Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஏப்ரல் 2009

பெரியார் பேசுகிறார்

‘தமிழ்த்தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்?


Periyar இவ்வுயர் நிலைப் பள்ளியின் இலக்கிய மன்றவிழாவில் நான் பங்கேற்றுக் கொள்ள வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் நான் யார், எனது கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் பொதுத் தொண்டு செய்கிறவன். நாட்டில் பலர் பொதுத் தொண்டு செய்கிறார்கள் என்றாலும், நான் மேற்கொண்டிருக்கிற தொண்டு மனிதத் தொண்டு – மக்கள் தொண்டாகும். நம் நாட்டைப் பொருத்தவரை, மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகிறேன். மனிதன் மனிதனாக இல்லை.

பகுத்தறிவுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் பறையன், ஒருவன் கவுண்டன், ஒருவன் செட்டி, ஒருவன் தென்னை மரம் உயரமுள்ள உயர்ந்த சாதி, இன்னொருவன் சாக்கடையைப் போல மிகக் கீழான இழிசாதிக்காரன் என்கின்ற பேதங்கள் இருக்கின்றன என்பதோடு, இந்த நாட்டில் பெண்கள் அடிமைகளாக, சமுதாயத்திற்குப் பயன்படாதவர்களாக இருக்கிறார்கள். பெண்கள், ஆண்களுக்கு அடிமையாகி ஆண்கள் வசதிப்படி குழந்தைப் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்களே ஒழிய, சம உரிமை உடையவர்களாக இல்லை.

இவர்கள் இந்த இழிவில் இருந்து தலை தூக்கா வண்ணம் கடவுள் என்ற பாறாங்கல்லும், அதன் மேல் மதம் என்ற பாழுங்கல்லும், அதன் மேல் சாஸ்திரங் கள் என்னும் கருங்கல்லையும் போட்டு அழுத்தி வைத்து இருக்கின்றார்கள். இவற்றிலிருந்து மனித சமுதாயம் தலைதூக்க வேண்டும் என்று எவனும் பாடுபட முன்வரவில்லை. எனக்கு மட்டும் இத்துணிவு எப்படி வந்தது என்றால் – கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர், மொழி, இலக்கியம், நாடு என்கின்ற எந்தப் பற்றும் எனக்கு இல்லை.

இலக்கியம் என்றால் அறிவு என்று தான் பொருள். ஆனால், நம் இலக்கியங்கள் அதற்கு மாறானதாகும். இங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கடவுள் வாழ்த்து என்று ஒன்றும், தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்றும் பாடினார்கள். கடவுள் இங்கு எதற்கு? கடவுள் உங்களை வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அல்லது கடவுளை நீங்கள் வாழ்த்தி வாழ வைக்கின்றீர்களா என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் வாழ்த்து எதற்கு? அதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏதோ சம்பிரதாயம், வழக்கம், மூடநம்பிக்கை என்பதைத் தவிர, வேறு அதனால் எந்தப் பலன் ஏற்படும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் "அ' வருமா என்று கேட்கிறேன்.

திராவிட இயக்கம் தோன்றுகிறவரை, தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100க்கு 5 பேர்தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது? அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால், உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ, அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்தரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன?

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்றுகூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை – முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்வர்கள் நாம்தான் ஆவோம்.

முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே, அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது, அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பதுதான்.

நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்தக் காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையவை அல்ல. இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.

27.8.1971ம் தேதி மணப்பாறையில் ஆற்றிய உரை


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
paruthi
2009-06-10 04:48:00
toparuthi@hotmail.com

What periyar did for tamilan. Just think, we can say , he did this and he did that like that. But just understand after 50 years over what kind of people periyar produced. Is it earliar people are not intelligent. No Periyar did everything very half way only. He is not did scientic way. He did half boil way. Otherwise how 2 lakhs people killed in srilanka still tamil nadu people able accept the fact and kept quiet. Is it possible is kerala or karanataka or andhra. No. Am i correct. Is it periyar went there and gave instruction to those. No. Only periyar did everything did half in tamil nadu so that tamil people become SELFFISH AND ready to accept any kind of UN JUSTICE. This is the way how periyar and his thoughts effecting tamil people. Don't try to show periyar is did all for tamil people. Actually he known or unknowable did lot draw back to TAMIL people.

