Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2007

சுனாமி இரண்டாம் ஆண்டு
எஸ்.ஜி. ரமேஷ்பாபு

ஆழிப்பேரலை கடற்கரை மக்களை கொடூரமாக தாக்கி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. அந்த சம்பவம் நடந்தபோது நாடே துடித்தது. அனைத்து தரப்பு மக்களும் அம்மக்ககளுக்கு நேசக்கரம் நீட்டினர். ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளில் ஈடுப்பட்டனர். கடல் அலை தாக்கி மக்கள் பிணக்குவியல் கிடந்த போது அதை புகைப்படம் எடுக்கவும், விளப்பரப்படுத்தவும் பலர் அலைந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. ஆனால் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சென்னை முதல் கன்னியாகுமரிவரை நூற்றுக்கணக்கான கிராமங்களில் சுனாமி பாதித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே களத்தில் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்றியது.

நாகை மாவட்டம் அக்கரப்பேட்டையில் காவல்துறையும், இராணுவமும் செய்யத்தவறிய அல்லது செய்ய முடியாமல் நின்ற பிணங்களை அகற்றும் பணிகளை வாலிபர் சங்கம் செய்தது. நாகை அக்கரப்பேட்டையிலும், கீச்சாங்குப்பத்திலும் நூற்றுக்கண்கான பிணங்களை கண்டறிந்து அவைகளை எரித்தனர். அம்மக்கள் தங்கவைக்கப்பட்ட மண்டபங்களில் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். கிள்ளையில் தற்காலிக கழிவரைகளை அமைத்துக் கொடுத்தனர், உணர்சி வயப்பட்ட பல ஊரைசார்ந்த மக்கள் கையில் கிடைத்த துணிகளையும், உணவுப் பொட்டலங்களையும் கொண்டுவந்து குவித்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கருத்தில் கொள்ள யாரும் தயாரில்லாத அல்லது அதற்கான வாய்ப்பில்லாத சுழலில், வாலிபர் சங்கம் அம்மக்களுடன் தங்கி இருந்து தேவைகளை கணக்கிட்டு செய்தது. குறிப்பக குழைந்தைகளின் தேவைகள், கர்பினி பென்களின் பிரச்சினைகளில் தலையிட்டது.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை வாலிபர் சங்கத்தின் மாநில தலைமை முதல் கிளை உறுப்பினர்கள் வரை நூற்றுக்கணக்கான தோழர்கள் தன்னெழுச்சியாக மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட போது “சேவை” செய்ய வந்த நூற்றுக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மெல்ல மெல்ல சென்று விட்டன. இரண்டு ஆண்டுகளை கழித்து இன்னும் அம்மக்களுடன் பணியாற்றுவது ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடிய அமைப்புக்களே! ஆனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அம்மக்களுக்காக இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து இரவு பாடசாலைகளை நடத்திவருகிறது. பலகிராமங்களில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரண உதவிகளுக்காக போராட்டங்களை நடத்தியது. சுனாமி வந்துச் சென்றதும் நிவாரண பணிகளில் உள்ள குளறுபடிகளை கண்டித்து தமிழகத்திலேயே நாகையில்தான் முதல் போராட்டம் வாலிபர் சங்கத்தால் நடத்தப்பட்டது.

சுனாமி பேரலை பாதிப்பை பயன்படுத்தி கடல் சார் நிலங்களை பண்னாட்டு நிறுவனங்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் கேளிகை விடுதி அமைக்கவும், தங்கும் விடுதி அமைக்கவும், இறால் பண்னைகளை அமைக்கவும் ஜெயலலிதா அரசு முயற்சி செய்தது. மீனவமக்கள் கடற்கரையிலிருந்து 500 மீட்டர் அளவுக்கு வீடுகளை கட்டகூடாது என அறிவித்தது. ஆனால் மீனவமக்களின் தலைமுறை சொத்தான அப்பகுதிகளை விட்டு அவர்களை வெளியேற்ற கூடாது என முதல் குரல் கொடுத்தது வாலிபர் சங்கம்தான். குரல் கொடுத்தது மட்டுமல்ல வலிபர் சங்க தோழர்களுக்கு பயிற்சியளித்து நாடகத்தின் மூலம் எதிர்ப்பு பிரச்சாரத்தை நூற்றுக்கணக்கான கிராமங்களில் நடத்தியதும், போஸ்டர் கண்காட்சியின் மூலம் பிரச்சினையின் தீவிரத்தை மக்களிடம் கொண்டு சென்றது அம்மக்களிடமும் எழுச்சியை உண்டாக்கியது அதன் விளைவாக அப்பிரச்சினையில் ஜெயலலிதா அரசு பின்வாங்கியது.

