Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
பிப்ரவரி 2007

யார் வீட்டு நெய்யோ என் பொண்டாட்டி கையோ
ஹேமலதா

10 மில்லியனர்களுக்காக திட்டம் தீட்டாதீர்கள். 1 மில்லியன் இந்திய மக்களுக்காக திட்டம் தீட்டுங்கள்.
- வீ.ஆர்.கிருஷ்ணய்யர்

நாடு முழுவதும் பொருளாதார புலிகளின் (?) நடமாட்டம் அதிகரித்துள்ளது. அமைச்சர்களின் அமைச்சர்களாக, நிர்வாக துறையின் அதிகாரிகளாக இவை முகம் காட்டிகின்றன. ஏழை, எளிய மக்களின் கிழிப்பட்ட வாழ்க்கை இவற்றின் கூர்நகங்களில் தொங்குகின்றது.

தொலைகாட்சிகளில் முகம் காடுகிற அன்னிய முதலீட்டாளர்களை சலுகைகளால் குளிப்பாட்டினால் தான் நாடு வளரும் என்று அடித்து பேசுகின்றன. அனைத்து துறைகளிலும் தனியார்மயம் அமுலாவதுதான் இந்திய குடிமகனின் நாளைய சோற்றுக்கு வழி என்று ஓதுகின்றன.

பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன் தாமோதரன் போன்ற புலிகள், மக்கள்நலன் காக்கும் மாற்று வழிகள் யார் சொன்னாலும் கேட்க மறுக்கின்றன. ஜோசப் ஸ்டிக்லீஸ்ட் என்ற பொருளாதார நிபுணர் சென்னை கூட்டத்தில் இந்தியாவில் முழு மூலதன மாற்றம் அனுமதிக்கப்பட்டால் பொருளாதாரம் அடியோடு ஆட்டம் காணும் என்று எச்சரித்தார். உடனே தாமோதரன் சென்னையில் நடந்த மற்றொரு கூட்டத்தில் ஜோசப் ஸ்டிக்லீஸ்ட் நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல தேவையில்லை. அவர் நாட்டில் தடுக்க முடியாததை நம் நாட்டில் மட்டும் தடுக்க பார்க்கிறார் என்று எகதாளம் பேசி ஸ்டிக்லீஸ்டீன் எச்சரிக்கையை இடதுகால் பெருவிரலால் எந்துகிறார்.

எதற்கெடுத்தாலும் சீனாவை பாருங்கள், சீனாவை பாருங்கள் என கைகாட்டுகின்றன. சீனாவே அன்னிய மூலதனத்தை கொண்டாடுகிறது, என்று சொல்லி அன்னிய மூலதன எதிர்ப்பு குரலை அமுக்கப் பார்க்கின்றன. ஒருபொழுதும் சீனாவின் ஒருங்கிணைந்த பொருளாதார கொள்கைகள் வளர்ச்சியை நம்மிடம் இவை விளக்கியதில்லை.

இப்புலிகளிடம் சீனாவை பாருங்கள் என்று நாம் கைகாட்ட பல வாய்ப்புகள் உள்ளது. அன்னிய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்துவகைகளையும் சீன அரசு ஜனவரி -2007 முதல் முற்றிலும் ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அன்னிய - உள்நாட்டு கூட்டு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். சீனாவை இவ்விசயத்தில் முன்மாதிரியாக கொள்ள நம் புலிகள் தயாரா என்று நாம் கேட்க வேண்டும்.

பொது விநியோகதுறையை சீரழிக்கும் வகையில் உணவு ரசீது திட்டத்தை (Food stam) சிலமாநிலங்களில் அமல்படுத்தும் யோசனை அரசிடம் உள்ளதாக தெரிகிறது. ஆனால் STI (soft Technology onk of india) திட்டத்தின் கீழ் பதிவான பெரும் நிறுவனங்கள் உள்ளிட்டு அனைத்து மென் பொருள் கம்பெனிகளுக்கும் 2010 வரை முழு வரிச் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 10 ஆண்டுகளுக்கு இவ்வரிச் சலுகைகள் தொடரும் என்று சர்வசாதாரனமாய் அரசு அறிவிக்கிறது. இதில் உள்ள பெரும் நிறுவனங்களின் இயக்குனர்கள் ஈவுத் தொகையாகவும் சம்பளமாகவும் பல கோடி ரூபாய்களை வீட்டிற்கு கொண்டுசென்றனர் என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பல ஆண்டுகளுக்கு இவர்கள் சொத்துமேல் சொத்துசேர்க்க அரசு தனது வரிவருவாயை விட்டுக்கொடுக்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com