Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்ட் 2007

ஸ்பரிசம்

- கே.எஸ். கனகராஜ்

யாரைவிடவும்
உன்னோடுதான்
அதிகமாய் பேசியிருக்கிறேன்
என்
விருப்பங்கள்
வெறுப்புகள்
இன்ன பிறவும் குறித்து
இப்போது
உன்னைவிடவும்
நெருக்கமாய்
அமர்ந்து
என் இடது தோளில்
தலை சாய்த்து
கைவிரல்களின்
ஸ்பரிசம் பிடித்து
பேசிக் கொண்டிருக்கிறது
உனக்கான எனது கவிதை.

இலக்கு நோக்கி
சரியாய் எய்துகிறார்கள்
சொல் அம்புகளை
தடித்தவை
சிறியவை
மென்மையானவை
பருத்தவை
என சீக்கிரமே
மனது நிரம்பிவிட
வழியும்
வார்த்தைகளை
எடுத்து
வரிசையாய்
அடுக்கி
கவிதையாக்கிக்
கொள்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.