Subavee Thaasan
2009-06-10 10:27:00
subaveethaasan@gmail.com

அய்யா பருத்தியாரே,
பெரியார் அப்படி என்ன செய்திருக்கவில்லை எம் மக்களுக்கு என் நாட்டிற்கு?அது உங்களுக்கு புரியாது தான் ஏனென்றால் உங்களுக்கு திராவிடர்களும் தெரியாது திராவிடமும் தெரியாது.
இந்த கீற்றுப் பகுதியில் எத்தனை பகுத்தறிவு,சாதி மறுப்பு,மூட நம்பிக்கை எதிர்ப்பு மற்றும் பெண் விடுதலை பற்றிய கருத்துக்கள் பேசப்படுகின்றன,இதுவே பெரியாரின் வெற்றி,உங்களின் கருத்திற்கான எனது எதிர்வாதமும் அய்யாவின் வெற்றி தான் அன்பரே...பார்ப்பானுக்கு ஒரு நீதி மற்ற சாதியினர்க்கு மனு நீதி என்பதையும்,கற்றலும் கற்பித்தலும் பார்ப்பானுக்கு மட்டுமே உரியது என்பதை தகர்த்து சமதர்ம கோட்பாட்டை கட்டி எழுப்பியதன் மூலமே தந்தை பெரியார் என்பதை யாராலும் திரிக்க முடியாது.
நேரு முதல் முறையாக இட ஒதுக்கீட்டை நிறைவேற்றிப் பேசுகையில் இந்த சட்ட வடிவிற்கு மூலமாக இருந்தவை தென் நாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பல போராட்டங்களும் அதற்கான நியாயமான காரணங்களும் தான் என்று கூறியதை உங்களால் மறுக்க மறைக்க முடியுமா?
அந்த வைக்கம் வீரரைப் பற்றிப் பேச உங்களுக்கு தகுதி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
மேலும் தேவையில்லாமல் ஈழ விடயத்தை இதில் சேர்த்து குத்தி விடும் வேலையை பார்க்க வேண்டாம்
எம் மக்களுக்கு அய்யாவின் பணிகள் மேலும் தேவைப்படுகின்றன,அதை எங்களைப் போன்றோர் புரியும் போது இடர்படும் எதிரிகளையும் சரி உங்களைப் போன்ற துரோகிகளையும் சரி களைய வேண்டியது காலத்தின் கட்டாயமே.....

ssk
2009-06-11 01:49:00
ssktpj@gmail.com

பெரியார் என்ன செய்யவில்லை.... இன்னும் இந்த ஒன்றுக்கும் உதவாத கடவுள் தத்துவத்தை பிடித்து கொண்டு மக்கள் மேலும் தம் வாழ்வை யார் கைகளிலோ கொடுத்து விட்டு வாழ்கின்றனர். பார்ப்பான் மட்டும் படித்து மற்றவரை எய்த்து பிழைக்க வேண்டும் மற்றவரெல்லாம் அடிமை வாழ்வு வாழ வேண்டுமா ? பெரியாரை குறை சொல்பவனுக்கு மனித நேயம் தெரியாது. இது உண்மை.