சுனாமி நிவாரணப் பணிகளில் கோடிகோடியாய் மீனவமக்கள் நன்மை அடைந்ததாக ஆளும் அரசுகளும், சில தன்னார்வ தொண்டுநிறுவனங்களூம் மக்களிடம் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளன. ஆனால் உண்மை என்ன? சுனாமி சோகம் முடிந்ததும் அம்மக்களுக்கான தற்காலிக குடிசைகளில் 10 சதம்கூட அரசு அமைக்கவில்லை, ஓராண்டு கடக்கின்றவரை அம்மக்களுக்கு ஒரு வீடு கூட கட்டித் தரப்படவில்லை.

இரண்டாம் ஆண்டு முடிந்தபோதுதான் பல இடங்களில் பண்ணட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில நூறு வீடுகளை கட்டிக் கொடுத்தனர். ஒருலட்சத்து தொண்ணூறாயிரம் வீடுகள் சேதம் அடைந்து, எட்டாயிறத்து ஒன்பதுபேர் இறந்த தமிழகத்தில் 1000 வீடுகளுக்குள்ளேயே இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு முழுவதும் 1,089 கிராமங்களை துடைத்தெடுத்து, 10,237 உயிர்களை பலிவாங்கிய, 2,39,024 வீடுகளை அழித்து அந்த குடும்பங்களை வீதியில் நிறுத்திய சுனாமி பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திந் நிலையே இதுதான் என்றால் மற்ற மாநிலங்களை எளிதில் புரிந்துக் கொள்ள முடியும். உதாரணமாக பாண்டி அரசாங்கம் சுனாமிக்காக வந்த நிதியில் கிட்டதட்ட இருபது கோடி ரூபாயை வேறு பணிகளுக்காக செலவிட்ட துரோகமும் நடந்துள்ளது.

அது மட்டுமல்ல அம்மக்களுக்கு அரசு அறிவித்த எந்த நல திட்டங்களும் அறிவித்தது போல் சென்றடையவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் மீனவமக்கள் போராடுவது துவங்கியுள்ளது.

இப்போராட்டமும் கூட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் துவங்கி உள்ளது. ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தன்னார்வ தொன்டு நிறுவனங்கள் சேவை என்ற பெயரில், அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய தன் பொறுப்புகளில் இருந்து விடுபட, போராட்டங்களை பின்னுக்கு தள்ள உதவிகளை அள்ளித் தெளித்தனர்.

இதன் விளைவு என்னவெனில் நாம் சுனாமி பாதித்த பகுதிகளில் குடிநீர், சாலைவிளக்கு, சுகாதார பிரச்சினைகளுக்கு போராட அழைத்தால் இதற்கெல்லாம் எதற்கு போராட்டம். என்.ஜி.ஓ காரர்களிடம் கேட்டால் தேவையான வசதிகளை செய்து கொடுக்கப் போகிறார்கள் என்று கூறும் நிலை இருந்தது. நிரந்தர தீர்வு அளிக்க வேண்டிய அரசுகள் இன்றுவரை செய்த பட்டியலை பார்த்தால் உண்மை தெரியும்.

இந்த விபரங்கள் நாடாளுமன்றத்தில் டிசம்பர் மாதம் இந்திய அரசின் கணக்குத் தணிக்கைத் தூறை (சி.ஏ.ஜி) சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளவை.

மாநிலங்கள் கேட்டது: ரூ. 11,79 6.40 கோடி
மத்திய அரசு சிபாரிசு செய்தது: ரூ. 5,690.81 கோடி
உள்துறை அறிவித்தது : ரூ. 3, 644. 05 கோடி
திட்டக் கமிஷன் வழங்கியது : ரூ. 1,607.01 கோடி
மாநிலங்கள் பெற்றது : ரூ. 1,759.05 கோடி
பயன்படுத்தப்ட்ட நிதி : ரூ. 1,074.98 கோடி

மாநிலங்கள் தாங்கள் கேட்டதைவிட 10 சதவீதம் குறைவான தொகையையே செலவிட்டன.

