Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஜனவரி 2007

தலையங்கம்

வருக புத்தாண்டே

ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும் அடுத்த ஆண்டுக்காண துவக்கத்தில் கடந்த ஆண்டின் சாதக பாதகங்களை பார்ப்பது, வருகின்ற ஆண்டின் நடவடிக்கைகளுக்கு உதவும். அப்படி கடந்த ஆண்டு நிகழ்வுகளை பார்க்கின்ற போது உலக அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தது மட்டுமல்ல லத்தின் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளின் வெற்றி புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி உள்ளது. வெனிசுலாவில் சாவோஸ், பிரேசிலில் லூலா உள்ளிட்டோர் மீண்டும் வென்றுள்ளது மட்டுமல்ல சிலி, நிகரகுவா போன்ற நாடுகளிலும் அமெரிக்காவிற்கு மரணஅடி கிடைத்துள்ளது. இதைவிட மிகப்பெரிய அடி ஜார்ஜ்புஷூக்கு அவரது சொந்த நாட்டு தேர்த்லில் கிடைத்த தோல்விதான். இருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது போர்வெறியையும், பொருளாதார நாட்டாமையையும் கைவிடாமல் மேலும் அதிகப்படுத்தி உள்ளது.


ஆசிரியர் குழு

எஸ்.கண்ணன்
ஆர்.வேல்முருகன்
ஆர்.வேலுசாமி
வி.ஜானகிராமன்
எம்.கவிதா

ஆசிரியர்

எஸ்.ஜி.ரமேஷ்பாபு

முகவரி:

ஏ.பாக்கியம்
118/10, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 600 003

[email protected]

ஆண்டு சந்தா: ரூ.50
ஆயுள் சந்தா: ரூ.500

டிசம்பர் 2006
அணுசோதனை விஷயத்தில் வடகொரியாவை மிரட்டியதும், மூன்றாம் உலக நாடுகளை கடன் வலையில் சிக்க வைப்பதும், எண்ணெய் வள நாடுகளை அடிமைப்படுத்த துடிப்பதும், உலக மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் சதாம் உசேனை கைப்பாவை அரசு மூலம் தூக்கிலிட்டதும் என அதன் அடாவடி தொடர்கிறது. எனவே உலகம் முழுவதும் எழுந்து வரும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை கட்டி வளர்க்க வேண்டியது அவசர அவசிய கடைமையாகிறது.

இந்தியாவில் கடந்த ஆண்டில் நடைப்பெற்ற தேர்தல்களில் மேற்குவங்கம், கேரளாவில் இடதுசாரிகள் மகத்தான சாதனை புரிந்து வெற்றி அடைந்திருப்பது மக்கள் இயக்கங்களின் மகத்தான சாதனையாகும். மற்றொன்று மக்கள் இயக்கங்களின் போராட்டங்களில் கிடைத்த வெற்றியில் குறிப்பிட தகுந்தது, தகவல் அறியும் சட்டமும், கிராமப்புற வேலை உத்தரவாத சட்டமும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களாகும். இவைகளுக்காக தொடர்ந்து போராடிய இடதுசாரி அமைப்புகள் இவ்வெற்றிக்கு அடிப்படையானவர்கள் என்பதை மறுக்க இயலாது.

தமிழகத்தில் ஐந்தாண்டு காலம் அடாவடி ஆட்சி நடத்திய ஜெயலலிதா அரசு மக்கல் சக்தியால் தூக்கி எறியப்பட்டது நடந்தது. ஆனால் அதேநேரம் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பலமான எதிர்க்கட்சியும் அமர்ந்தது கடந்த ஆண்டில்தான். பாப்பாபட்டி கீரிப்பட்டி உட்பட நான்கு பஞ்சாயத்தில் தேர்தல் நடந்தது ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. புதிதாக அமைந்த திமுக தலைமையிலான ஆட்சி பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை அமுல்படுத்தி வருவது பாராட்டுதலுக்கு உரியது. இருப்பினும் தமிழக இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை அப்படியேதான் உள்ளது. கிராமபுரத்தில் உள்ள இளைஞர்களும் இளம்பெண்களும் நகர்புறம் நோக்கி தங்கள் வேர்களை இழந்து ஓடிவருவது அதிகரித்துள்ளது. நகர்புறம் நோக்கி ஓடி வரும் இவர்கள் அணிதிரட்டப்படாத தொழில்களில் எவ்வித பணி பாதுகாப்பும் இல்லாமல் நெருக்கடியில் உழன்று வருகின்றனர். இவர்களை பாதுகாப்பது அரசின் அவசிய கடைமையாகிறது.

தமிழக அரசின் வேலையில்லா கால நிவாரணம் என்பது பத்தாண்டுகால வாலிபர் சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அவநம்பிக்கையுடன் இருக்கும் இளைஞர்களை மீண்டும் திரை அரசியலின் பின்னால் அனுப்பிடும் ஊடக பிரச்சாரங்களுக்கு மத்தியில், வாலிபர் சங்கத்தின் இந்த மகத்தான சாதனை தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த மாற்றங்கள் நிறைந்த கடந்த ஆண்டில் இடஒதுக்கீட்டை எதிர்த்த போராட்டமும், கயர்லாஞ்சியில் நடைப்பெற்ற தலித் மக்கள் படுகொலைகளும் ஆதிக்கசக்திகளின் திமிர்தனம் மிக்க சவாலாய் நமக்கு முன்னே நிற்கிறது. புத்தாண்டின் சபதம் இவைகளுக்கு எதிராய் இல்லாமல் வேறு எதை எதிர்த்து?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com