Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
 width=
 width=ஜூன் 2009

அணுக்குண்டும் அவரை விதைகளும்

ஒரு நாட்டின் பொருளியலில் அடிப்படையானதும் தற்சார்புத் தன்மையைத் தீர்மானிப்பதும் வேளாண்மைத் துறைதான். இந்த வேளாண்மையின் அடிக்கட்டுமானம் விதைகள். இந்த விதைகளே வல்லரசுகளின் புதிய ஆயுதம் என்றால் வியப்பாகத் தோன்றும். ஆனால் உண்மை அதுதான்...

Pamayan's book மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, அவரை போன்றவற்றைத் தந்தவை தென் அமெரிக்க நாடுகள். ஓட்சு, ரை, பார்லி, கோதுமை, மொச்சை இவற்றைத் தந்தவை தென்மேற்கு ஆசிய நாடுகள். சோளம், புன்செய் தவசங்கள் இவற்றைத் தந்தவை ஆப்பிரிக்க நாடுகள். வாழை, கரும்பு, சேனை இவற்றைத் தந்தவை தென் கிழக்கு ஆசிய நாடுகள். சோயா மொச்சையைத் தந்தது சீனா. அரிசியைத் தந்தது இந்தியா, மியான்மர் நாடுகள். இன்று இவையெல்லாம் ஏழை நாடுகளின் பட்டியலில் உள்ளன.

இனிமேல் வளரும் நாடுகளிலோ, ஏழை நாடுகளிலோ மரபினச் செல்வங்கள் இருக்காது. ஏனெனில் காடுகள் அழிந்து வருகின்றன. கடல்கள் மாசுபட்டு வருகின்றன. ஆய்வுக்கூட வசதியும் இருக்காது. எனவே எளிதாக ஏழை நாடுகளை வீழ்த்திவிடலாம்.இச்சூழலில் அணுகுண்டு ஆய்வைத் தடுத்துவிட்டால், வளரும் நாடுகளைப் படைவலு முறையிலும் வலுவிழக்கச் செய்துவிடலாம்.

எனவே, இனிமேல் நாடுபிடிக்க "அணுகுண்டு வேண்டாம், அவரை விதைகள் போதும்' என்று வல்லரசுகள் எண்ணுகின்றன. இதை வளரும் நாடுகள் புரிந்து கொண்டு தமது மரபினச் செல்வங்களைக்

காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

அணுக்குண்டும் அவரை விதைகளும்

 பக்கங்கள் : 144

 விலை : ரூ. 80

 தமிழினி

67, பீட்டர்ஸ் சாலை

ராயப்பேட்டை

சென்னை - 14

இவ்வாறு இன்னும் அதிர்ச்சியூட்டும் செய்திகளுக்கு முழு நூலையும் படிப்பது அவசியம்!

பூவுலகு

சுற்றுச்சூழலையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில்-மறைந்த தோழர் நெடுஞ்செழியனின் ஒருங்கிணைப்பில்-"பூவுலகின் நண்பர்கள்' இயக்கம் 1980களின் இறுதியில் இருந்து செயல்படத் தொடங்கியது. தொடர்ச்சியாக களப்பணியில் ஈடுபட்டு வந்த இந்த அமைப்பு, அய்ம்பதுக்கும் மேற்பட்ட சூழலியல் சார்ந்த நூல்களை தமிழில் வழங்கியுள்ளது. தமிழில் சூழலியல் சார்ந்த ஒரு விவாதம் உயிர்ப்புடன் இருப்பதற்கு, அவர்களுடைய அடிப்படைப் பணிகள் முதன்மையானவை!

இந்நிலையில் இந்த அமைப்பை ஒருங்கிணைத்து வந்த நெடுஞ்செழியன், எழுத்தாளர் அசுரன் மற்றும் சில முக்கிய உறுப்பினர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளில் இயற்கை அடைந்ததால், இயக்கத்தின் செயல்பாடுகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. முன்னோடிகளான அவர்களைப் பின்பற்றி பல்துறை சார்ந்த சூழலியல் அக்கறை கொண்டோர் மீண்டும் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த இயக்கத்தால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வெளிவந்த "பூவுலகு' இதழை மீண்டும் கொண்டு வருவது என்ற அடிப்படையில் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சூன் மாதத்தில் முதல் இதழ் வெளிவந்துள்ளது. சென்னை சூன் 13 அன்று நடைபெற்ற வெளியீட்டு விழாவில் நம்மாழ்வார் இதழை வெளியிட்டார்; தியடோர் பாஸ்கரன் இதழை அறிமுகம் செய்துபேசினார். தமிழில் சுற்றுச் சூழல்-சூழலியல் சார்ந்த சங்கதிகளை கவனப்படுத்தும் வகையில் இந்த இரு மாத இதழ் தொடர்ந்து செயல்படும்.

 ‘பூவுலகு'-இரு மாத இதழ்

 தனி இதழ் : ரூ.20

ஆண்டு கொடை : ரூ.100

 பூவுலகின் நண்பர்கள்

ஏ–2, அலங்கார் பிளாசா

425, கீழ்ப்பாக்கம் கார்டன்

பிரதான சாலை,

கீழ்ப்பாக்கம்

சென்னை-600 010


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com