Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
ஏப்ரல் 2008

விவசாய நெருக்கடியின் மையம்

விவசாய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் அப்பட்டமான தோல்வியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் சந்தித்துள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தற்போது நாடு சந்திக்கும் விவசாய நெருக்கடியின் மையமான அம்சமாக இருப்பது விவசாயத்தின் கட்டுப்படியாகாத தன்மையாகும். இந்த முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு தவறிவிட்டது. இடுபொருட்களின் விலை ஏற்றம், விவசாயப் பொருட்களின் விலைகள் அதுவும் குறிப்பாகப் பணப்பயிர்கள் விலையில் காணப்படும் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காரணமாக அவற்றின் விற்பனை விலை உற்பத்திச் செலவை ஈடுகட்டுவதாகக் கூட இருப்பதில்லை.

உரமானியம் வெட்டப்பட்டதனாலும் உள்நாட்டு உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும் அதிக விலை கொடுத்து யூரியாவை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இது விவசாயிகளின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு மேலாக விவசாயத் துறையில் பொது முதலீடு வெட்டப்பட்டு விட்டதால் விவசாய வளர்ச்சி குறைந்து போனதுடன் கிராமப்புற வேலையின்மையும் அதிகரித்துள்ளது. நபர் அடிப்படையிலான தானிய உற்பத்தி 1995ஆம் ஆண்டில் 192 கிலோ கிராமாக இருந்தது. 2004-07 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 174 கிலோவாகக் குறைந்துள்ளது.

அதே காலத்தில் நபர் அடிப்படையிலான பருப்பு உற்பத்தி 15 கிலோவிலிருந்து 12 கிலோவாகக் குறைந்துள்ளது. நெருக்கடியின் ஆழத்தை நாட்டில் நிகழ்ந்துள்ள விவசாயிகளின் தற்கொலையிலிருந்து புரிந்து கொள்ளலாம். தேசிய குற்றப்பதிவேடுகள் அமைப்பு அளித்துள்ள அதிர்ச்சியளிக்கும் விவரங்களின்படி 1997 முதல் 2005 வரையிலான காலத்தில் 150,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 1997ஆம் ஆண்டில் 1083 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது 2005இல் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது 3926 விவசாயிகள் அந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சமூகநீதி போராட்டத்திற்கு வெற்றி!!

உயர்கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதம் இடஒதுக்கீடு அமலாக்கத்திற்கு எதிராக போரட்டங்கள் நடைபெற்றதை அடுத்து பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றது. தற்போது உச்சநீதி மன்றம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதம் இடஒதுக்கீடு அமலாக்கம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு சமூகநீதிக்காக போராடியவர்களுக்கு வெற்றி மட்டுமல்ல, முற்போக்கு சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்நிய நேரடி முதலீடு

2006ஆம் ஆண்டில் நூறு கோடி டாலருக்கு மேல் சொத்துரிமை கொண்ட (ரூபாய் 4, 000 கோடி) இந்திய செல்வந்தர்களின் எண்ணிக்கை 25 ஆக இருந்தது. அது 2007ஆம் ஆண்டில் 48ஆக அதிகரித்தது. முதல் பத்து கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 6 லட்சத்து 12 ஆயிரத்து 55 கோடியாகும். ஃபோர்ப்ஸ் இதழில் வெளியான விவரங்களின்படி இந்தியாவின் 40 மிகப்பெரும் பணக்காரர்களின் சொத்துமதிப்பு 2006ஆம் ஆண்டு ஆகஸ்டில் 17 ஆயிரம் கோடி டாலராக (6 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்)வும், 2007ஆம் ஆண்டில் 35 ஆயிரத்து 100 கோடி டாலராக (14 லட்சத்து 4 ஆயிரம் கோடி)வும் உயர்ந்துள்ளது.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு மற்றும் பெரும் அன்னியக் கம்பெனிகளை சிறு வணிகத்தில் அனுமதிப்பது ஆகிய கொள்கையை புகுத்த ஐ.மு.கூட்டணி அரசாங்கம் முயற்சித்தது. ஒரேயரு வகை அடையாளம் கொண்ட உற்பத்திப் பொருள் விற்பனைப் பிரிவுக்கு மட்டும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இதுவரை அரசாங்கம் இம்முடிவைத் தாண்டி அடுத்த முடிவு எதையும் எடுக்கவில்லை. லட்சக்கணக்கான கடைக்காரர்கள் மற்றும் சிறுவணிகர்களின் வாழ்நிலையை மோசமாக பாதிக்கும் என்பதால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்ப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com