Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=பிப்ரவரி 2009

பெரியார் பேசுகிறார்

இஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I


Periyar தோழர்களே! எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.

இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.

இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.

இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது. இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.

இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது. ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.

இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள். அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.

சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள். சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!

எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

– தொடரும்

('இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
பார்த்திபராசன்
2009-06-05 02:46:00
paarthipan7@otmail.com

மதம் பிடித்த மனிதர்களே முதற்கண் எனது வணக்கங்கள்,
உங்கள் இந்த விமர்சனத்தில் மிகப் பெரும் தவறு இருக்கின்றது. ஒன்பது வேதங்களையும் கற்று அறிய முயன்றவன் என்றரீதியில் எனக்கு புரிந்த சில விடயங்களைக் கூறலாம் என நினைக்கின்றேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்.
1) கிறிஷ்தவர்களுக்கும் முஷ்லிம்களுக்கும் மதம் என்பது மதம் பிடித்தமைக்கு ஒப்பானதாகும். இந்துக்களில் வைஷ்னவர் களுக்கும் அந்த மதம் உண்டு. இந்துவம் என்பது சைவர்களையும், வைஷ்னவர்களையும் அடிப்படையாகக் கொண்டது. ஆனாலும் சகல மதங்களின் பிறப்பிடமும் அதுவேதான். பைபிளும், குர்ரான்னும் பல இடங்களில் இந்து வழிபாட்டு முறைகளை கைவிட்டுத் தங்களிடம் வரும்படி வருந்தி அழைத்திருக்கின்றன. இந்துக்கள் என்றும் எந்தக் காலகட்டத்திலும் அப்படியான ஈனத்தனத்தில் ஈடுபடவில்லை. இது முதல் சான்று.

2) இந்துவம் என்பது அன்iபின் அடித்தளம். இங்கே யாதிக்கோ, பாகுபாடுகளுக்கோ இடமில்லை. ஆளுமையுடையவாகள் தங்களின் சுயநலத்திற்காக ஏற்படுத்தப்பட்ட வகுப்பு வாதத்திற்கு மதம் என்றும் காரணம் அகாது. தற்கால நடைமுறையில் தமிழர்களுக்குப் புரியக்கூடிய முறையில் இலகுவாகச்சொல்வதாயின் @தமிழர்கள் என்றால் புலிகள் புலிகள் என்றால்த் தமிழர்@ என்றபதம் சர்வாதிக்க வெறிபிடித்த புலிப்பாசிசத்தால் உருவாக்கப் பட்ட ஒரு மாயை. இதற்கு தமிழர்கள் என்றால் புலிகள் என்று கூறிவிட முடியுமா?? அது போன்றது தான் இந்து மதமும் சரி பிறமதங்களும் சரி.

மதங்கள் எல்லாமே நல்லதைத்தான் செய்ய முனைந்தன. மக்கள் மதம் பிடித்து துண்டு துண்டாக பல மதங்களாக உடைந்து நின்று நான் பெரிது நீ பெரிது என மத யுத்தம் செய்வதற்கு மதம் எந்த வகையிலும் காரணம் அல்ல. அதற்கு மனிதர்களின் மனமே காரணம். மூலம் ஒன்று, படைப்பாளி ஒருவன் அல்ல, அத்தனையும் மூலத்தின் அணுக்களே, அத்தனை அணுக்களும் ஒன்றாக இயங்கினல்த்தான் மூலத்தின் முளுமையை உணரலாம், அனுபவிக்கலாம்.

மதம் பிடித்து மந்திகளானால் மனிதம் தோன்றும்வரை மூலவன் காத்திருப்பான். புகையடித்துக் கனியவைக்க அவன் ஒன்றும் வியாபாரி அல்லவே.!!!

Subavee Thaasan
2009-06-13 10:11:00
subaveethaasan@gmail.com

(இந்து)மதம் மட்டும் பிடித்த பார்த்திபராசனுக்கு எங்களின் முதற்கண் வணக்கம்.

[பைபிளும், குர்ரான்னும் பல இடங்களில் இந்து வழிபாட்டு முறைகளை கைவிட்டுத் தங்களிடம் வரும்படி வருந்தி அழைத்திருக்கின்றன.]அடைப்புக்குறியில் நீங்கள் குறிப்பிட்டதை ஆதாரத்துடன் விளக்கினால் நல்லது.
[இந்துக்கள் என்றும் எந்தக் காலகட்டத்திலும் அப்படியான ஈனத்தனத்தில் ஈடுபடவில்லை. இது முதல் சான்று.
]-மதத்திற்குள்ளேயே பல பிரிவுகளாக உள்ள அவர்கள்,பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சாஸ்திர சம்பிரதாயமாக கொண்ட அவர்கள் எந்த தகுதியை வைத்து மற்றவர்களை தங்கள் மதத்திற்கு அழைக்க முடியும்?ஆரிய,பார்ப்பன மதத்தில் அடிமைகளாய் நாங்கள் இருப்பதை விட மற்ற மதங்களில் திராவிடர்களாய்,தமிழர்களாய்,மனிதர்களாகவே வாழ விரும்புகிறோம்,தன்மானமுள்ள,பகுத்தறிவுள்ள அந்த ஈனச் செயலை அம்பேத்கார் வழி தொட்டு நாங்களும் என் மக்களுக்கு செய்யவே விழைகிறோம்.ஆனால் தந்தை பெரியார் கூறியது போல மதம் மாறுவதை விட தம் மதத்தில் இருந்து கொண்டே அதில் உள்ள குறைபாடுகளை களைவதிலேயே எங்களுக்கு அதிக உடன்பாடு இருக்கிறது.என்ன செய்வது...சாதிக்கு மூலமாக இந்து மதம் இருப்பதாலும்,மூட நம்பிக்கைகள்,ஆபாச புளுகு மூட்டைகள் மற்ற மதங்களைவிட இந்து மதத்தில் மிகவும் அதிகமாக இருப்பதால் தான் அதை சாடுவதில்,சரி பண்ணுவதில் எங்களிடம் அக்கறை அதிகமாகவே இருக்கிறது.

மனுதர்ம,வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளின் பிறப்பிடம் இந்து மதம்,சாதி,மூட நம்பிக்கைகளின் மூலம் இந்து மதம்.இவை அனைத்தும் கடவுளால் உருவாக்கப்படவில்லை,மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் 100 க்கு 80 சதவீதம் மேல் சாதி ஏற்றத்தாழ்வுகளையும்,ஆபாச புளுகு மூட்டைகளையும்,மூட நம்பிக்கை முட்டாள்தனத்தையும் கொண்டிருக்கும் மனுதர்மம்,இராமாயணம்,மகாபாரதம் மற்றும் அதன் உட்பிரிவான பகவத்கீதையின் அது சம்பந்தமான பக்கங்களை கிழித்து விட,எறித்துவிட உங்களுக்கு சம்மதமா?(ஆதாரப்பூர்வமாகவும் விளக்க நான் தயார்)

RAMGOBAL
2009-09-08 01:48:00
RAMGOBAL2002@YAHOO.COM

மிகவும் நன்று. ஜாதி ஒழித்தால் தான் ஒற்றுமை பிறக்கும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP