Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
ஜனவரி 2007

நூல் அரங்கம்

மனித உரிமைகள் பின்தள்ளப்படுகின்றன

விலை ரூ.60

"காவல் துறை மோதல்களில் கொல்லப்படுவோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காவல் நிலையச் சாவுகள் மற்றும் தப்ப முயற்சிக்கும் பொழுது கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது, பிடிக்க முயற்சித்த பொழுதும், கொல்லப்பட்டதாக கூறப்படுவது போன்றவை - ஏறத்தாழ தினசரி சம்பவங்களாகி விட்டன. காவல் துறை அரசியலுக்காகப் பயன்படுத்தப்படும் பொழுது, அவர்கள் புரியும் செயல்களுக்கு எவ்விதத் தண்டனையும் கிடையாது என்று அவர்களுக்கு கூறப்படும்பொழுது, தண்டனை கிடைக்கும் என்ற எவ்வித பயமுமின்றி, மக்கள் மீது அரசாங்க பயங்கரவாதம் பல்வேறு வகையில் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.''

ஆசிரியர் : நீதிநாயகம் பி.பி. சாவந்த்
பக்கங்கள் : 144
வெளியீடு : சோக்கோ அறக்கட்டளை,
ஜஸ்டிஸ் பகவதி பவன்,
143, ஏரிக்கரை சாலை,
கே.கே. நகர், மதுரை - 20
பேசி : 0452 - 2583962


மலர் அல்ஜீப்ரா
விலை ரூ.25
"நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, அதன் மீது நன்றியுரை வழங்கும் பரிசு பெற்ற பேராசிரியர் அது தன் கண்டுபிடிப்பு அல்ல என்பதையும், தான் அப்பரிசுக்கு அருகதை அற்றவன் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அது ஒரு சிறுமியின் கண்டுபிடிப்பு என்பதையும் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் நெஞ்சை உருக்கும் மனம் சிலிரவைக்கும் ஒரு கணித மேதையின் கதை.''

ஆசிரியர் : இரா. நடராசன்
பக்கங்கள் : 80
வெளியீடு : புக் பார் சில்ரன்,
421, அண்ணாசாலை,
சென்னை - 18
பேசி : 2433 2424


பாவாணரின் பொதுவுடைமைக் கோட்பாடுகள்
விலை ரூ.30

"மொழிஞாயிறு பாவாணர், ஞால முதன்மொழி தமிழ் என்பதை ஞால முதல்மகன் தமிழினத்தான் என்பதைக் கண்டு காட்டியவர். ஒரு குடும்பத்தில் சின்னஞ்சிறுசுகள் பொதுமை பேசுவதற்கும் மூத்த முதலாமவர் பொதுமை பேசுவதற்கும் வேறுபாடுண்டு. உலக இனங்களையெல்லாம் தமிழினத்தின் வழியினங்களாகக் கண்ட பாவாணர், இந்த வகையில் வரைந்த நூல்களே இந்த நூலில் அதிகம் விளக்கப்பட்டுள்ளது.''

ஆசிரியர் : பாவலர் ஆடல்
பக்கங்கள் : 72
வெளியீடு : கோமதி பதிப்பகம்,
278அ 3, தென்றல் தெரு,
கலியாண நகர்,
பெரம்பலூர் 621 212


புத்தர் எவற்றைப் போதித்தார்
விலை ரூ.30

"கடவுள் எனப்படுபவர், ஏதோ ஒன்றிலிருந்து ஏதோ ஒன்றை உண்டாக்கினார் என்றால், புதிதாகப் படைக்கப்பட்ட அந்த ஏதோ ஒன்று எதிலிருந்து உருவாக்கப்பட்டதோ, அந்த ஏதோ ஒன்று அவர் எதையும் படைப்பதற்கு முன்னர் இருந்திருக்க வேண்டும். எனவே, அது அவருக்கு முன்பே இருந்து வந்திருக்கிறது என்றால், அதைப் படைத்தவர் அவரில்லை என்றாகிறது. கடவுள் எதையும் படைப்பதற்கு முன்னர், ஏதோ ஒன்றிலிருந்து யாரோ ஒருவர் ஏதோ ஒன்றைப் படைத்திருக்கிறார் என்றால், அப்போது கடவுளைப் படைப்பாளி என்றோ சிருஷ்டியின் மூல காரணர் என்றோ கூற முடியாது.''

ஆசிரியர் : டாக்டர். அம்பேத்கர்
பக்கங்கள் : 124
வெளியீடு : ‘துடி' இயக்கம்
பேசி : 98847 - 92933


நெடுந்தீ
விலை ரூ.40

"சுய அனுபவங்களையும், ரசனைகளையும், தரிசனங்களையும் எழுத்தாக்கி கவிதைகளை உலவ விடுவது, சமூகத்தின் மனச்சூழலை மட்டுமின்றி, சுற்றுச் சூழலையும் (காகிதங்களுக்காய் மரங்கள் வெட்டப்படுவதால்) அது பாதிக்கிறது. சமூக அக்கறையின் கண்களே, தன் சக மனிதனின் அனுபவங்களை, துன்பங்களை, கண்ணீரைப் பார்க்கும் திறனுடையதாக இருக்கின்றன. நிலைக்கண்ணாடியைப் பார்க்கும் கண்கள், தங்களின் சுயத்தைத் தவிர வேறெதைப் பார்க்க முடியும்?

