Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்ட் 2007

சிறைக்குள் ஒரு புயல்

- ஆர். வேல்முருகன்

1991 ம் ஆண்டின் “அமைதிக்கான நோபல் பரிசு” அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்த நேரம் அது. அனைவரும் எதிர்பாரா வண்ணம் நோபல்பரிசு கமிட்டி அறிவித்தது, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பெறுபவர் “சக்தியற்ற-வர்களின் சக்தியாக திகழும்“ ஆங் ஸான் சூ கீ என்று. இவர் யார், எந்த நாட்டைச் சார்ந்தவர் என தேடினார்கள். எப்படியும் பரிசு வாங்க வரும் போது பேட்டி எடுத்துவிடலாம் என காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பரிசு வாங்குவதற்கு அவரின் புதல்வர்கள்தான் வந்தனர். பரிசுத் தொகையான 13 லட்சம் அமெரிக்க டாலரை எங்கள் குடும்பத்திற்கு பயன்படுத்துவதை விட பர்மா மக்களின் கல்விக்கும், சுகாதாரத்-திற்கும் பயன்படுத்தவே விரும்புகிறோம் என்று விண்ணதிர முழங்கினர்.

யார் அந்த சூ கீ.

அப்போதுதான் தெரிய வந்தது சூகீ பர்மாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் 1989 ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியிலிருந்து கைது செய்யப்பட்டு இன்று வரை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி உலக அரங்கில் தெரிய வந்தது, இதோடு சூ கீ யின் நெடிய வரலாறும் தெரிய வந்தது.

1824 முதல் 1885 வரை நடந்த ஆங்கிலோ பர்மா போர்களில் தோற்றதன் மூலமாக பர்மா மன்னர் கைது செய்யப்பட்டு மஹாராஸ்ட்ரா சிறையில் அடைக்கப்பட்டார்.
பர்மா இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. ஆங்கில ஏகாதியபத்தியத்தை எதிர்த்து பர்மாவின் விடுதலை போராட்டத்தை தொடங்கியவரும் பர்மா மக்களின் தந்தை என்று அனைவராலும் வர்ணிக்கப் பட்டவருமான ஆங் ஸானின் மகள் தான் சூ கீ என்று தெரியவந்தது.

விடுதலையை நோக்கி பர்மா
பர்மாவை அடிமையாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க ரங்கூன் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த ஆங் ஸான் மாணவர் பருவத்திலேயே மாணவர் சங்க தலைவராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் ஜப்பான் உடன் கூட்டு சேர்ந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்தார். பின்னர் தான் ஜப்பானின் குள்ளநரித் தனம் தெரியவந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும், ஜப்பானிற்கும் எந்தவித்தியாசமும் இல்லை என்பது நிருபணம் ஆனது. அடுத்த கட்டமாக பர்மா மக்களின் விடுதலைக்காக தீவிரமான முயற்சியில் இறங்கிருந்த ஆங் ஸான். இக்காலத்தில் பி.ஐ.ஏ ( பர்மா சுதந்திர ராணுவம்) என்ற அமைப்பை உருவாக்கி செஞ்-சேனை உதவியுடன் பர்மாவிலிருந்து ஜப்பானை விரட்டியடித்தார்.

பிரிட்டிஷார் இந்திய சிப்பாய்களின் உதவி-யோடு பிரித்தாளும் சூழ்ச்சியால் மீண்டும் பர்மாவை காலனியாக்கினர். அப்போது வழிதெரி-யாத ஆங் ஸான் பர்மாவின் விடுதலை, சுயாதி-பத்தியம் குறித்து இங்கிலாந்து சென்று கிளமென்ட் அட்லியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார். இக்காலத்தில் பர்மா முழுவதும் ஆங் ஸானின் புகழ் பரவிக்கொண்டே இருந்தது. பர்மா மக்கள் அனைவரும் அன்போடு பர்மாவின் தந்தை என அழைக்கப்பட்டார். இதை தாங்கமுடியாத வெள்ளை ஏகாதிபத்தியம் சதி செய்து அவரை கொலை செய்ய முயன்றது.

சா என்பவரின் உதவி-யோடு ஆங் ஸான் நடத்திக் கொண்டிருந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் இயந்திர துப்பாக்கியோடு சென்ற ஒரு குழுவினர் ஆங் ஸான், அவரது சகோதரர் பாவின் மற்றும் அனைவரையும் சுட்டு கொன்றனர். இக்கொலை பர்மா முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் போராட்டம் பேரலையாக வெளிப்பட்டது. அரசு நிர்வாகம் முழுவதும் ஸ்தம்பித்தது. இச்சூழலில் தான் 1948 ஜனவரி 4 அன்று பர்மா சுதந்திர நாடாக சுதந்திர காற்றை சுவாசித்தது.

