Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
ஜூலை 2007

நூல் அரங்கம்

அருந்ததியர் இயக்க வரலாறு
“திராவிட இயக்கம் தலித் இயக்கத்திற்கு எதிரானது என்பதாகக் கடந்த சில ஆண்டுகளில் சில சுயநல சக்திகள் உருவாக்க முனைந்து தோற்ற பொய்மை, இளங்கோவனின் நூல் மூலம் தகர்ந்து தூளாகிறது. அருந்ததியர் இயக்கத்தின் மூத்த பெருந்தலைவர்கள் எல்.சி. குருசாமியும், எச்.எம். ஜெகநாதனும் நீதிக்கட்சித் தலைவர்களாக முகிழ்த்தவர்கள். திராவிடக் கருத்தியலால் ஊக்கம் பெற்றவர்கள். பெ.கா. இளஞ்செழியனும், பெரு. எழிலழகனும் பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள்.”

எழில். இளங்கோவன்
பக். 176 ரூ.60
கலகம் வெளியீடு
1/7, அப்பாவு தெரு
எல்லீசு சாலை
சென்னை - 2

தமிழகச் சிறைகளில் முஸ்லிம் கைதிகள்

“ஏதோ காஷ்மீர், குஜராத் போன்ற வடமாநிலச் சிறைகளில் மட்டுமே முஸ்லிம் கைதிகள் நிரம்பியுள்ளனர் எனப் பலரும் நம்பியுள்ளனர். தமிழ் நாட்டிலுங்கூட ‘தீவிரவாதிகள்' என வரையறுக்கப்பட்டு, அரசியல் காரணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்காகச் சிறையிலுள்ளோரில் முஸ்லிம்களே அதிகம். இன்றைய தேதியில் இவ்வாறு கிட்டத்தட்ட 169 முஸ்லிம் கைதிகள் உள்ளனர்.”

அ.மார்க்ஸ், ப.பா.மோகன்
பக்கங்கள் : 48 விலை ரூ.20
பயணி வெளியீடு
சென்னை - 86
பேசி : 94451 24576

மணல் கொள்ளை

“ஆறுகளில் மணல் அதிக அளவில் அள்ளப்படுவதால் ஆற்றிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் போகமுடியாது. இதனால் விவசாயம் செய்யமுடியாமல் நிலங்கள் தரிசாகின்றன. நிலமற்று கூலித் தொழிலாளர்களும் சிறு விவசாயிகளும் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். குடிதண்ணீர் தேடி அதிலேயே அதிக நேரத்தை பெண்கள் செலவிட வேண்டியிருப்பதால், இவர்களுக்குக் குறைந்த நேரமே வேலை கிடைக்கிறது. இவ்வாறு மணல் திருட்டு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாகும்.”

பழ. கோமதிநாயகம்
பக். 80 ரூ.45
தமிழ்க்குலம்
சென்னை - 4
பேசி : 044 - 24640575

அந்த வண்டிக்காரனும் காந்தியும்

“தாங்கள்தான் சேரிமக்களின்
தலைவர்களென்று / துணிந்து சொல்கிறார்கள் / அரசியல் கட்சித் தலைவர்கள்/ காந்தி இன்னும் சாகவில்லை...
வழியில் கீழ்ச்சாதியென அறிந்ததும் வண்டியை கொடை சாய்த்து /
அம்பேத்கரை கீழே தள்ளிய / அந்த வண்டிக்காரன் போல / தங்களின்
பொதுத் தொகுதி வேட்பாளர் / தலித் எனத் தெரிந்ததும் / தேர்தல் பணிகள் செய்ய மறுத்துவிடுகின்றனர் / தலித்துகளின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் / அந்த வண்டிக்காரன் இன்னும் சாகவில்லை”

தலையாரி
பக். 496 ரூ.200
தங்கத்தகடு
புதுச்சேரி 605 110
பேசி : 94435 36146

மெய்ப்பொருள் தேடி

“நமது சமூகத்தின் பெரும்பான்மை இயங்கும் விதத்தை கவனித்தோமானால் சடங்கு சம்பிரதாயங்கள் என்ற இச்சொற்கட்டுகளுக்குள் கட்டுண்டுக் கிடப்பது தெரியவரும். இப்போக்கு அறிவின் பன்முகப்பட்ட வளர்ச்சிப் பாதையை தடுத்தாட்கொள்ளும் திறன் கொண்டது. உயர்படிப்புப் படித்தவர்களானாலும் மேற்கூறிய சடங்கு சம்பிரதாயங்கள் என்ற வட்டத்திற்குள் நின்று, பல செயல்களை செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஒன்றின்மீது ஒன்று வினாக்கள் எழுப்பி விடை தேடும் சமூகம் தான் சரியானதொரு பாதையைக் கண்டடையும்.”

கவித்துவன்
பக்.112 ரூ.50
கவிபா பதிப்பகம்
சென்னை - 17
பேசி : 98416 04017


காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்

“நீதிக்கட்சி ஆட்சியை விட்டு இறங்கியபின்னால், இனி அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது. பெரியாரும் தேர்தல் அரசியலை நிராகரிப்பவராக இருக்கிறார். வீறு கொண்ட போராட்டங்களை பெரியாரின் இயக்கம் நடத்தினாலும், அது வீதியில் தான் நடக்கிறது. சட்ட சபைக்குள் அங்கீகாரமாக ஆகாது என்று வர்ணாசிரம சித்தாந்தவாதிகள் நினைத்து மகிழ்ந்தனர். அப்போது அமைதியாக அவர்களின் ஆசீர்வாதத்துடன் உள்ளே நுழைந்து, தான் நினைத்ததை சாதித்த மனிதர் ஓமந்தூரார்.”

ப. திருமாவேலன்
பக்.144 ரூ. 80
தென்திசை
சென்னை - 17
பேசி : 044 - 2433 8169


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com