Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
மலையாளக் கரையில் நமீதா

தமிழில் தூள் பறத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் மலையாள ரசிகர்களையும் ஒரு கை பார்ப்பது என்ற முடிவுடன் மலையாளப் படம் ஒன்றில் நமீதா நடிக்கிறார்.

Namitha and Ramesh தயாரிப்பாளர்களுக்கு துணிக்கடை பக்கம் போகும் வேலையை வெகுவாகக் குறைத்தவர் நமீதா. இந்த ஒரு காரணத்துக்காகவே இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. முதல் ரவுண்டில் விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் ஆகியோருடன் ஜோடி சேர்ந்தவர் இப்போது சிபிராஜ், ‘ஜித்தன்’ ரமேஷ் ஆகியோருடன் நடித்து வருகிறார்.

பாக்யராஜின் சீடர் எல்.வெங்கடேஷ் இயக்கும் ‘நீ வேணுன்டா செல்லம்’ என்ற படத்தில்தான் ரமேசுடன் நமீதா நடிக்கிறார். இப்படத்தில் கஜாலாவும் இருக்கிறார். கஜாலா கதாநாயகியாகவும் நமீதா கவர்ச்சி ஊறுகாயாகவும் நடிக்கிறார்கள். (பின்னே நமீதா இருக்கிறா சைசுக்கு ரமேசுக்கு ஜோடியாக நடிக்க முடியுமா?)

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுக்கவிருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளை லண்டனில் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட வேளையில் மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க நமீதாவுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. தமிழில் தரும் அதே பேமெண்ட் தருவதாகக் கூறியதும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டார் நமீதா. அவருக்கென்ன எந்த மொழிக்குப் போனாலும் நடிக்கவா போகிறார், மொழி பற்றிக் கவலைப்படுவதற்கு.

இந்தப் படத்தின் பெயர், `பஸ் கண்டக்டர்'. மலபாரில் உள்ள தனியார் பஸ்சில் கண்டக்டராக மம்முட்டி வருகிறார். இந்தப் பின்னணியில் ஒரு குடும்பக் கதையாக இப்படம் உருவாகி வருகிறது.

ஆமாம், குடும்பப் படத்தில் நமீதாவுக்கு என்ன வேலை? சேட்டன்களுக்கே வெளிச்சம்!




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com