பர்மாவின் முதல் பிரதமராக ஊநூ 1962 வரை ஆட்சி செய்தார். ஆனால் சுதந்திர பர்மாவில் மக்களுக்கான எந்த திட்டமும் அமுலாகவில்லை. மாறாக உட்கட்சி போராட்டம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உரு-வாக்கியது.
இராணுவ சர்வாதிகாரம்

பர்மாவில் அமைதியை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் ராணுவ துணைத் தளபதியாக இருந்த நீ வின் 1962 மார்ச் 2ம் தேதி ராணுவ ஆட்சியை அமலாக்கினார். இராணுவ ஆட்சியை அகற்றக் கோரி பல லட்சக்கணக்கான மாணவர்களும், தொழிலாளர்களும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளும் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். இப்போராட்டத்தை ராணுவத்தை வைத்து மாணவர்களை சுட்டுக் கொன்றும், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பர்மாவின் நம்பிக்கை நட்சத்திரம்

பர்மா முழுவதும் கொதித்து கொண்டிருந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்க ஆங் ஸானின் மகளான சூ கீ மக்களின் நம்பிக்கை குரிய தலைவியாக மாறினார். பர்மா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து லட்சக்கணக்கான மக்களை திரட்டி பர்மாவில் ஜனநாயகத்தை நிர்மாணிக்க முறையான தேர்தல் நடத்தி மக்களுக்கான அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று போராடி வந்தனர். சூ கீ செல்லும் இடம் எல்லாம் ராணுவத்தின் தடையையும், மிரட்டலையும் மீறி துப்பாக்கி தோட்டாக்களுக்கு இரையாகியுங்கூட பல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

இதை பொருத்து கொள்ள முடியாத இராணுவ அரசாங்கம் அவருக்கு எதிரான தடை, சதி செயல்களை செய்து வந்தது. ஆங் ஸான் மறைந்த ஜூலை 19 அன்று பர்மா முழுவதும் தியாகிகளின் நினைவு தினமாக அனு°டிக்க சூ கீ யின் ஜனநாயகக் கழகம் முடிவு செய்தது. அதனடிப்-படையில் 1989 ம் ஆண்டு பல லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதை உணர்ந்த ராணுவ அரசாங்கம் ஜூலை மாதம் 16ம் தேதியன்று சூ கீ யை கைது செய்து வீட்டு காவலில் வைத்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தலைவர்கள் அனைவரும் சிறைச்சாலையில் தாங்கொண்ண கொடுமைக்கு ஆளாயினர்.

இதை அறிந்த சூ கீ அவர்களை எப்படி நடத்துகின்றீர்களோ அப்படியே என்னையும் நடத்துங்கள் என ஜூலை மாதம் 20 ம் தேதி தொடங்கி தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இந்த உண்ணாவிரதத்தை மக்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ள ராணுவ அரசாங்கம் பெரும் முயற்சி செய்தது. ஆனால் மக்களுக்கு எப்படியோ தெரிந்து பர்மா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் போராடத் தொடங்கினார்கள். வேறுவழியின்றி சூகீ யின் கோறிக்கை 15வது நாளில் ஏற்றுக்கொண்டனர். அதேநேரத்தில் இப்போராட்டத்தை ஒடுக்க சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை சுட்டுக் கொன்றனர்.

இச்சூழ்நிலையில் வேறு வழியின்றி ராணுவ அரசாங்கம் 1990 ம் ஆண்டு ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷனுக்கு அனுமதியளித்தது. இத்தேர்தலில் ஜனநயாக கழகத்தை சார்ந்த தலைவர்கள் 485 தொகுதிகளில் போட்டியிட்டனர்.
ஆனால் சூ கீ யை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. ராணுவ அரசாங்கத்தை நடத்திவந்த நீ வின் தலைமையில் இருந்த கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஆனால் ஜனநாயக கழகத்தை சேர்ந்த வேட்பாளர்கள் 392 பேர் வெற்றி பெற்றனர். சுமார் 80 சதமானம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற ஜனநாயக கழக உறுப்பினர்களை ஆட்சி அமைக்க விடாமல் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத நீ வீன் மீண்டும் ராணுவ அரசாங்கத்தை அமலாக்கினார்.

சூ கீ பல ஆண்டு காலமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த விஷயம் உலகறிந்த செய்தி-யாக மாற்றப்பட்ட சூழ்நிலையில் ஐ.நாவின் தீர்மானத்-தின் அடிப்படையில் 2002 மே 6 அன்று சூ கீ விடுதலை செய்யப்பட்டார். ஆனால் 2003 ம் ஆண்டு பர்மா முழுவதும் சுற்று பயணம் செய்ய முயற்சி செய்த சூ கீ யை மே மாதம் மீண்டும் ரங்கூன் சிறையில் அடைத்தனர்.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் சூ கீ யை கைது செய்து சிறையில் அடைத்து விட்டால் போராட்டம் முடிந்து விடும் என்று கனவு கண்ட ராணுவ அரசிற்கு ஒவ்வொரு நாளும் நீங்காத தலைவலியாக மக்களின் போராட்டம் பெரும் புயலாய் வீசிக் கொண்டிருக்கிறது.

“எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளார்களோ அங்கெல்லாம் எனது கால்கள் பயனிக்கும்” என்ற சேகுவேராவின் வைரவரிகளை நெஞ்சில் தாங்கிய ஆங் ஸான் சூகி விடு-தலையடையவும், பர்மா மக்களின் விடுதலைக்கான, ஜனநயாகத்திற்கான போராட்டம் வெற்றியடையவும், இந்திய மக்களின் சார்பாகவும், முற்போக்கு சக்திகளின் சார்பாகவும் இந்திய ஜனநயாக வாலிபர் சங்கம் பர்மாவிற்கான ஆதரவு இயக்கத்தில்...

ஆகஸ்ட் 8 -2007ல் கைகோர்ப்போம்... ஜனநாயகத்தை பாதுகாப்போம்...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com