paruthi
2009-06-12 03:37:00
paruthi@hotmail.com

Vannakkam, I read the persons replay on response to this article. Good. But i don't like normally aruguments. But three kind of people in tamil nadu spoiling. 1) Over believe of GOD 2) Over believe of Periyar 3) Over believe of Communism. One No one responded what kind of people produced by periyar.
I don't understand why people not stand on there own leg and analyse. Why are always wearing others spec to solve your problem. I am not enemy of Periyar or communism. Understand first. Take the good things what they did. That's it. Don't say all the answers they are have.
Please answer my questions below
1)How come Tamil nadu peoble become SO much self fish( i think u can understand what i am asking, if u touch any andhra or karnataka or north guy, u will get response imm. But what about Tamil people killed in eelam and tamil nadu fisher mans killed by srilanka army). Do u think only giving statments and showing rolly and finally concentrate on shawing amount or getting Good polities posstion. As per my understanding everyone need to support their leaders, don't want over come and see it anything.
2) What is the output after 100 years periyar work. Don't say eduction. Is it no education in karnataka or andhra or..... This answers looks like tamil nadu people won't get railways track if English people won't role it.
Just look what type of leader he produced. you are not feeling vomit.
3)Who ever only support Communism, just look what Communism nations did for eelam in resent days.
I understand Bramin trated as slave. But expect talking, what u did in practically. You are making them so crucial enemy but not given people to product anything.

Finally i want to say, don't always wear others spec and give solution to society. Accept the mistake from leaders. No one 100% perfect. Particularly come to society, through the leader if they doing wrong think physically or conceptually. Otherwise Not only ellam, our Tamil nadu also always produce corrupted leaders only. No other go. Leaders are produced by society, society are run by what the concepts they captured by mostly.


Milton
2009-06-13 12:05:00
amvinoth143@gmail.com

ஒன்று மட்டும் தெரிகிறது, நீங்கள் இதில் நான்காவது வகை. நாசூக்காக பெரியாரிசத்தயும்,கம்யூனிசத்தயும் சாடுபவர்,மறைமுகமாக பார்ப்பனீயத்திற்கு தூபம் போடுபவர்.சரி அதை விடுங்கள்.
மக்கள் அவர்களின் சுய சிந்தனையில் பகுத்தறிந்து செயல் பட வேண்டும் என்பதே பெரியாரியலின் முதல் நோக்கம்.
பெரியாரியலிலும் சரி,கம்யூனிசத்திலும் சரி ஒரு குறைபாட்டை நீங்கள் சுட்டிக் காட்டினால் நல்லது.
[பெரியாரிச்டுகள் மற்றும் கம்யூனிச்டுகள் அந்த கொள்கைகளில் இன்றளவும் இருக்கிறார்கள் என்று நான் கூறவில்லை].
பெரியாரின் உழைப்பு நம் மக்களை சுய நலவாதிகளாக்கி விட்டது என்ற உங்களின் கூற்றில் சுத்தமாக உண்மையில்லை.ஓட்டு அரசியலில் உடன்படாத தந்தை பெரியாரிடமிருந்து விலகி தான் அண்ணா அவர்களும் அதன் பிறகு கலைழ்னரும் ஆட்சியில் அமர்ந்த வரலாறும் உங்களுக்கு தெரியும்.
பெரியாரியலை முழுமையாக அவர்களால் ஓட்டு அரசியலில் நடைமுறைபடுத்த முடியாது(அனைத்து சாதி அர்ச்சகர் மற்றும் தமிழ் கீர்த்தனைகளை கோயில்களில் பாடுவது என்பது போன்ற சிலவற்றை தவிர...)அப்படி அவர்கள் நடைமுறைப் படுத்தினால் அவர்களால் ஓட்டு அரசியலில் நிலைக்கவும் முடியாது.
பெரியாரியலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பதற்காக கலழ்னரையும்,வீரமணியையும் எந்தவித விமர்சனங்களுக்கும் இடம் கொடுக்காமல் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்கிறோம் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் தவறு.மேலும் ஈழ விடயத்தில் கலைழ்னர் மீது உங்களை விட எங்களுக்கு அதிகமாகவே விமர்சனம் இருக்கவே செய்கிறது.சுய நல அரசியல் வாதிகளின் செயல்கள்(கலைழ்னர் மட்டுமல்ல செயலலிதா உட்பட!?)மக்களை சுய நலமாக்கும் பட்சத்தில் பெரியாரியலையும்,கம்யூனிசத்தயும் மீண்டும் மக்களுக்கு நினைவூட்டுவது பரப்புவது நமது கடமை அதை விடுத்து கண்மூடித்தனமாக அதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் எதிர்ப்பது முட்டாள்தனமே!?
அய்யா அவர்களே இட ஒதுக்கீடு என்பது எல்லா மா நிலத்திற்கும் பொதுவாக அமைந்தது அதற்கு மூல காரணமாக இருந்தது அம்பேத்காரும்,தந்தை பெரியாரும் தான் என்பதை நீங்கள் மறைக்க முடியாது.உயர் சாதிய்னர்க்கு இணையாக எல்லா சாதியனரும் வர முடிந்ததற்கு காரணமே அந்த இட ஒதுக்கீடு தான் என்பதை நீங்கள் உணர்ந்தால் சரி.
நாங்கள் மறுபடியும் ஒரு முறை சொல்லிக்கொள்கிறோம் பார்ப்பனர்களுக்கு அல்ல பார்ப்பனீயத்திற்கு மட்டுமெ நாங்கள் எதிரிகள்.
இந்த கட்டுரைப்படி பார்க்கும் பொழுது பெரியாரிசம் மற்றும் கம்யூனிசத்தில் உங்களுக்கு சரிபட்டு வராத கருத்துக்கள் எவை எவை என்று தெளிவு படுத்தினால் நல்லது.....

