Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
KeetruCinemaNews
வணிக சினிமா என் நோக்கமல்ல - பிரகாஷ்ராஜ்

வணிக சினிமா எடுத்து அதன் மூலம் லாபம் சம்பாதிப்பது என்னுடைய நோக்கமல்ல என்று நடிகரும் தயாரிப்பாளருமான பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

தற்போது ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளித்திரை படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எந்த ஒரு சினிமாவின் வெற்றிக்கும் அதன் இயக்குனர் தான் காரணம். சினிமாவை ஓவியம் என்று எடுத்துக் கொண்டால் அதில் உள்ள வர்ணங்கள் தான் நடிகர்கள். அந்த வர்ணங்களை ஓவியமாகத் தீட்டும் ஓவியன் போன்றவர்தான் இயக்குனர்.

இந்தச் செய்தியைத் தான் வெள்ளித்திரையில் சொல்லியிருக்கிறோம். படம் வணிக நோக்கில் வெற்றி பெறுமா என்று யோசித்து நான் படம் எடுப்பதில்லை. அந்தப் படத்தின் கதை சிறந்ததாகவும், எனக்கு ஆத்ம திருப்தி தருவதாகவும் இருக்க வேண்டும். லாபம் சம்பாதிப்பது என்னுடைய நோக்கமல்ல. இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.


Unable to connect to database! Please try again later.