ஆசிரியர் : யாழன் ஆதி
வெளியீடு : கலகம்,
1, அப்பாவு தெரு,
திருவல்லிக்கேணி, சென்னை - 2
பேசி : 044 - 42664989


இடஒதுக்கீடல்ல... மறுபங்கீடு
விலை ரூ.25

"பார்ப்பனிய ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் தொகைக்கு ஏற்ப மறுபங்கீடு செய்வதற்கான தொடக்க முயற்சியே இடஒதுக்கீடு. இது விரிவடைந்து செல்ல வேண்டிய தளங்கள் அனேகம். இடம் என்பதை வெறுமனே கல்வி, வேலைவாய்ப்பு என்று சுருக்கிப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. இயற்கை வளங்கள், கல்வி நிலையங்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் நிதி நிறுவனங்களான வங்கிகள் காப்பீடுகள், பண்பாட்டுக் கூறுகளான கலை இலக்கியம் ஆகிய அனைத்தும் இடமாக வரையறுக்கப்பட்டு, அவை நீதியானதொரு முறையில் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும்.''

ஆசிரியர் : ஆதவன் தீட்சண்யா
பக்கங்கள் : 64
வெளியீடு : வாசல் பதிப்பகம்,
40, ஈ/4, முதல் தெரு,
வசந்த நகர்,
மதுரை - 625 003
பேசி : 98421 - 02133


புத்தா வெளியீட்டகத்தின் புதிய வெளியீடுகள்

விடுதலையின் சாத்தியங்கள்
(தலித் முரசு பேட்டிகள் - 1)

சமூக சமத்துவமின்மை தொடர்வது, அரசியல் ஜனநாயகத்திற்கு முரண்பாடானதாகும். இந்த முரண்பாடு விரைவில் களையப்பட வேண்டும். இந்த முரண்பாடு தொடருமானால், சமூக சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருநாள் இந்த அரசியல் ஜனநாயகத்தையே குலைத்துவிடுவார்கள்.''

- டாக்டர் அம்பேத்கர்
பக்கங்கள் : 240
விலை ரூ. 100


வரலாற்றை நேர்செய்வோம்
(தலித் முரசு பேட்டிகள் - 2)

சாதி ரீதியாக மட்டுமே சண்டையிடுவது, ஆதிக்கப் பார்ப்பனியத்திடமிருந்து எதையும் பெற்றுத் தராது. அதேபோல, இடதுசாரி இயக்கங்கள் அம்பேத்கர் இன்றி, சாதியத்தின் மீதான பார்வையின்றி முன்னோக்கிச் செல்ல முடியாது. பரந்துபட்ட தளத்தில், மாபெரும் பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்க வேண்டும்.

- புரட்சிப் பாடகர் கத்தார்

பக்கங்கள் : 232
விலை ரூ. 100


ஓயாத குரல்கள்
(தலித் முரசு பேட்டிகள் - 3)

...உண்மையில் நாடு முழுவதும் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் பல்வேறு வகைப்பட்டவையாக இருந்தபோதிலும், அவை யாவும் ஒரே இலக்கை நோக்கியே செயல்பட்டன. அந்த இலக்கு, சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதே. இத்தகைய போராட்டங்களை முன்னின்று நடத்தி, அவற்றின் உட்பொருளை விளக்கியோரின் வரிசை மிக நீண்டது. ஜோதிபா புலே, அயோத்தி தாசர், பெரியார், அம்பேத்கர்...

- ஞான அலாய்சியஸ்

பக்கங்கள் : 240
விலை ரூ. 100


தலித் இலக்கியம் : விடுதலையின் திசைகள்

... தலித் இலக்கியம் ஒரு தலித்திடம் சுயமரியாதை உணர்வைச் சுடர்விட்டு எரியச் செய்ய வேண்டும். சுயமரியாதை என்பதையே தனது முதல் செய்தியாகவும் அது கொண்டிருக்க வேண்டும். அத்துடன், தலித் இலக்கியம் அதை வாசிக்கும் சாதி இந்துக்களிடமும் தலித் உணர்வைத் தூண்ட வேண்டும்.

பக்கங்கள் : 216
விலை ரூ. 100


ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

"ஏகாதிபத்தியம் ஒழிக'' என்ற விண்ணை முட்டும் முழக்கம், இயல்பாகவே பார்ப்பனியத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. இதன் மூலம் ஏகாதிபத்தியம், இந்தியாவில் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடிகிறது. பார்ப்பனியம் என்ற அடித்தளத்தின் மீதுதான் ஏகாதிபத்தியம் என்ற அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. எனவே, பார்ப்பனியத்தை வலுவிழக்கச் செய்துவிட்டால் அதன் மீது கட்டப்பட்டுள்ள ஏகாதிபத்தியத்தை அழித்தொழிப்பது, மிகவும் எளிதானதாகிவிடும்.

- டாக்டர் அம்பேத்கர்

பக்கங்கள் : 272
விலை ரூ. 135


பகவான் புத்தர்

பக்கங்கள் : 320
விலை ரூ. 150

புத்தா வெளியீட்டகம்
3, மாரியம்மன் கோயில் வீதி,
உப்பிலிப்பாளையம்,
கோவை - 15


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com