Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
ரஹ்மான் இசைப்பள்ளி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளி ஒன்றைத் தொடங்குகிறார். இது சர்வதேச தரத்தில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது,

இசைக்கலைஞர்களை தொழில்முறையில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சியை அளிப்பதே இந்த இசைப்பள்ளியின் நோக்கம். இதில் இசைத் தொழில்நுட்பம், குரல், தந்திக்கருவிகள் மற்றும் கீ போர்டுகள் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இசை இளங்கலைப் பட்டம், தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் ஆகியவற்றை வழங்குவதற்கு சென்னை பல்கலைக்கழகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த இசைப்பள்ளி அடுத்த ஆண்டு சென்னையின் புறநகர்ப் பகுதியின் மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்படும். இதில் உலகத் தரத்திலான வகுப்பறைகள், இசை அரங்குகள், ஒலிப்பதிவு அரங்குகள், தங்கும் விடுதிகள் அமைய உள்ளன. இவை அனைத்தும் சர்வதேச தரத்தில் இருக்கும். இதை ஒரு தொழிலாக அல்லாமல் வாழ்நாள் சேவையாக கருதுகிறேன் என்றார் ரஹ்மான்.


Unable to connect to database! Please try again later.