Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruCinemaNews
ஆந்திராவுக்குப் போகும் ஜோ படங்கள்

Jyothika சந்திரமுகி படம் ஆந்திராவில் சக்கைப் போடு போட்டதைத் தொடர்ந்து ஜோதிகா நடித்து வெளியான தமிழ்ப் படங்கள் எல்லாம் ட்ப்பிங் செய்யப்பட்டு ஹைதராபாத் பக்கம் போகின்றன.

சந்திரமுகி வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆனவர் சிம்ரன்தான். ஆனால் அவருக்கு குழந்தை உண்டாகி விட, படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து ஜோவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நடிப்பதற்கு ஸ்கோப் அதிகம் இருந்ததால் ஜோ சந்திரமுகியாக பிய்த்து உதறினார்.

படம் தமிழில் சூப்பர் ஹிட். தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட். முட்டைக் கண்களை உருட்டி, ‘ரா.. ரா..’ என்று ஜோ நடித்தது தெலுங்கு ரசிகர்களிடம் பெரிய கிரேஸை உருவாக்கி விட்டது. இதைப் பயன்படுத்தி அவரது படங்களை எல்லாம் தெலுங்கில் டப் செய்யவிருக்கிறார்கள்.

முதலாவதாக ஷாம், ஜோதிகா, சிம்ரன் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்த ‘12-பி' படம் `டப்' ஆகி ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ராமாநாயுடு வெளியிட்டு இருக்கிறார்.

இந்த படம் வெற்றி பெற்றால், ஜோதிகா நடித்த பழைய படங்கள் அனைத்தையும் வரிசையாக `டப்' செய்ய ராமாநாயுடு திட்டமிட்டு இருக்கிறார்.

தமிழில் ஜில்லுனு ஒரு காதல், ஜூன் R, சரவணன் ஆகிய படங்களில் ஜோதிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com