KeetruCinemaNews
அஜீத்தின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

Ajit நெஞ்சம் மறப்பதில்லை ரீமேக் படத்தில் நடிக்க ஆர்வம் இருப்பதாக அஜீத் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடித்த பில்லா ரீமேக் படம் பெரிய வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தீபாவளி ரீலீஸாக வெளிவந்த ஏகன் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குள்ளேயே தியேட்டர்களில் கூட்டத்தைக் காணவில்லையாம். இதனால் தனக்கும் ரீமேக் படங்களுக்கும் தான் ராசி என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அஜீத்.

அதன்படி இயக்குனர் ஸ்ரீதர் படங்களில் ஒன்றை ரீமேக் பண்ணும் முடிவில் இருக்கிறாராம். அதிலும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்தால் தன்னுடைய தோற்றத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்றும் முடிவு செய்துள்ளாராம்.

விரைவில் நெஞ்சம் மறப்பதில்லை ரீமேக்கில் அஜீத்தை பார்க்கலாம்.