Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்ட் 2007

ஆசியக் கோப்பை வழங்கிய ஆனந்தம்

- மு. சங்கரநயினார்

போர் மேகங்கள் சூழ்ந்து எந்நேரமும் மரணபயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டு மக்களுக்கு தற்காலிகமாகவேனும் மகிழ்ச்சியை அளிக்க யாரால் முடியும்?

எங்களால் முடியும் என்று நிரூபிடத்துள்ளார்கள் ஈராக் கால்பந்து வீரர்கள்.

மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா, மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாக நடத்திய ஆசிய கோப்பை கால்பந்தாட்டப் போட்டி-யின் இறுதி ஆட்டத்தில் ஈராக், சவுதி அரேபியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று முதன் முறையாக ஆசியக் கோப்பையை வென்று தங்கள் நாட்டு மக்களின் துயரங்களுக்கு மாமருந்தாக சமர்ப்பணம் செய்துள்ளது.

அமெரிக்கப்படைகளின் அட்துமீறல்களால் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவிட்து வரும் ஈராக் மக்கள் இந்த கால்பந்து வெற்றியின் மூலம் தங்களின் அனைட்து துயரங்களையும் மறந்து ஆனந்தக் களிநடனம் புரிந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

ஆசியக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் துவங்கியபோது ஈராக் கோப்பையை வெல்லும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டாகள். அவ்வணிக்கு பயிற்சியளிட்த பிரேசிலைச் சேர்ந்த ஜோர்வான் வியரா வெறும் இரண்டே மாதங்களில் ஈராக் அணியை கோப்-பையை வெல்லும் அளவிற்கு தயார் செயதுள்-ளார் என்றால் அதில் அவரது திறமையோடு சேர்ந்து ஈராக் வீரர்களின் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும் அடங்கியிருந்துள்ளது என்பதை அறிய முடியும். ஏனெனில் ஈராக் வீரர்களை ஒன்றிணைட்து பயிற்சியளிப்பதே பெரும் சவாலாக இருந்ததாக வியரா கூறுகிறார்.

காரணம் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டும் ஷியா, சன்னி, மற்றும் குர்திஷ் இன வீரர்கள் ஈராக் அணியில் இடம்பெற்றிருந்தார்கள். இவர்களையெல்லாம் ஒருநிலைப் படுத்தி பயிற்சியளிப்பதென்பது சாதாரண விஷயமல்ல.

போட்டிகளின் துவக்கத்திலிருந்தே மிகத்திறமையாக விளையாடிய ஈராக் அணி காலிறுதியில் வியட்நாமையும், அரையிறுதியில் தென் கொரி-யாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

1956ல் துவங்கிய ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகளின் வரலாற்றில் 1976ல் நான்காவது இடட்தைப் பிடித்திருந்ததே ஈராக்கின் இதற்கு முந்தைய சாதனையாகும்.

தங்களின் இந்த தொடர் வெற்றி நாட்டில் துயரங்களை அனுபவிக்கும் மக்களுக்கு ஓரளவிற்காவது நிம்மதியை அளிக்கும் என்று அரையிறு-திப் போட்டிகளுக்கு முன்பாகவே ஈராக் அணியின் கோல்கீப்பர்

சுர் சாம்ப்ரியான் கூறியிருந்தார். ஈராக் அணி கோப்பையை வென்றதில் இவரின் பங்கு முக்கிய-மானதாகும். அரையிறுதிப் போட்டியின் கூடுதல் நேரத்தின் 95வது நிமிடத்தில் தென் கொரியாவின் லீ சுன் சூ 20 மீட்டர் தூரத்தில் இருந்து தொடுத்துவிட்ட பந்தை சாம்ப்ரியான் மிகத்திறமையாக தடுத்திராவிட்டால் ஒருவேளை இந்த ஆசியக் கால்பந்துக் கோப்பை ஈராக்கிற்கு கிடைக்காமல் போயிருக்கக்கூடும்.

பெனால்டி ஷீட் அவுட்டிலும் சுர் சாம்ப்ரியான் ஆட்ட நாயகனாக வலம் வந்தார்.

இறுதிப் போட்டியில் சவுதி அரேபியாவை எதிர்கொண்ட ஈராக் ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் தங்களது முதல் கோலை அடித்தது. அதுவே ஆசியக் கோப்பையை ஈராக் முதன் முதலாக வெல்வதற்கான கோலாகவும் அமைந்தது. அதன்பின் சவுதி அரேபியா நடத்திய அனைத்து முயற்சிகளையும் ஈராக் தங்களின் தடுப்பு ஆட்டத்தினால் முறியடித்துவிட்டது.

ஈராக்கின் இந்த வெற்றியை அந்நாட்டு மக்கள் அளவில்லா ஆனந்தத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். எந்தவித இனவேறுபாடுகளுக்கும் இடமில்லாமல் இந்த வெற்றி அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டது. அமெரிக்கக் கூலிப்படைகளின் அட்டூழியங்களால் அல்லலுற்றுவரும் ஈராக் மக்களுக்கு ஆட்சியாளர்களால் வழங்க முடியாத ஆனந்தத்தை கால்பந்து வழங்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com