Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்ட் 2007

புத்தக விமர்சனம் - அஞ்சறைப் பெட்டி

ஜீவி
GV book காலம் வெளியிடு
25, மருதுபாண்டியன் 4வது தெரு,
கருமாரியம்மன் கோவில் எதிர் வீதி
மதுரை 625002
பக் 64, விலை ரூ. 30

சீரணிக்க உதவும் சீரகம், சூட்டைத் தணிக்கும் வெந்தயம், பொரியலுக்கு சுவை கூட்டும் பருப்புவகைகள், காரமான மிளகும், மிளகாயும் என பல்சுவை கொண்டது நமது வீடுகளின் “அஞ்சறைப் பெட்டி’. சமூகத்திலும் சூட்டைத் தணிக்கும் ஏற்பாடுகளும் சுவை கூட்டும் ஏற்பாடுகளும் மிகவேண்டும். ஆனால் சமூகம் நன்கு அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாய் எண்ணற்ற கவிதைகள் செல்லுலகில் செல்லரிக்கும் நட்பினை அழகாகப் படம் பிடிக்கும் கவிதைகள், மனைவியின் மனதின் உள்காயம், ஆடுகளம் என அழகழகாய் மனிதர்களின் உள்மனதை படம் பிடிக்கும் கவிதைகள்.

நாடறிந்த கவிஞர், பேச்சாளர் ஜீவியின் ஐந்தாவது தொகுப்பு இது. ஆடம்பர உலகில் மனிதர்கள் அனைத்தையும் ஆட்டிப் படைக்கிறார்கள். கையிலேயே வைத்திருக்கிறார்கள் என்பதை

‘அதைமட்டும்’ என்ற கவிதையில்
....
இன்லாண்டின் இடத்தை
எஸ்.எம்.எஸ் பிடித்திருக்கிறது
....
ரிமோட் ரிமோட்
ஆஷ்ஸ்ட் ஆஸ்ட்ரே
வார இதழ்கள்...
எடுக்கிற இடத்தில்
எல்லாமும் வைத்துவிட்டு
மனசை மட்டும்
வைத்திருக்கிறார்கள்
தொட முடியாத தூரத்தில்.

தொடர்களின் இடைவேளைகளில் சாம்பாரும், ரசமும் பரிமாறப்படும் உலகில் மனிதர்கள் பேசலாம். மரங்கள் பேசிக்கொள்ள நேரமேது?

மேலும் ‘விளக்கம்’ என்ற கவிதையில் எல்லா பொருட்களுக்கும் ஏற்ற பொருட்களை வைத்து விளக்கம் அம்மாவால் அப்பாவிடம் தனது மனசை விளக்க இயலாமல் போன சோகம் என ஏதோ மனிதர்களின் தோழிகள் கூட வித்தியாசமான கோணங்களில் விளக்கப்படுவது ஒரு நல்ல அடக்கமே.

அப்படி சுவையாறி அனைத்து கவிதைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். விஞ்ஞானிகளும், கவிஞர்களும் ஒரு விதத்தில் ஒன்றானவர்கள் எப்படி? அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை வித்தியாசமான கோணங்களில் பார்த்து விஞ்ஞானத்தை படைக்கும்போது கவிஞர்களோ கவிதைகளைப் படைக்கிறார்கள். காட்சியினைக் கண்டது கண்டபடி சொல்லும் போது கவிதைகள் பிறந்து விடுவதில்லை. மற்றவர்கள் காண மறந்ததை தான் காணும்போது கவிதைகள் பிறக்கின்றன. ‘கரும்புக் கண்ணாடி விருப்பத்தோடு அணிவிப்பதும், வெள்ளெடத்துக் கண்ணாடிகள் வேறுவழியில்லாமல் அணியப்படுவது’ என்ற பார்வை இதிலிருந்தே பிடிக்கின்றது. புதிய ‘நடிப்புச் சுதேசிகள்’ அறிமுகம் செய்து அன்றாடம் மனிதர்கள் நடிப்பில் பாராட்டும் பாங்கில் செயற்கையை இயற்கையாய் பகிர்வதில்தான் என்ன லாகம் அரிசியில் என்ற கவிதைகளும் கவிஞரின் அம்£ குதிர் திறப்பதும் அவரது மனைவி அரிசி பொட்டலம் பிரிப்பதும் நினைவுக்கு வருவது அனைவர் வாழ்விலும் அன்றாடம் நடப்பதே.

சுருங்கச் சொல்லி விளக்க வைக்கும் கலையும் செவிக்கு வாய்த்திருப்பது பல கவிதைகளில் வாய்த்திருப்பதை போலவே பல நீண்ட கவிதைகள் நீள்வதே தெரியாமல் எதார்த்தங்களே பரிமாறப்படுகின்றன. ஒருவிஷயம் மட்டும் தெளிவாகக் கூறமுடியும்.
கவிதை என்ற பெயரில் பல்வேறு புனைவுகள் மட்டுமே புனையப்படாமல் அவலங்கள் ஆங்காங்கே சுட்டிக் காட்டப்படுகின்றன. அன்றைக்கு காணாமல் போன மனிதநேயம், மனித உறவுகள் மீள இதுபோன்ற கவிதைகள் நிச்சயம் உதவும் என்று நம்பலாம். கை சுளுக்கிற்கும், கால் வலிக்கும் வேண்டுமானால் எக்ஸ்ரேயும் உதவி புரியலாம். ஆனால் இன்றைய சமூகம் மீண்டும் மனிதநேயப் பாதையில் நடை போட அன்னிய வைத்தியங்களை விட உள்நாட்டு வைத்தியமே நல்லது. அதற்கு நிச்சயம் ‘அஞ்சறைப் பெட்டி’ உதவும் என நம்பலாம். ஸ்ரீரசாவின் அணிந்துரை மேலும் சிறப்பு அளிப்பதாக உள்ளது.

- என்.மாதன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com