Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
விக்ரமன் இயக்கத்தில் விஜயகாந்த்

Vijayakanth ‘வானத்தைப்போல’ படத்திற்குப் பிறகு விக்ரமன் இயக்கத்தில் ‘மரியாதை’ என்ற படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார்.

இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். இதில் விஜயகாந்துக்கு இரட்டை வேடங்கள். தந்தை விஜயகாந்துக்கு ஜோடியாக மீனா, மகனுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மினும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டபின்பு, தான் எடுக்கவிருந்த ‘விருதகிரி’ படத்தை ஒத்திவைத்துவிட்டு, விஜயகாந்த் உடனடியாக இப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்தாராம்.

இதனால் புளகாங்கிதமடைந்த இயக்குநர் விக்ரமன், “வானத்தைப் போல படத்திலேயே விஜயகாந்துக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணமாக அந்த விருது தவறிவிட்டது. ஆனால் ‘மரியாதை' படத்தில் நிச்சயம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும். விஜயகாந்த் படங்களில் ‘மரியாதை’ படம் ஒரு மைல்கல்லாக விளங்கும்” என்று அள்ளி விடுகிறார்.

விக்ரமன், உங்களுக்கே இது ஓவராத் தெரியலை?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.