Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
திரைக்கு வரும் பொம்மலாட்டம்

Arjun and Nana patekar பாரதிராஜா இயக்கி வரும் பொம்மலாட்டம் படம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

இயக்குனர் பாரதிராஜா இயக்கி கடைசியாக வந்த படம் ‘கண்களால் கைது செய்’. இது 2004 ல் வெளிவந்தது. அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொம்மலாட்டம் படம் வெளிவர இருக்கிறது. இதில் நானாபடேகர், அர்ஜூன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் இந்தப் படம் தமிழிலும், இந்தியிலும் வெளிவர உள்ளது.

பாரதிராஜாவின் கடைசிப் படங்கள் பெரும் தோல்வி பெற்ற நிலையில் இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என நம்பிக்கையோடு கூறுகிறார் அவர். ஏற்கனவே பாரதிராஜா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள், டிக்டிக் படங்களை போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாம் இது. சினிமாவை கதைக்களமாக கொண்டு இயக்கியிருக்கிறார் பாரதிராஜா. தனது திரைப்பட வாழ்க்கயில் நிஜ அனுபவங்களை கொண்டு அவர் இயக்கிய இரண்டு படங்களில் பொம்மலாட்டமும் ஒன்றாம். மற்றொன்று மண்வாசனை. பொம்மலாட்டத்தின் நிஜக் கதாபாத்திரங்கள் தற்போது ஹம்பியில் வாழ்ந்து வருகின்றனராம்.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Unable to connect to database! Please try again later.