Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஜனவரி 2009

தனித்துவமான தலித் பண்பாடு



Dalit_Paint ஓர் இனத்தின் சுய மரியாதை, அவர்களின் தொடர்ச்சியான தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தோடு தொடர்புடையது. தலித் பண்பாட்டு பழக்க வழக்கங்களும், அடையாளங்களும் அதிகமான தாக்குதல்களை சந்தித்து வருகின்றன. அவர்களுடைய பண்பாட்டிற்கான இடம் மேலதிகமாக நிராகரிக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினரின் நாகரிகப்படுத்தும் செயல்களும், தலித் மக்கள் மீதான ஒட்டுமொத்த அக்கறையின்மையும் - தலித் மக்களை பண்பாட்டு ஒதுக்குதலுக்கும் அடையாளச் சிக்கலுக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கின்றன. தலித் என்பது ஒரு ஜாதி அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பது குறித்த ஒரு கூட்டு விழிப்புணர்வு; சீரழிக்கப்பட்ட தலித்துகளின் விருப்பங்கள், கனவுகளுக்கு ஏற்றவாறு புரட்சிகர மாற்றங்களை அடைவதற்கானப் புரிந்துணர்வு. ஓவியங்கள் மூலம் மாற்று வாழ்வியலை மீட்டெடுப்பதற்கான பண்பாட்டியல் கூறுகளை கண்டெடுத்து, அதன் மூலம் பொதுப் பார்வையில் அதற்கொரு புதிய பொருளை உருவாக்கும் வகையில், அண்மையில் கேரளாவில் நடைபெற்ற தலித் மற்றும் பழங்குடி ஓவியர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட ஓவியங்களே இவை. இப்பயிற்சிப் பட்டறையை "விகாஸ் அத்தியாயன் கேந்திரா' (Vikas Adhyayan Kendra) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஓவியங்களை டாக்டர் அம்பேத்கர் மேற்கோள்களோடு (ஆங்கிலம்) நாட்காட்டியாகவும் வெளியிட்டுள்ளனர். கிடைக்குமிடம் : ஒயாசிஸ் புக்ஸ், 29/17, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை 600 004

பேசி : 98405 - 48257


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com