sekar
2009-06-13 10:38:00
sek_mca@gmail.com

பெரியார் இங்கு உள்ள கன்னடர் , தெலுங்கர் மற்றும் மலையாளிகளை விளக்கி தமிழர்கள்ளுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டை அமுல் செய்ய ஒன்றும் செய்ய வில்லை இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசு வேலைகள் தமிழர் இல்லாத வர்களிடன் எப்படி போனது. போராட தமிழன் வேண்டும் ஆனால்
அனுபவிக்க அடுத்தவர் வேண்டும். இது போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பதை மனச்சாட்சி யோடு ஒப்பு கொள்ளுங்கள். வரட்டு பிடிவத்ததல் தமிழன் இழந்தது அதிகம். என்ன செயதார் மொழிவழி இடம் பிரித்த போது . காங்க்ரச்ச்கரன் செய்ததை குட அவர் செய்யவில்லை என்பதை நினய்து பாருங்கள். ராஜாஜி - சென்னை யும் , ம போ சி மற்றும் பலர் பல இடம்கள் . எங்கே பெரியார்?

Subavee Thaasan
2009-06-14 10:03:00
subaveethaasan@gmail.com

இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தின் கீழ் நிலையில், ஒதுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் அனைவரையும் மேலே கொண்டுவரும் செயல் தான்,அதற்காகத் தான் பெரியார் போராடினார்,அதனால் தான் அம்பேத்கார் மற்றும் பெரியார் அவர்களின் முயற்சியால் இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் அமல் படுத்தப்பட்டது.
அவரின் செயல் முடிந்துவடைந்து விட்டதாக நாம் கருதினால் அது நம்முடைய தவறு,வந்தாரை வாழ வைத்தே பழகிய,அனைத்தயும் மன்னித்தே மழுங்கிய தமிழனுக்கு மேலும் சூட்டையும்,சொரணையையும் தரும் பணியை பெரியாரின் வழி தொட்டு நாமும் தொடர வேண்டும்.
மேலும் மா நில சுயாட்சி மற்றும் தனித் தமிழ் நாடு கோரிக்கைகளுக்கு ஆரம்ப கட்ட வடிவம் கொடுத்து போராட்டத்தை முன்னெடுத்தவரே பெரியார் தான்.மொழி வாரி மா நிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது அதில் உள்ள பலர் இடர்பாடுகளுக்கு எதிராகப் போராடியவர் தான் பெரியார்,ஒன்றை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்,அவர் ஒரு சமுதாயப் போராளி,மக்களுக்கு பகுத்தறிவையும்,மனித நேயத்தையும் வளர்க்கப் பாடுபட்டவர்,எந்த வித ஆட்சி அதிகாரத்திலும் இல்லாதவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப் பட்ட பொழுது இந்தியாவே கலவரங்களில் மூழ்கிய பொழுது தமிழ் நாடு மட்டும் அமைதியாக இருந்ததே பெரியாரின் பணிக்கு சிறந்த உதாரணம்.

