Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
மீண்டும் ராமராஜன்

Ramarajan ‘கரகாட்டக்காரன்’ புகழ் ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மேதை’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் ஹரியின் உதவியாளர் என்.டி.ஜி.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தில் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சார்லி, மகாதேவன், ஆர்யன், ஹரிராஜன், அஜெய், ஹாசினி, சோனாநாயர், கே.நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. படம் குறித்து ராமராஜன் கூறுகையில்,

"இது என்னுடைய 44வது படமாகும். படத்தின் கதை ரொம்பவும் வித்தியாசமானது. நகரப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. வடிவேலுவின் காமெடியும் தினாவின் இசையும் படத்தில் குறிப்பிடும்படி இருக்கும். ‘மேதை' - திரையுலகில் என்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்க நிச்சயம் உதவி செய்யும்” என்று அடித்துக் கூறுகிறார்.

பாவம், அவரும் எத்தனை நாள்தான் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பாரு!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.