Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
சரணின் ‘ஆரண்ய காண்டம்’

S.P.Saran's film எஸ்.பி.பி. சரண் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கிறார். இதில் ஒரு படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் முதன் முதலாக தமிழில் அறிமுகமாகிறார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பி.சரண் படத்தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர் தயாரித்த சென்னை-28 படம் பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு சரோஜா படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் படத்தயாரிப்பை கொஞ்ச நாட்களுக்குத் தள்ளி வைத்திருந்தார். இப்போது ‘குங்குமப்பூவே கொஞ்சும்புறாவே’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் எஸ்.பி.பி.சரண்.

படத்தின் பெயர் ‘ஆரண்ய காண்டம்’. இந்தப் படத்தின் மூலம் ஜாக்கி ஷெரப் முதன்முதலில் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப் படத்தை தியாகராஜன் குமாரராஜா என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பல விளம்பரப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Unable to connect to database! Please try again later.