மாவும், ஐயாவும், புயலும், சிறுத்தையும் மாறி மாறி அரசியல் செய்தன..

இவை எதையும் கண்டு கொள்ளாது என் வழி தனி வழி என கேப்டனும், சுப்ரீம் ஸ்டாரும் தங்களது பங்கிற்கு எதிர்கால முதல்வர் நாங்கள் தான் என கனவுகளில் திளைத்துக் கொண்டு அறிக்கைப் போர் நடத்த.. தமிழக அரசியல் குழம்பிக் கொண்டு இருந்தது. குழப்பங்களிடையே கலைஞர் புதல்வி கனி மொழியை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்தது திமுக தலைமை. இந்த அரசியல் நிகழ்வு களுக்கு மத்தியிலே இந்தாண்டு அரியலூர் மாவட்டம் மீண்டும் உதயமானது. ஈரோடு, திருப்பூர் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழகத்தில் மொத்தம் 8 மாநகராட்சிகளானது. திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்ட அறிவிப்பு என தமிழக அரசு அறிவிப்பு மழைகளை பொழிந்து வருகிறது..

பொன் . முத்துராமலிங்க தேவரின் பிறந்த தினம் மீண்டும் சாதி அரசியலை மையப்படுத்தியது. மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவிக்க, மாற்றுப் பெயரை எதிர்ப்புசக்திகள் முன்மொழிய சாதிய அரசியலுக்கு மீண்டும் அச்சாரம் போடும் நிகழ்ச்சி அரங்கேறியது.

கசாப்பு கடையில் ஆட்டைவெட்டி விற்பது போல தமிழகத்தில் வறுமையை பயன்படுத்தி பழனி ரவிச்சந்திரன் என்பவன் 400 கிட்னிகள் வரை களவாடி கோடிக்கணக்கில் விற்று விளையாடி உள்ளான். இக்காலத்தில் தான் தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவர் தமிழக முறை சாரா மற்றும் கிராமப்புற விவசாயக்கூலித் தொழி லாளிகளின் சராசரி தினசரி வருமானம் ரூ 33 என்ற தகவலை வெளியிட்டு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளார்.

சங்க இலக்கியத்தை மக்களிடம் கொண்டு செல்ல சரியான அமைப்பு தமுஎச என்ற அறிவிப்போடு தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம் 10 நாள் சங்க இலக்கியத்தை படைப்பிலக்கிய வாதிகளுக்கு பயிற்சி கொடுத்தது. தமிழக திரைப்பட வரலாற்றில் சுமார் 60 இளம் கதாநாயக, நாயகிகள் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். தமிழக சினிமா தளத்தில் கதைகளுக்கு வந்த பஞ்சத்தில் பழைய படங்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு வலம் வருகிறது.

தெளிவான அரசியல், உறுதியான லட்சியம், கட்டுப்பாடான அமைப்பு, மக்களுக்கான தியாகங்கள் என இடது சாரி அமைப்புகள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கம் போல் குடிமனைபட்டா கேட்டு அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம், அரசு அறிவிப்புகளை வெளியிட்டாலும் நேரடியாக நில மீட்புப் போராட்டம் தரங்கப்பாடி போர்களமானது. உரிமைக்கான போராட்டத்தின் குரல் இடி யோசையை விட பலமானது என மீண்டும் ஒரு முறை தமிழகம் 2007ல் உணர்ந்தது.

இளைஞர் பட்டாளத்தின் தனி முத்திரை வாலிபர் சங்க அகில இந்திய மாநாடு சென்னையில் சாதித்து காட்டியது. தமிழக வாலிபர்கள் யார் பக்கம் என்பதை.. லட்சம் இளைஞர்களின் கம்பீரமான கோசங்களோடு எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையை உணர்த்தியது..

தமிழகத்தின் தொழில் வளத்தை பாதுகாக்க, வேலை வாய்ப்பை உருவாக்கிடும் சேது சமுத்திர திட்டத்தை அமலாக்கிட ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் சைக்கிள் பயணம், பிரச்சாரம், போராட்டம் தமிழக அரசியலை சூடு கிளப்பியது..