paruthi
2009-07-29 12:06:00
toparuthi@hotmail.com

I understand while baber masuthi demalished nothing happen in tamil nadu. Also understand because of THIRAVIDAN AND INDIAN concept while more than 1 lak people killed in srilanka nothing happen in tamilnadu. you can proud this also. See all the good feeling are killed and injucted THIRAVIDAN concept to blood, people now ready to accept anything for small amount money.Because of EDA ODUKIDU without through the non tamil people from list, all the govt higher posting non tamil people sitting and making decession to nothing good happen to tamilan. Can you give good judgement why TAMIZHAR KALAGAM changed to THIRAVIDAR KALAGAM except Periyar having feeling inside he is kanndian.

முகமது பாருக்
2009-07-31 12:12:00
kklife_27@yahoo.com

அய்யா பருத்தியாரே,

நீங்க உண்மையிலேயே பருத்தியா இல்ல பார்ப்பணப் ---- (மன்னிக்க) பருப்பா...முதலில் இந்த கட்டுரையை படியிங்கள்

http://mathimaran.wordpress.com/2009/07/30/article-223/

பிறகு தந்தை பெரியார் எம் மண்ணிற்கு என்ன செய்தார் என்று விவாதிக்கலாம்..இன்னக்கி கணினி உலகத்தில் நாம் கால் வைத்ததிற்கு முக்கிய காரணம் படிப்பு எல்லாருக்கும் படிப்பு, அதை பார்ப்பணர்கள் திட்டமிட்டே படிப்பை மட்டும் வஞ்சனையாகயோடு தடுத்தார்கள் தடியால் அடி பட்டார்கள் சில பேர் திருந்தி வருந்தினார்கள் பல பேர் தீரா வன்மம் கொண்டார்கள் உங்களைப் போல...

அது சரி பெரியார் என்ற பேரைக் கேட்டாலே உங்கள் கூடத்திற்கு ஏன் இவ்வளவு வெறுப்பு ஆத்திரம், ஏனெனில் உங்களை அடையாளமும் காட்டிவிட்டார் என்றுதானே பருத்தியாரே...

ஈழப் போரையும் விடுதலை புலிகளையும் குறிக்காமல் ஸ்ரீ லங்கா என்று நீங்கள் கூறும் போதே நீங்கள் யார் என்பது வெளிச்சமாக தெரிகிறதே...

உங்கள் கூட்டாளிகள் தானே (ஹிந்து ராம், தினமலம், துக்ளக் சோ, சுப்ரமணிய சாமி, ஜெயா மாமி, தினமணி மற்றும் நவீன பார்பனர்களான கருணாநிதி அய்யங்கார் குடும்பம்) எம் இன மக்களின் ரத்தத்தையும் போராட்டத்தையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றும் மக்களை பணயக் கைதியாக வைத்துள்ளார்கள் என்று வாய் கூசாமல் எம் மொழியிலும் ஆங்கிலத்திலும் எழுதி எழுதி சுகம் கண்டீர் ஈன பிறவிகளே.. !!!!

தந்தை பெரியாயரை குறித்து அவதூறு சொல்வதற்கு முன்னால் அவரை பற்றி படியுங்கள் முதலில்.. தமிழர்களின் (திராவிடர்களின்) சம கால வளர்ச்சி மற்றும் எழுச்சி என்பது அவரிலிருந்தே தோன்றியது.
தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன்)



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP