Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
சரத்துடன் ஜோடி சேரும் ரம்யா

Ramya காக்கி’ என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக ‘குத்து’ ரம்யா நடிக்கிறார்.

‘அபி' என்ற கன்னட படம் மூலமாக சினிமா உலகில் எண்ட்ரி ஆனவர் ரம்யா. இந்தப் படத்தில் ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார் தான் ஹீரோ. படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இதையடுத்து ரம்யா நடிப்பில் வெளிவந்த ‘எக்ஸ்க்யூஸ்மி' என்ற படமும் கன்னடத்தில் 200 நாட்களைக் கடந்தது.

அப்போதுதான் தமிழில் ‘குத்து' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக வாய்ப்பு வந்தது. ‘குத்து' படத்தையடுத்து அர்ஜுனுடன் ‘கிரி'யில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஹிட் இல்லை என்றாலும் தோல்விப் படங்கள் இல்லை. இருப்பினும் ரம்யாவிற்கு தமிழில் வாய்ப்புகள் ஏதும் அடுத்தடுத்து வரவில்லை.

மீண்டும் கன்னடப் பக்கமே போய்விட்டார். அண்மையில் அமிதாப்பச்சன், ரம்யா நடிப்பில் ‘அமிர்ததாரே' என்ற கன்னடப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படமும் ஹிட் என்று செய்திகள் வருகின்றன. இந் நிலையில்தான் ‘காக்கி’ படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ரம்யாவிற்கு வந்தது. உடனே ஒத்துக் கொண்டு சென்னை வந்துவிட்டார்.

“தமிழில் நடிப்பது என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். ஏனென்றால் நான் படித்தது எல்லாம் சென்னையில்தான்.

நல்ல கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். அரை நிர்வாண காட்சிகளிலும், இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடிப்பதிலும் எனக்கு விருப்பமில்லை.

கதை, அதில் எனக்கு என்ன ரோல், சம்பளம் இதெல்லாம் தெரிந்து கொண்ட பின்புதான் நடிக்க ஒத்துக் கொள்வேன். ‘7 ஜி, ரெயின்போ காலனி', ‘கில்லி', ‘காதல்', ‘ஆட்டோகிராஃப்' போன்ற படங்களில் நடிக்கப் பிடிக்கும்.

சரத்குமாருடன் ‘ஐயா'வில் நடிக்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியாமல் போயிற்று. இப்போது அந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன் என்கிறார் ரம்யா.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com