Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
Dalithmurasu
பிப்ரவரி 2007

நூல் அரங்கம்

மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை
விலை ரூ.55

Shajahan ‘மயிலம்மா ஓர் ஆதிவாசிப் பெண்மணி. கைம்பெண்ணான நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிவாதமாகக் காணவே விரும்பியவர். பொதுப்பிரச்சனைக்காக முன்னணியில் நின்று போராடக்கூடுமென்று அவர் எதிர்பார்த்ததுமல்ல. ஆனால், காலமும் சூழலும் அவரை பிளாச்சிமடைப் போராட்டத்தின் நாயகியாக்கி இருக்கிறது. ஏறத்தாழ அய்ந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த ‘கோக்கோகோலா' எதிர்ப்புப் போராட்டத்தில் அயராமல் ஈடுபட்டவர். ஓர் ஆதிவாசிப் பெண்மணி, உலகம் உற்றுப்பார்க்கும் போராட்ட நாயகியானதன் பின்னணிக் கதை இந்த நூல்”

ஆசிரியர்: ஜோதிபாய் பரியாடத்து
பக்கங்கள்: 96
வெளியீடு: எதிர் வெளியீடு, 305, காவல் நிலையம் சாலை, பொள்ளாச்சி - 1
பேசி: 04259 – 226012


பெரியார்: ஆகஸ்ட் 15
விலை ரூ.350

‘இந்திய தேச உருவாக்கத்தை, அதற்கு அஸ்திவாரமாக இருந்த அரசமைப்பு அவையை - தொடக்கம் முதல் இறுதிவரை விமர்சித்து வந்த ஒரே ஒரு சிந்தனையாளரும் சமூகப் புரட்சியாளருமான பெரியாரின் மரபு, இன்று நமக்குத் தேவைப்படுகிறது. தலித்துகளை முதன்மையான கூறாகக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற்று, ‘வர்ணாசிரமக் கொடுமையும், ஏழை - பணக்காரன், ஆண்பெண் வித்தியாசங்களும் இல்லாத” ‘சமதர்ம பூமியை', உடனடியாகச் சாத்தியமான ஒரு ‘விஸ்தீரணத்தில்' கட்டுவதற்குதான் பெரியார் மரபு தேவைப்படுகிறது.”

ஆசிரியர்: எஸ்.வி. ராஜதுரை
பக்கங்கள்: 700
வெளியீடு: விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு), கோயம்புத்தூர் - 15
பேசி: 0422 - 2576772


சரியும் மரத்திலிருந்து வெளியேறும் குருவிகள்
விலை ரூ.60

‘... அப்பொழுதின் மகத்துவமும் தினத்துவமும் விவசாயிகளுக்கு, பல் துலக்குபவருக்கு, தூங்குபவருக்கு என மனித குலம் முழுமைக்குமானது என்பதை, தனது கவிதையிடமிருந்து கவிஞன் கற்றுக் கொள்ளத் தடையாக அமைவது - கவி உலகு குறித்த பெருமை, அதிகாரம், வியாபாரம் என்பதை நாம் அறிய முற்படாத வரையில் - கவிதை என தங்கள் பாசாங்குகளை, தங்கள் படைப்புச் சுதந்திரம் என்று பேசித் திரியும் நபர்களை, நாம் கவிஞர்கள் எனப் போற்றித் திரியும் காலம் நீடிக்கும்.”

ஆசிரியர்: ஓவியர் சந்ரு
பக்கங்கள்: 167
வெளியீடு: வம்சி புக்ஸ், எண்.19, டி.எம். சாரோன், திருவண்ணாமலை 1
பேசி: 94432 22997


ஈழம்
விலை ரூ.25

‘தமிழ் நாட்டில் ஊடகங்களும், எழுத்தாளர்களும் விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்பட்டவர்களாக பெரும்பாலும் இருப்பதால், தமிழீழப் பிரச்சினை மிகவும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பார்ப்பன ஊடகங்கள் இந்தப் பிரச்சனையை எந்த அளவுக்கு திரித்துக் கூற வேண்டுமோ, அந்த அளவுக்கு திரித்தும், மறைத்தும் கூறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் சோலை அவர்கள் நடுநிலையுடன் நின்று ஈழத் தமிழர் பிரச்சனையை முழுமையாக உள்வாங்கி, அதனுடைய முழுப் பரிமாணத்தையும் தமிழக மக்கள் நடுவில் கொண்டு சென்றிருக்கிறார்.”

ஆசிரியர்: சோலை
பக்கங்கள்: 96
தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, சென்னை - 14
பேசி: 65484699


எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?
விலை ரூ.30

‘வெற்றியாளர்களின் சாதனைகளையே கேட்டுப் பழகிய இந்த சமூகத்தில், தோற்றவர்களின் கதைகளுக்கு இடமில்லை. ரத்தம் சொட்டச் சொட்ட கட்டைவிரல் வெட்டப்பட்ட ஏகலைவர்கள், வரலாறு நெடுகிலும் எத்தனை எத்தனையோ. வெற்றியாளர்களின் ஆர்ப்பாட்டமான கதைகளில் நாடகத்தனமும், பாசாங்கும் மிகுதி. தோற்றவர்களின் கதைகளோ சாம்பல் மூடிய நெருப்பு. தொட்டால் பொசுக்கிவிடும். இந்த நூல் தோற்றவர்களின் சரிதைகளைப் பேசுகிறது.”

தமிழில்: ஜே. ஷாஜகான்
பக்கங்கள்: 64
வெளியீடு: வாசல் பதிப்பகம், 40, ஈ/4, முதல் தெரு, வசந்த நகர், மதுரை - 625 003
பேசி: 98421 02133


உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
விலை ரூ.50

‘இன்றைய நாட்டு நடப்புகளிலும் சமூக நிலைமைகளிலும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் திருப்தி உண்டாகிவிட்டதெனில், பிரச்சனைகளைக் கண்டு வெகுண்டெழப் போவது யார்? மாணவப் போர்க்குணம் மடிந்து விடுகிற சூழலில், யார்தான் போராடுவதற்கு முன் வருவார்கள்? தன் மீது இழைக்கப்படும் அநீதியையும் தவறுகளையும் குறித்து சிந்திக்கவும் துணிவு இல்லாத, சிந்தனை அடிமைகளைக் கொண்ட சமூகத்தைத்தான் உலகமயமாக்கல் உருவாக்குகின்றது!”

தமிழில்: டி. அஜீஸ் லுத்புல்லா
பக்கங்கள்: 168
வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை - 12


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com