Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஆகஸ்ட் 2007

ஸ்மார்ட்

- வி. ஜானகிராமன்

கேரளாவில் சி.பி.ஐ. (எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த ஓராண்டு ஆட்சி என்பது “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல, அடுத்து வரும் ஆண்டுகளில் கேரள அரசின் செயல்பாடு நல்ல முறையில் அமையும் என்பது போல அமைந்துள்ளது.

Achuthananthan விவசாயத் துறையில்

புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தினால் தான் வளர்ச்சி ஏற்படும் என்று முதலாளித்துவ கட்சிகளின் செயல்பாட்டை உடைத் தெறிந்துள்ளது கேரள அரசு. குறிப்பாக விவசாயிகளுக்கான கொள்கை என்ற அளவில் விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்காக “விவசாயக் கடன் நிவாரண ஆணையம்” அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் செயல்படும் விதம் பாராட்டுக்குரியது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயி-களையும் (மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக) அழைத்து அவர்களை கூட்டுறவு சொசைட்டி, அரசு வங்கி மற்றும் அரசு சாரா அதிகாரிகள் கொண்டக் குழு சந்திக்கிறது. விவசாயிகளிடம் குறைகளைக்கேட்ட பின்னர், அவர்களின் கொள்முதல் விலை, விவசாயி வாங்கிய கடனைத் தீர்ப்பதற்கு வழிகாட்டுதல். இதில் பாராட்டப்பட வேண்டியவை விவசாயி வாங்கிய கடனால் அவதிப்பட்டால் அந்தக் கடனை கூட்டுறவு வங்கி, தள்ளுபடி செய்ய முடியவில்லையென்றால் அந்த விவசாயிகள் கடனை அரசே ஏற்றுக் கொள்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த விவசாயி மேலும் விவசாயத்தில் ஈடுபட அத்தனை வசதியும் செய்து தருகிறது. இந்த முறை என்பது சுதந்திர இந்தி-யாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை செய்ததில்லை. இதன் கூடவே நெல்லுக்கு மத்திய அரசு ஹி. 6.50 கொள்முதல் விலை நிர்ணயித்த விலையில் கேரள அரசு தன் விவசாயிகளின் துயர்போக்க ரூ. 8.50 ஆக உயர்த்தியது.

தொழிற் துறையில்

தொழிற்துறையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதலாளிகள் சொல் கேட்கும் காவலாளி ஆட்சி செய்தது கேரள காங்கிரஸ் அரசு. ஆனால் ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் கேரளத்தில் தொழில் தொடங்க வரும் முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்படாமல், அரசு விதிக்கும் நிபந்தனைகளை முதலாளிகள் ஏற்றக் கொள்ள வழி வகை செய்தது.

இதற்கு உதாரணமாக

துபாயைச் சேர்ந்த “டெக்காம் கம்பெனி” கேரளாவில் “ஸ்மார்ட் சிட்டி” அமைக்க முன் வந்தது. (நம்மூர் துணை நகரம் போல) இந்த கம்பெனிக்கு சாதகமாக முந்தைய கேரள அரசு பல நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது. ஆனால், இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்த பின்னர் முந்தைய அனைத்தையும் மறுத்து 26 சதம் பங்குகள் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியது.

நில ஆக்ஹரமிப்பு

பொதுவாக அரசு முதலாளிகள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கும் நிலங்களைக் கண்டும் காணாமல் போய்விடுவர். ஆனால், தற்போது கேரள அரசு ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களைக் கைப்பற்றுவது, முறையான அனுமதி இல்லாத கட்டிடங்களை இடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி துணிவாகச் செயல்பட்டது. இது மட்டுமல்லாமல், நகர்புற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிமனைப்பட்டா வழங்கியுள்ளது. கிராமப்புறங்களில் நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு எந்த ஆடம்பர விழாவும் நடத்தாமல் அரசாணை மூலம் பகிர்ந்து அளித்து சத்தமில்லாத சாதனை செய்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள்

62 கோடி ஹிðட்ய் நஷ்டத்தில் இயங்கிய 42 பொதுத்துறை நிறுவனங்களை ஒரே ஆண்டில் 93 கோடி ஹிðட்ய் லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு உயர்த்தி புதிய சாதனை படைத்துள்ளது இன்றைய கேரள அரசு. இச்சாதனைக்கு மிக முக்கிய காரணம் ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு தேவைப்படும் பொருட்களை மற்றொரு பொதுத்துறை மூலமே வாங்கியது, கொள்முதல் செய்ததால் பொதுத்-துறை வளர்ச்சிக்குப் பயன்பட்டது.

இடது ஜனநாயக முன்னணியில் 11 வது ஐந்தாண்டுத்திட்டம்

30 சதத்திற்கு மேல் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு இலவச மருத்துவமனை அமைத்துள்ளது.

கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தருவது.

100 கல்லூரிகளுக்கு புதிய கல்லூரி ஆசிரியர்கள் நியமிப்பது.

எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டம் அமல்படுத்துவது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச வீடு அல்லது பழைய வீட்டைப் புதுப்பித்தல் என்ற திட்டத்தை அமல்படுத்தியது.

அரசின் மிக முக்கிய கோஷம்

“விவசாயி ஆரோக்கியம், கல்வி உதவி செய்தல் என்பது உள்நாட்டு உற்பத்தி பெருகும். அதன் ஜிலம் வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்க்காமல் உள்நாட்டு உற்பத்தித் திறன் மூலமே மாநிலத்தில் செழிப்பான வளர்ச்சி ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தன் திட்டத்தை வகுத்துள்ளது இன்றைய கேரள அரசு.
பாராட்டுவோம், கற்றுக் கொள்வோம்

கேரள மாநிலத்தில் இந்த ஓராண்டுக்குள் இவ்வளவு சாதனை நிகழ்த்தியுள்ள சி.பி.ஐ. (எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியை நாம் அனைவரும் பாராட்டுவோம். அதேபோல் தமிழக ஆட்சியாளர்கள் கேரள அரசின் நல்ல நடவடிக்கைகளை கண்காணித்து தம் மாநிலத்திலும் அதை அமல்படுத்த முயற்சி செய்யலாம். தமிழக முதல்வர் திரு. கருணாநிதி கூறுவதுபோல் மேற்கு வங்கம், கேரள மாநிலத்திட்டங்களையும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களையும் கண்டறிய தமிழ்நாட்டின் சார்பாக அமைத்துள்ள குழு இரு மாநிலங்கள் செல்லும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பையும் வரவேற்போம்.

ஊமைகளை பேசவைத்தது

இடது முன்னணி அரசின் ஓராண்டு நிறைவை யொட்டி “மலையாள மனோரமா பத்திரிக்கை தலைப்பு செய்தியில் “மிஸ்டர் ஸ்மார்ட் (Smart) என்று கேரளா முதல்வர் திரு. அச்சுதானந்தனை பாராட்டியது. ஏனெனில் இப்பத்திரிக்கை தொடர்ந்து இடதுசாரி அரசினை அவதூறு செய்து வந்தாலும், ஓராண்டு சாதனை கண்டு பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.