Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
‘ஏகன்’ தோல்வியால் குழப்பத்தில் அஜித்

ajith பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஏகன்’ படம் பெரும் தோல்வியையைச் சந்தித்ததையடுத்து அடுத்து யார் படத்தில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் அஜித்.

மூன்று வருடத்திற்கு ஒரு ஹிட் படம் கொடுப்பவர் அஜித். கடைசியாக அவர் கொடுத்த ஹிட் கொடுத்த படம் ‘பில்லா’. அதே போன்று பில்டப் செய்து வெளிவந்த ‘ஏகன்’ படம் ஊத்தி மூடிக் கொண்டது. இந்தப் படத்தையடுத்து கௌதம்மேனன் இயக்கத்தில் நடிப்பதாக பேச்சு இருந்தது.

கௌதமின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த ‘வாரணம் ஆயிரம்’ படம் நல்ல படம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியாக பெரிய வெற்றியை அந்தப் படம் ஈட்டவில்லை. இது அஜித்தின் குழப்பத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. ‘வாரணம் ஆயிரம்’ வியாபார வசூலைப் பற்றி அதிகம் கவலைப்படாமல், ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்தை இயக்கப் போய்விட்டார் கௌதம்.

இதனையடுத்து அஜித்தின் அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குவது என்று யோசனையில் படத்தை தயாரிக்கவிருக்கும் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனத்தாரும், அஜித்தும் இருக்கிறார்கள். பெரும்பாலும் அந்த துரதிருஷ்டம் ‘பில்லா’ இயக்குநர் விஷ்ணுவர்தனையே தாக்கும் என்று கோலிவுட்டில் கூறுகிறார்கள். பின்னே, அடுத்த இரண்டு வருடங்களுக்கு அஜித்தை வைத்து படம் எடுத்து பிளாப் கொடுக்கப்போகும் இயக்குநர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகிறது?

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.