மேலும் ரூ. 228.58 கோடி தவறாக பயன்படுத்தின அல்லது வேறு வகையில் செலவிட்டன.

கேரளா: பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதி(கி.மீ) 250 கடல் அலையின் உயரம் ( மீட்டரில்) : 3-5 பாதிக்கப்பட்ட ஜனத்தொகை (லட்சங்களில்) : 13 சாவு : 171 சேதமடைந்த வீடுகள் : 17,382

புதுச்சேரி: பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதி(கி.மீ) 25 கடல் அலையின் உயரம் ( மீட்டரில்) : 10 பாதிக்கப்பட்ட ஜனத்தொகை (லட்சங்களில்) :0.43 சாவு : 593 சேதமடைந்த வீடுகள் : 10,061

தமிழ்நாடு: பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதி(கி.மீ) 1,000 கடல் அலையின் உயரம் ( மீட்டரில்) : 7-10 பாதிக்கப்பட்ட ஜனத்தொகை (லட்சங்களில்) : 8.97 சாவு : 8,009 சேதமடைந்த வீடுகள் : 1,90,000

ஆந்திரப் பிரதேசம்: பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதி(கி.மீ) 985 கடல் அலையின் உயரம் ( மீட்டரில்) : 5 பாதிக்கப்பட்ட ஜனத்தொகை (லட்சங்களில்) :

1. 96 சாவு : 105 சேதமடைந்த வீடுகள் : 481

அந்தமான் நிகோபார்: பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதி: முழுவதும் கடல் அலையின் உயரம் ( மீட்டரில்) : 10 பாதிக்கப்பட்ட ஜனத்தொகை (லட்சங்களில்) : 3. 56 சாவு : 1.395 சேதமடைந்த வீடுகள் : 21,100
கற்றுக் கொள்ளப்படாத பாடம்:

கேரளா: நகர- நாட்டுப்புற திட்டமிடல் சட்டம், கடலோர மண்டலம் உருவாக்குதல், கடலோரப் பகுதி கட்டுப்பாடுகள் மறு ஆய்வு சுனாமிக்குப் பிறகும் நடக்கவில்லை.

ஆந்திரப்பிரதேசம்: நகர திட்டமிடல் சட்டம் 1920 ஐ திருத்த முன்வரைவு தயார். நில பயன்பாட்டிற்கான நகராட்சி சட்டம் 1965ன் திருத்த நிலுவையில் உள்ளது.

தமிழ்நாடு: வருவாய் துறையும் பேரிடர் தற்காப்புத் துறையும் புதிய நில பயன்பாடு மற்றும் கட்டுமான துணை விதிகளை இன்னும் முன்மொழியவில்லை.

அந்தமான் நிகோபார்: துணை விதிகள்,மண்டல கட்டுப்பாடுகள், ஆபத்தான கட்டிடங்களைப் பற்றிய மறு ஆய்வு நடக்கவில்லை. வழிகாட்டுதல்கள் மற்றும் ரூ. 2.63 கோடி நிதியுதவியை மீறி ஐந்து அவசரகால உதவி மையங்களில் ஒன்று மட்டுமே உருவாகியுள்ளது.

வீட்டு வசதி குழப்பம்:

ஆந்திரப்பிரதேசம்: 481 வீடுகள் சேதமடைந்தன. 2006 செப் வரை 59 வீடுகள் மட்டுமே கட்டித் தரப்பட்டன.

கேரளா: என்.ஜி. ஓக்கள் கட்டித் தர வேண்டிய 4,053 வீடுகளில் 2,431 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு: திட்டமிட்ட 14 திட்டங்களில் 2 மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. 51 வரைபடங்கள் நிலுவையில் உள்ளன.

புதுச்சேரி: என்.ஜி.ஓக்கள் கட்டித் தர வேண்டிய 5,245 வீடுகளில் 197 மட்டுமே தயார்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com