Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Dalithmurasu
ஆகஸ்ட் 2005
நூல் அறிமுகம்


எதிர்ப்பும் எழுத்தும்
விலை ரூ.350


"சகோதர சகோதரிகளே, தோழர்களே! முதலாளித்துவத்திற்கும் புதிய தாராளவாதத்திற்கும் எதிராக,மனிதகுல எதிர்காலத்திற்கு ஆதரவாக, உலகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களுடன் எங்களை நாங்கள் இணைத்துக் கொள்வோம். இந்த நிலத்தையும் இந்த வானத்தையும் எங்களைப் போலவே நேசிப்பவர்களை நாங்கள் தேடிக் கண்டறிவோம். நம் அனைவருக்கும் மக்களாட்சியும் விடுதலையும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இடதுசாரிகளின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும், புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்காகவும் ஒரு புதிய அரசியலை முன்வைத்து நாங்கள் போராடுகிறோம்.'''

ஆசிரியர் : துணைத்தளபதி மார்க்கோஸ்
வெளியீடு : விடியல், 11, பெரியார் நிகர், மசக்காளிபாளையம் (வடக்கு),
கோயம்புத்தூர் 641 015
பக்கங்கள் : 900




தலித் பெண்ணியம்
விலை ரூ.90

“இந்தியச் சூழலில் சாதியம், பெண்ணடிமை முறையும் ஒன்றுக் கொன்று இணைந்து பிரிவினையை வலுப்படுத்தியுள்ளன. சாதி, பெண் பற்றிய கருத்தாக்கங்களும், மதரீதியான விளக்கங்களும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளன. குடும்பம் என்ற சிறு அலகிலிருந்து, அரசு போன்ற பெரிய நிறுவனங்கள் வழியாகக் கருத்தாக்கங்கள், அதிகாரமாகவும், சட்டங்களாகவும் நடைறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள பெண் அமைப்புகளின் வரதட்சணை ஒழிப்புப் போராட்டங்கள் என்பவை, கொசு மருந்து தெளிப்புதான்.''

தொகுப்பு : அன்புக்கரசி, மோகன் லார்பீர்
வெளியீடு : தலித் ஆதார மய்யம், 32, பாரதிதாசன் சாலை,
அரசரடி, மதுரை 625 016
பக்கங்கள் : 284







புத்தம் சரணம்
விலை ரூ.50

“சாதி ஒழிப்புப் போராளிகளாலும், இடதுசாரி சிந்தனையாளர்களாலும் முன்னிறுத்தப்பட்ட புத்தர் மற்றும் புத்த தம்மத்தின் அரசியல் முக்கியத்துவம், இங்கே அறிகமான அளவிற்கு அது ஒரு வாழ்நெறியாக இங்கே அறிமுகமாகவில்லை. பவுத்தம் வெறும் வேத மறுப்பு மதம் மட்டுமன்று; மிகவும் நடைமுறை சார்ந்த மக்கள் மதம் அது. பார்ப்பனியத்திலிருந்தும் இந்துத்துவத்திலிருந்தும் போதிசத்துவம் பல்வேறு புள்ளிகளில் வேறுபட்டு நிற்கிறது. அந்த அம்சங்களை நான் புரிது கொண்ட அளவிற்கு, இந்த நூலுக்குள் கொண்டு வந்துள்ளேன். புத்த மதத்தைக் கடவுள் மறுப்பு மதம் என்று சொல்வதைக் காட்டிலும் கடவுள், பக்தி முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு நெறி எனச் சொல்வதே பொருத்தம்.''

ஆசிரியர் : அ. மார்க்ஸ்
வெளியீடு : கறுப்புப் பிரதிகள், 45 அ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை 5
பக்கங்கள் : 108


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.











நேரில் கண்ட ருஷ்யப் புரட்சி
விலை ரூ.140

“நாங்கள் விரும்புவது, எங்களுடைய விடுதலை மட்டும் அல்ல. உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளிகளின் விடுதலை. அவர்களும் விடுதலை அடையாவிட்டால், சுரங்கங்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகவும், அவற்றை நாங்களே நடத்தவும் உள்ள சுதந்திரத்தை, எங்களால் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ள முடியாது. உலக ஏகாதிபத்தியவாதிகளின் பேராசை பிடித்த கைகள், கடல்களுக்கு அப்பாலிருந்து ஏற்கனவே நம்மை நோக்கி நீட்டப்படுகின்றன. உலகத் தொழிலாளர்களின் கரங்கள்தாம் அந்தப் பிடிகளை, நமது குரல்வளைகளிலிருந்து இழுத்து அகற்ற முடியும்."

ஆசிரியர் : ஆ. ரைஸ்வில்லியம்ஸ்
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம், 25,
தெற்கு சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம், சென்னை 24
பக்கங்கள் : 136


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.









ரானடே காந்தி ஜின்னா
விலை ரூ.15

"பார்ப்பனன் செய்த புரோகிதத் தொழில் எல்லாவித மேன்மையையும் இழந்திருந்தது. அவன் ஒரு தின்ற ழிக்கும் பிராணியாக இருந்தான். பதுங்கிப் பாய்ந்து உயிர்களை வேட்டையாடும் விலங்கு போன்று சமூகத்தின் மீது பாய்ந்தான். அவன் டன் கணக்கில் உற்பத்தி செய்த புராணங்களும், சாஸ்திரங்களும் அவனது மோசடித் திட்டங்களுக்கு வற்றாத சுரங்கமாகக் கைகொடுத்தன. கபடமற்ற ஏழை மக்களை, கல்வியறிவற்றவர்களை, மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்திருந்த இந்துக்களை முட்டாள்களாக்குவதற்கும், வஞ்சிப்பதற்கும், கொள்ளையடிப்பதற்கும் சாஸ்திரங்களையும் புராணங்களையும் பயன்படுத்தினான்.''

ஆசிரியர் : : டாக்டர் அம்பேத்கர்
வெளியீடு : புத்தா வெளியீட்டகம், 3, மாரியம்மன் கோயில் வீதி,
உப்பிலிபாளையம், கோயம்புத்தூர் 641 015
பக்கங்கள் : 56


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.








நமக்கான குடும்பம்
விலை ரூ.5

“கேள்விகள் கேட்காமல் குடும்ப மனிதர்களாக மாறிவிடும்படி, நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஆணும் பெண்ணும் இப்படிப் "பயின்றதை' கழற்றி எறிவதுதான் இன்றைய முதல் தேவை. தயாரிக்கப்பட்ட மூளைகளுடன் உருவாகியுள்ள நாம், அறிவியல் பூர்வமாக கேள்விகள் கேட்கத் தொடங்க வேண்டும். ஏன் ஆண்களால் "பார்க்கப்படுகிற' ஒரு கவர்ச்சிப் பொருளாக பெண் இருக்கிறாள்? அதே பெண் திருமணம் என்று வரும்போது, வரதட்சணையோடு வந்தால் மட்டுமே அதே ஆணால் விரும்பப்படுபவளாக மாறுவது எதனால்? பத்தினித் தெய்வமாகப் பெண் இருக்க வேண்டும். ஆனால், ஆண் கொஞ்சம் அப்படி இப்பிடி இருந்துவிட்டால்கூட பரவாயில்லை என்கிற சமூக ஒப்புதலை எப்படி உடைப்பது? ''

ஆசிரியர் : ச. தமிழ்ச் செல்வன்
பாரதி புத்தகாலயம், 2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை,
சைதாப்பேட்டை, சென்னை 15
பக்கங்கள் : 16


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com