மாணவர்களுக்கு கல்வி கடன் கொடு என்ற கோரிக்கையின் நியாயத்தை பல வங்கிகள் மறுக்க முடியவில்லை. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து சொந்த முயற்சியில் 64 கோடி ரூபாய் வங்கிகளில் கல்வி கடன் ஆயிரக் கணக்கானோர் பெற உதவியது. புத்தக கண்காட்சியை மக்கள் சொத்தாக மாற்ற முயற்சி, பாரதி இறுதியுரையாற்றிய நுhலகத்தை மறுபுனரமைப்பு செய்தது. முயற்சி எடுத்த ஆட்சித்தலைவரை 2007ம் ஆண்டின் சிறந்த ஆட்சித்தலைவராகவே தேர்வு செய்யலாம்..

ஈராக்கில் அப்பாவி மக்களை கொன்று குவித்த அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸ் சென்னை வந்த போது அதனை எதிர்த்தும், அமெரிக்க தூதரகம் முன்பும் தமிழகத்தின் வாலிபர், மாணவர் படை எதிர்ப்பை ஆழமாக காட்டியது. ஏகாதிபத்திய சக்திகளை எந்தவடிவிலும் தமிழக மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என சூளுரைத்தது அந்த போராட்டம்..

மாணவர்களின் போராட்டம் இலவச பஸ்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிடச் செய்தது. விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு, மருத்துவ மாணவர்களின் போராட்டம், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் போராட்டம் என அனைத்திலும் சரியான முத்திரையை தனக்கான கொள்கை நிலையிலிருந்து வழிகாட்டி மாணவர்களை பாதுகாத்தது இந்திய மாணவர் சங்கம்..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வீட்டுமனைப் பட்டா கேட்டு, அருந்ததியின மக்களின் வாழ்வுரிமைக்கான கோரிக்கை முழக்கங்கள், சிறுபான்மை மக்களான இஸ்லாமியருக்கு சச்சார் குழு பரிந்துரைகளை அமலாக்கிட, விவசாய மக்களை பாதுகாத்திட நெல், கரும்புக்கான கொள்முதல் விலையை அதிகப்படுத்திட, துப்புறவு தொழிலாளர்களுக்கு தனி ஆணையம், மயான ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்தியது. முறைசார தொழிலாளர்களை பாதுகாத்திட செயல்படும் தொழிலாளர் நலத் துறையாக மாற்றிட நிர்பந்தப்படுத்திட என எண்ணற்ற போராட்டங்களை நடத்தி பெரும் வெற்றியை ஈட்டியது.

2007ம் ஆண்டு பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் தமிழக உழைப்பாளி மக்களின் நண்பன், பாதுகாவலன் யார், மக்களின் எதிரி யார் என சூடான நிகழ்ச்சிகளை உருவாக்கி கொடுத்திருக்கிறது.. மக்களின் வளர்ச்சிக்கான போராட்டங்களை இடதுசாரி சக்திகள் நடத்திவரும் சூழலில் மக்களுக் காக போராடுகிறோம் என அரசியல் செய்து கொண்டு இருக்கும் சக்திகள் ஒரு புறம் என்ற அணிவகுப்பை தமிழக மக்கள் பார்த்தனர். மலரும் புதிய ஆண்டில் நிச்சயம் மக்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனை தேர்ந்தெடுப்பார்கள், அவர்களின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற நம்பிக்கையோடு, உழைப்பவனின் உரிமை களை பாதுகாக்கும் ஆண்டாக, தீண்டாமை, மதவெறிக்கு இந்த மண்ணில் நிச்சயம் இடமில்லை என அறிவிக்கும் ஆண்டாக, ஏகாதி பத்திய எதிர்ப்பு சக்திகளை பலப்படுத்தும் ஆண்டாக மலரட்டும் என வரும் 2008ம் ஆண்டை வரவேற்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com